மின்னிதழ் / நேர்காணல்

ரேணுகா குணசேகரன், ‘க்ளோவர் தாட்ஸ்’ என்கிற புத்தகங்களுக்கான ஆலோசனை, எழுத்து, மொழிபெயர்ப்பு, பதிப்பு ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள ரோட்டரி சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இந்திய மகளிர் வர்த்தகம் மற்றும் தொழிற்சபையின் ஒரு பிரிவான, தமிழ்நாடு பதிப்பகத் துறையின் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய தொழில் மற்றும் சமூக சேவை குறித்த அனுபவங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொள்கிறார்.

நேர்காணல் : தமிழ்நெஞ்சம்

பர்மிங்காம் மகளிர் மாநாட்டில்
பிப்ரவரி 2022 நூறு பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
காதலர் தினத்தை முன்னிட்டு காதல் கவித்துளிகள் காதலர்களுக்காக 100 கவிஞர்களின் கவிதைகளை நூலாகத் தந்திருக்கிறோம் அதையும் தரவிறக்கம் (download) செய்து படிக்கவும்

எழுத்துத் துறையை முழு நேர தொழிலாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, இதற்கான ஆர்வம் சிறு வயதிலேயே இருந்ததா?

சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் மீது ஆர்வம் இருந்தது, மொழிகளின் மீது பிரமிப்பு இருந்தது, ஆனால் எனக்கு எழுத வருமா? இதை வைத்து ஒரு தொழிலை உண்டாக்கிக்கொள்ள முடியுமா? என்ற புரிதல் இருந்ததில்லை. 1980 களில் பிறந்தவர்களுக்கு தெரிந்தது இரண்டே படிப்பு தான் – பொறியியல் அல்லது மருத்துவம். மென்பொருள் தான் அப்போதைய ட்ரெண்ட். தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் பெற்றேன். பிறகு வேலை பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளில், சுய தொழில் எண்ணம் என்னுள் வந்தது. பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னும் இருக்கும் தொழில் என்ன, இதற்கான முதலீடு என்ன, வருமானம் என்ன, லாபம் என்ன என்று கணக்குப் போட ஆரம்பிப்பேன். நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தேன். பிறகு வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றேன். என் மகள் பிறந்த போது ஏழு வருட மென்பொருள் பொறியாளர் பணியை விடவேண்டிய சூழல் வந்தது. அதற்கு பிறகு, கிடைக்கும் நேரங்களில் ஏதாவது எழுத ஆரம்பித்தேன். பிறகு கதை, கட்டுரை என பத்திரிக்கைகளில் பிரசுரமானது. 2012 இல் ஆரம்பித்தது இந்த எழுத்துப் பயணம். சில ஆண்டுகள் டெல்லியைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பதிப்பகத்துடன் வியாபார ஒப்பந்தத்தில் இருந்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முடிவடையப்போகிறது. ஆமை போல நகர்ந்தாலும், நிலையான தொழிலாக மாறியிருக்கிறது.

நீங்கள் எழுதிய புத்தகங்கள் குறித்து சொல்லுங்கள்.

நான் எனக்காகவும் எழுதுகிறேன். பிறருக்காகவும் எழுதுகிறேன். அரசியல் தொடங்கி ஆன்மிகம் வரை பல தரப்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன். ‘‘Its Gonna Be Fine’’ என்ற ஆங்கில சிறுகதை தொகுப்பு, ‘‘இலக்கை நோக்கி’’என்கிற மாணவர்களுக்கான கட்டுரை தொகுப்பு, ‘‘யோகினி’’ என்கிற பெண் சித்தர்கள் குறித்த கட்டுரை தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ‘‘அமளி’’ என்கிற சிறுகதை தொகுப்பும், «பத்ரகாளி» என்கிற நாவலும் கிட்டத்தட்ட தயார். கூடிய விரைவில் வெளியாகும்.

உங்களுடைய ஆங்கில சிறுகதை தொகுப்பு, இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்புத்தகம் குறித்து சொல்லுங்கள்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். என்ன முடிவெடுப்பது, எந்த பாதையை தேர்ந்தெடுப்பது, தொடர்ந்து முயல்வதா அல்லது விட்டுவிட வேண்டுமா என்ற பல குழப்பங்கள் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் நாம் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். பெரும்பாலான நேரங்களில் அது உறவாகவோ நட்பாகவோ இருக்கலாம். ஆனால் அந்நேரத்தில் அந்த தோள் கிடைப்பது தான் கடினம். நமக்கு மட்டுமே தேவைப்படாது, பிறருக்கும் அந்த தோள் தேவைப்படும். சாய்ந்துக்கொள்ளும் தோளாக நாமும் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், இது போன்ற நேரங்களில் எப்படி சிந்திக்கிறார்கள், எப்படி கடந்து வருகிறார்கள் என்கிற கோணத்தில் பத்து சிறுகதைகளின் தொகுப்பாக ‘‘Its Gonna Be Fine’’ அமைந்திருக்கிறது. இரண்டு மணி நேர பயணத்தில் இந்த மெல்லிய புத்தகத்தைப் படித்துவிட முடியும். அல்லது ஒரு திரைப்படம் பார்க்கும் நேரம் தான் இதற்கு தேவையான நேரம். பிரபல நடிகை அனு ஹாசன் இதற்கு முன்னுரை போன்ற விமர்சனம் எழுதித் தந்தார். பெண்கள் பலரிடமிருந்தும் மின்னஞ்சல் வரும். இந்த கதைகளும் அதன் முடிவும் வாழ்க்கையில் எப்படி தங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது என்று எழுதுவார்கள். அதை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

