பாலமுனை பாறூக் குறும்பாக்கள்

ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார். அடுத்தடுத்து வெளிவந்த அவரது குறுங்காவியங்கள்தாம் அந்த ஈர்ப்புக்குக் காரணம் கொந்தளிப்பு (2010), தோட்டுப்பாய்மூத்தம்மா (2011), எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு (2011) ஆகிய மூன்று குறூங்காவியங்களை வசன கவிதையில் புதிய பொருண்மைகளைக் கருக்கொண்டு விறுவிறுப்பான வீச்சுடன் படைத்து Read more

உடையாத நீர்க்குமிழி

படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே —– பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும் —– அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக் —– கல்லெனினும் புல்லெனினும் கணவன் என்றே படிப்பின்றி இருந்தநிலை மாறிப் போகப் —– பட்டத்தால் பகுத்தறிவு பெற்றா லின்று ! எண்ணத்தில் வலிமையின்றி இருந்த பெண்ணோ —– எழுச்சிப்பா பாரதியின் புதுமைப் பெண்ணாய்க் கண்ணீரைச் சிந்திமூலை அமர்ந்தி ருந்த Read more

அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி

Grund Schule Klauberg in Solingen Germany, Solingen  இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது. நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை. எனது பெயர் அன்றும் இன்றும் கிளௌபேர்க் (Klauberg) ஆகும். என்னை இப்போது பார்க்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது. Read more

வீழாதே தோழா

புத்தக மதிப்புரை நூலின் பெயர் : வீழாதே தோழா பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள் நூலாசிரியர் : மனோபாரதி, manobharathigr@gmail.com www.facebook.com/manobharathigr கைப்பேசி : +91 8903476567   என் உயிர்க்கினிய தம்பி மனோபாரதி, துடித்தெழும் புலியாக வெடித்தெழும் நெருப்பாக கருத்து வித்துகளை விதைத்திருக்கிறான்! இது முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்! எதுகை மோனை ஏர்பூட்டி நடக்க, நன்செய் வயலில் நாற்று நடமாடுவதாய் வளமான கவிதைகளைப் படைத்திருக்கிறான்! தடைகளைத் Read more