கிடைத்த ஐம்பது உரூபா
நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம் —-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம் விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது —-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை ! கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு —-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு —-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் ! இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ —-இருநண்பர் அருகினிலே வந்து சேர்ந்தார் கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு —-கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே Read more