புதுச்சேரி முதலமைச்சர் திரு.ந.ரங்கசாமியுடன் - ரோட்டரி சங்கம் சார்பாக மரியாதை நிமித்த சந்திப்பு
ஆலப்பாக்கம் துவக்கப்பள்ளி - போர்ட் ரோட்டரி டிஜிட்டல் லிட்டரசி - இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்

‘‘யங் இன்னொவேட்டர்’’, ‘‘ஐடல் ஆஃப் சேன்ஜ்’’ போன்ற விருதுகளை பெற்றிருக்கிறீர்கள். அது குறித்து சொல்லுங்கள்.

‘‘வுமன் எகனாமிக் ஃபோரம்’’ என்ற அமைப்பின் சார்பாக, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரத்தில் பெண்களுக்கான மாநாடு நடந்தது. தங்களுடைய தொழில் துறையில் சிறந்து விளங்கும், புது முயற்சிகளை சிந்தித்து செயல்படுத்தும் பெண்களுக்கு யங் இன்னொவேட்டர் விருதுகள் வழங்கப்பட்டது. அதில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் தொழில் குறித்து உரை நிகழ்த்தினோம். நல்ல பயனுள்ள அனுபவமாக இருந்தது. ரோட்டாரியின் டீம் வுமன் எம்பவர்மெண்ட் சார்பாக ஐடல் ஆஃப் சேன்ஜ் விருது ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தில் வழங்கப்படுகிறது. தொழில் மட்டுமின்றி, சமூக சேவைக்காகவும், சமூகத்தில் மாற்றம் கொண்டுவரும் ஒரு சக்தியாக இருப்பதற்கான அங்கீகாரம் அது. விருதுகள் மகிழ்ச்சியை தருவதோடு, தொடர்ந்து நம் கடமையை பொறுப்புடன் செயலாற்ற உந்து சக்தியாக அமைகிறது. நம் பாதையை செம்மைப்படுத்திக்கொள்ள ஊக்கமளிக்கிறது.

ரோட்டரி சங்கத்தின் தலைவராக நீங்கள் செய்யும் சமூகப் பணி குறித்து சொல்லுங்கள்.

சமூக மேம்பாட்டில், சேவையில் சுழற்சங்கத்தின் பங்கு அபாரமானது. ‘‘ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ரினைசான்ஸ்’’ என்கிற சங்கத்தின் தற்போதைய தலைவராக இருப்பதில் நிச்சயம் பெருமிதம். என்னுடைய தலைமையில், கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மரம் நடுதல், அரசாங்க பள்ளிகளுக்கு ஃபோர்ட் நிறுவனம் மூலமாக கணினிகளை வழங்கியுள்ளோம், மகப்பேறு காலத்திலும் சமீபத்தில் தாயான மகளிருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு மற்றும் சத்து நிறைந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை வழங்கினோம். ‘‘பெதும்பை’’ என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம், சமூக விழிப்புணர்வு முகாம்களை மேற்கொண்டுள்ளோம், மாணவர்களின் கல்விக்கு நிதி உதவுகிறோம். போலியோ குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினோம். சிறந்த பேச்சாளர்கள் அழைத்து நிகழ்வுகளை நடத்துகிறோம். ‘‘பார்க் இந்தியா’’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். அவர்கள் தெரு நாய்களின் உணவு மற்றும் மருத்துவ தேவைகளை பார்த்துக்கொள்ளும் உன்னத சேவையை செய்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.

கடந்த நவராத்திரியின் போது, ஒன்பது வெவ்வேறு துறையைச் சேர்ந்த மகளிருக்கு விருது வழங்கினோம். சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் S.ராஜேஸ்வரி IPS, MOP வைஷ்ணவ் கல்லூரியின் முதல்வர் டாக்டர். லலிதா பாலகிருஷ்ணன், போன்ற புகழ்பெற்ற சாதனை மகளிருக்கு ‘‘Vocational Excellence Award’’ என்கிற விருதை வழங்கினோம். இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற முடிவுசெய்துள்ளோம்.

வீடு, நிறுவனம், ரோட்டரி போன்ற பல்வேறு விஷயங்களை தினசரி கையாள் வதற்கு நேரம் போதுமானதாக இருக்கிறதா?

