புதுக் கவிதை
பாரியன்பன் கவிதைகள்
விழி கொண்டு மலரும் காதல் மொழி கொண்டு நகரும் கவிதை. மறந்திடாமல் சொல்ல நினைத்த கவிதையொன்று தொலைந்து போனது. இமைகளின் அனுமதியின்றி உறக்கம் தழுவுவதில்லை விழிகளை. கிளையைப் பிரிந்த சருகு சில கணங்கள் நீந்திப் பழகுகிறது காற்றில். வீட்டில் வளர்ப்பு நாய் எச்சிலிலையில் ஏதுமில்லை பாவம் தெருநாய். நிறைவுற்றது பயணம் வழக்கம் போல் வீதியில் விட்டுவிட்டாய் பிரியமின்றி தவிக்கிறேன். இருட்டிலிருக்கிறேன் உற்றுப்பார் நிழலாய் தெரியலாம் நான். சுடறேற்ற பயம் போயிருக்கும். Read more
