பாம்புக்கு பால், முட்டை எதற்காக?

ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து Read more

கிளியோபாட்ரா

பேரழகியென கருதப்பட்ட கிளியோபாட்ரா: எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரர்களை திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு Read more

கற்றல் வனப்பு

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு. என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கல்விக்கு நிகராகக் கல்வியைத்தான் கூறமுடியும். இக்கல்வி தமது பிள்ளைகளுக்கு வாய்க்கப் பெறுவதற்குப் பெற்றோர் தம்மாலான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். கற்பதற்கான வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள். கற்றல் என்பது எல்லோராலும் முடியும்.  படித்தவிடயங்களை Read more

இந்துக்களின் சொர்க பூமி!

பாலி (இந்தோனேசியா) உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் இந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) எனும் கடைசி இந்து மன்னரை வீழ்த்திய பிறகு இந்து மதத்தை விட்டு மாறாமல் Read more

நாவலந்தேயம்

நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு – எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். Read more

கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…

சக்திவேல் குணசேகரன் பள்ளியறையில் மட்டுமல்ல‌ சமையலறையிலும் அவளுக்குத் துணை கொடு. மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு மற்றைய நாளெல்லாம் சேயாகு. அவள் ஆடைகளை சலவை செய்வது அவமானம் அல்ல. நீ வழங்கும் சம தானம். இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு. இயலாத நிலையிலே அவள் இருந்திடக் கண்டாலே உறவுதனைத் தவிர்த்திடு. உப்பு கறிக்கு கூடினாலும் தப்பு சொல்லி ஏசாதே. உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும் அதையும் ருசிக்க Read more

தேநீர் குடிக்கலாம்

ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு! நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்… ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள். மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும்,  இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப் படுத்தியது. இந்த நேரத்தில், யாராவது ஒரு ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு Read more

என்னங்க … ?

கணவனை பார்த்து”என்னங்க” என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும். பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’ என்று மனைவி அழைத்தால், “பல்லி அடிக்க கூப்புடுறா”னு அர்த்தம். வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம். கல்யாண வீட்டில் ‘என்னங்க’ என்று சத்தம் கேட்டால் Read more

நல்லதங்காள் வரலாறு

நல்லதம்பி, நல்லதங்காள் அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த Read more

குளியல் !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..! சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….? குளியல் = குளிர்வித்தல் குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் Read more