ஆரம்பத்தில் சற்று கடினமாகத்தான் இருந்தது, ஆனால் இப்போது போகப்போக பழகிக்கொண்டேன். உண்மையை சொன் னால் அலுவலகப் பணியை விட, வீடும் குடும்பம் சார்ந்த விஷயமும் தான் நிறைய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. என்னை சுற்றியிருக்கும் தோழிகள் பலர் இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். அவர்களுடன் என்னை ஒப்பிட்டுக் கொள்வேன். அவர்கள் அளவுக்கு நான் உழைக்கின்றேனா என்று யோசித்துப் பார்த்தால், இல்லை இன்னும் கூட வேலைகளை எடுத்துக்கொள்ளலாமே என்று தோன்றும். செய்வதற்கு வேலையே இல்லாமல் வெட்டியாக இருப்பதை விட, உட்கார நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது தான் எனக்குப் பிடிக்கும். «An idle mind is a devil’s workshop» என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆகையால் முடிந்த வரை என்னை ஏதோ ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக்கொள்வேன். தினமும் செய்ய வேண்டிய வேலையை பட்டியலிட்டுக்கொள்வேன். ஒரு வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டால், சிறிதாக இடைவெளி எடுத்துக்கொண்டு, வேலைக்கு தொடர்பில்லாத ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவேன். அது திரைப்படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, இசை கேட்பது, என்பது போல் இருக்கும். பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். வெவ்வேறு ஊர்களையும் அங்கிருக்கும் மக்களையும், அவர்களது வாழ்வியல், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை ரசிக்கப் பிடிக்கும். இது அனைத்தையும் விட அமைதி மிகவும் பிடிக்கும். எங்கோ இயற்கையுடன் அமைதியாக ஒன்றிவிட பிடிக்கும். 24 மணி நேரம் தாராளமாகப் போதும்.

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் s.ராஜேஸ்வரி அவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக மகளிர் சாதனையாளர் விருது வழங்கியது

உங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன?

வாழ்க்கையில் எவரும் எதுவும் நிரந்தரமல்ல என்ற புரிதல் வந்த பிறகு, இலக்குகள் பெரிதாக வைத்துக் கொள்ள வதில்லை. அதே நேரத்தில், எனக்கு வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கமாட்டேன். எடுத்துக்கொண்ட பொறுப்பை நிறைவாக செய்து முடித்துவிடுவேன். அதுவே ஒரு தொடர் சங்கிலிப் போல் நம்மை போகவேண்டிய பாதைக்கு இழுத்துச் சென்று விடும். தனக்கும் பிறருக்கும் பயனுள்ள ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் ஒரே இலக்கு.

பெண்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த துறைகளில் தான் உங்கள் ஈடுபாடு அதிகம் தெரிகிறது. அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ஆமாம். பிரபல நாளிதழில் பல வருடங்கள் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தேன். பெண் சாதனையாளர்கள் பலரின் நேர்காணல்கள் கொண்டுவந்துள்ளேன். மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதி யிருக்கிறேன். அனுராதா ரமணன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் எழுதிய பத்திகளை எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் கிடைத்த அனுபவம் ஏராளம். ஆனாலும் அதை வைத்துக்கொண்டு அறிவுரை கூற முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கை வேறு சூழல் வேறு. நான் சொல்லும் அறிவுரை பிறருக்கு சரியானதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் பொதுவாக சில விஷயங்கள் சொல்லலாம். பெண்கள் தங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும், எப்போதும் தங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது. குடும்பம் மட்டுமே உலகமாக இல்லாமல் தங்களுக்கான நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இன்றைய மாணவர்கள் அபார திறமைசாலிகள். அவர்களுக்கு இருக்கும் அறிவும் திறனும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கான கவனச்சிதறல்களும் ஏராளம். சுலபமாக வழித்தவறி போக முடியும். முக்கியமான காலகட்டங்களில் சிறிது கவனத்துடன், புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டால் வாழ்க்கை பிரமாண்டமாக அமையும்.


2 Comments

Raju Arockiasamy · பிப்ரவரி 4, 2022 at 14 h 45 min

“ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். என்ன முடிவெடுப்பது, எந்த பாதையை தேர்ந்தெடுப்பது, தொடர்ந்து முயல்வதா அல்லது விட்டுவிட வேண்டுமா என்ற பல குழப்பங்கள் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் நாம் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். பெரும்பாலான நேரங்களில் அது உறவாகவோ நட்பாகவோ இருக்கலாம். ஆனால் அந்நேரத்தில் அந்த தோள் கிடைப்பது தான் கடினம். நமக்கு மட்டுமே தேவைப்படாது, பிறருக்கும் அந்த தோள் தேவைப்படும். சாய்ந்துக்கொள்ளும் தோளாக நாமும் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், இது போன்ற நேரங்களில் எப்படி சிந்திக்கிறார்கள், எப்படி கடந்து வருகிறார்கள் என்கிற கோணத்தில் பத்து சிறுகதைகளின் தொகுப்பாக ‘‘Its Gonna Be Fine’’ அமைந்திருக்கிறது’

அனுபவ வார்த்தைகள்… அற்புதமாய் ஆளுமை வெளிப்பட்டுள்ளது… சிறப்பு வாழ்த்துகள் !

அ.முத்துவிஜயன் · மார்ச் 1, 2022 at 1 h 38 min

இலக்கிய ஆளுமை இனிய படைப்பாளி ரேணுகாகுணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »