திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 29
பாடல் – 29 பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (இ-ள்.) பெண் – ஒரு பெண், விழைந்து – விரும்பி, பின் செலினும் – பின் சென்றாலும், தன் செலவில் – தன்னடக்கையில், குன்றாமை – குறையாமையும்; கண் விழைந்து – (தன்) இடந்தேடி, கை உறினும் – வந்து கைப்பட்டாலும், பொருட்கு – Read more
