மின்னிதழ் / நேர்காணல்
நேர்கண்டவர் : பொன்மணிதாசன்
வணக்கம். தாங்கள் இன்று பேசப்படும் பெண்கவிஞர்களில் ஒருவராகத் திகழுகிறீர்கள். அத்தகையப் புகழுக்கு காரணமாகத் திகழுவது கவிதைதான் என்பதில் சந்தேகமில்லை.அத்தகையக் கவிதைகளை எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்குவது எது?
கவிஞர்களில் ஆண் பெண் என்ற இருபாலினத்தவரும் கவிஞர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு பெண் தன்னுடைய குடும்பச் சூழல், சமூகத்தின் பல்வேறு விதமான அழுத்தங்கள் போன்றவற்றைக் கடந்து தனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதே என்பது சவாலான ஒன்று.. அப்படி என் விருப்பத்தின் பேரில், பல வாழ்வியல் சிக்கல்களைக் கடந்து கவிதைகள் எழுதி வருகிறேன். கவிதை எழுதுவது என் ஆத்ம திருப்தியையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது. இதற்கான உந்துசக்தி என்றால் அதுவும் இந்தச் சமூகம்தான்.
பெண்ணியம் பற்றி பல பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள். தாங்களும் அதில் அடக்கம். உண்மையிலேயே பெண்ணியம் கவிதாயினிகளின் பார்வையில் அப்படித் தான் இருக்கிறதா?அல்லது மிகைப்படுத்துகிறீர்களா?
நிச்சயமாக பெண்ணியம் மிகைப் படுத்தப்படவில்லை.. இந்நிலம் தோன்றி மனித இனம் தோன்றிய ஆதியின் முடிச்சு களில் பெண்கள் ஆதித் தாய்களாக இருந்து குடும்பங்களை வழிநடத்தினார்கள்.ஆனால் நிலவுடைமை சமூகம் தனக்கென. வகுத்துக் கொண்ட சுயகட்டுபாடுகளின்படி பெண்கள் அவர்களுடைய சுய இயல் பிலிருந்து பின்தள்ளப்பட்டு இன்று வரை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறை களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்தச் சமூகத்தின் பொதுப்புத்தி மாறி பெண்கள் சக மனிதிகளாக மதிக்கப்படும் வரை இங்கு பெண்ணியம் பேசப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
ஆண் சுதந்திரப் பறிப்பு சில இடங் களில் நிகழ்ந்துள்ளதாக முகநூல் ஊடக வழி அறிகிறோம். அதற்கான காரணம் பெண்களின் ஆதிக்க ஆளுமை அதிகப் பட்டிருக்கிறது என்று கொள்ளலாமா?
இங்கு பெண்ணியம் என்பது எப்படி
பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உங்களுக்குப் பதில் தரலாம் என நினைக் கிறேன். ஒரு பெண் எப்படி சமூகத்தின் அத்தனை உரிமைகளையும் கோருகிறாளோ அதே போல் ஆணுக்கும் அவை கிடைக்க வேண்டும்..எப்படி ஒரு குடும்பத்தில் ஆண் குடும்பத்தலைவனாக இருந்து சம்பாரித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்த சமூகம் சொல்கிறதோ அதே போல ஒரு ஆண் விரும்பினால் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பதை யும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அந்த சமூக வெளியில் ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்.
பெண்விடுதலை பாரதிகண்ட கனவு பலித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். உங்களின் கருத்து?
முதலில் விடுதலை என்பது பிறர் கொடுப்பது. பெண்களுக்குத் தேவை விடுதலை அல்ல. அவர்கள் எதனால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் கல்வியும், சிறகு களும்தான் அப்படிப்பார்த்தால் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. கிடைத் திருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது
தாங்கள் பெரிதும் ஒருவரை மதிக் கிறீர்கள் என்றால் அது யார்? எதனால்?
என் அப்பா.. என் இணையர்.. என் தோழமைகள் ஒருவரைக் கேட்டால் மூன்று பதில் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை மூன்றும் ஒன்றுதான்.
கவிஞர்கள் அனைவருமே திரைத் துறையில் கால்பதிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள் அதில் தவறில்லை.தாங்கள் அப்படி நினைத்ததுண்டா? ஒருவேளை அவ்வாறு முயன்ற அனுபவம் என்ன?
ஆம் எனக்கும் திரைத்துறையில் பாடலாசிரியராக மிளிர வேண்டும் என்ற ஆவல் உள்ளது. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். இதுவரை இரண்டு பாடல் களையும் எழுதியுள்ளேன்
இன்றைய காலச் சூழலில் கவிஞர் கள் கை கொள்ளவேண்டியது என்ன?அது ஏன்?
எந்த சூழலானாலும் கவிஞர்கள் கைகொள்ள வேண்டியது சொற்களைத் தான்.. மரபோ.. நவீனமோ நாம் பயன் படுத்தும் சொற்களின் வீரியமே ஒரு கவிதையின் நிலைப்பைத் தீர்மானிக்கிறது
உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்? அது ஏன்?
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்று ஒரு பெயரை மட்டும் சொல்லிவிட முடியாது.. நான் கவிதை எழுதுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திய நான் வாசித்த அனைத்துக் கவிஞர்களும் பிடித்த கவிஞர்கள்தான்..
இப்படி எழுதக் கூடாது என்று. ஏதேனும் ஒரு படைப்பை நீங்கள் வெறுத்ததுண்டா?அப்படியெனில் அதுயார் படைப்பு? காரணம்?
இதுவரை அப்படி எதையும் வெறுத்ததில்லை
முகநூல் குழுமங்கள் பற்றி தங்களது பார்வை?
தமிழ்சார்ந்து பல்வேறு முன்னெ டுப்புகளை எடுக்கின்றன புதிதாக எழுத வருபவர்களுக்கான தளமாகவும் இருக்கின்றன.. நானும் தமிழ்ப்பட்டறை என்னும் முகநூல்தளம் வழியாக அறியப் பட்டவள் தான்.
உங்கள் வாழ்வில் மிக முக்கியமான தருணங்களில் உங்களோடு பயணித்து என்றும் நன்றிக்குரியவர்களாக இருப்பவர் களைப் பற்றிக் கூறுங்கள்?!
தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை அண்ணன் சேக்கிழார் அப்பாசாமி, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தோழர் விசாகன் – வெண்பா ஆசான்கள் : ஏடி.வரதராஜன், அகரம் அமுதன், பரமசிவம் நெடுஞ்சேரலாதன், பாவலர் வையவன் – இயக்குனர்கள் A.R.K ராஜராஜா, ஜெயப்பிரகாஷ் வீரப்பன் மற்றும் இதழ்கள் : இனிய உதயம், தமிழருவி, தமிழ்நெஞ்சம், மக்கள் தாரகை
மருதாணி
அண்மையில் தாங்கள் விரும்பிப் படித்த புத்தகம் அதன் பாதிப்பு?
சமீபத்தில் வாசித்த புத்தகம் எழுத்தாளர் முத்துநாகு அவர்களின் சுளுந்தி நாவல் .. எளிய மக்களின் குரலாக உயர்ந்திருக்கும் வரலாற்று ஆவணமாகவே நான் இந்த நாவலைப் பார்க்கிறேன்.
எதிர்கால திட்டம் என்ன? எழுத் துலகம் அதனால் அடையும் லாபம்?
சங்க இலக்கியப்பாடல்களை எளிய கவிதை வடிவில் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.. முதலாவதாக 100 குறுந்தொகைப் பாடல்களை புதுக்கவிதையாக எழுதி வருகிறேன். என் விருப்பத்திற்காக நான் கையிலெடுக்கும் இந்த முயற்சி எழுத்துலகத்திற்கும் பயனளித்தால் மகிழ்வேன்
விருதுகள் ஒரு படைப்பாளனை மாற்றுமா? ஏமாற்றுமா?
நிச்சயமாக மாற்றும் ஏமாற்றாது
தாங்கள் தமிழ்நெஞ்சம் வாசகர்க ளில் ஒருவர். தமிழ்நெஞ்சம் பற்றிய உங்களது பார்வை ?
ஆமாம் நான் மரபுக் கவிதைகள் பயின்று கொண்டிருக்கும்போதே எனது வெண்பாக்களை தமிழ்நெஞ்சம் வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. தொடர்ந்து பல கவிஞர்களை அறிமுகப் படுத்தி வருகிறது. அமின் ஐயா மற்றும் தமிழ்நெஞ்சம் உறவுகளுக்கு அன்பும் நன்றியும்.
3 Comments
Jayanthi Sundaram · பிப்ரவரி 3, 2022 at 10 h 20 min
அருமையான பேட்டி. அனைத்து பதில்களும் உணர்வின் வழியில் மனது பேசும் பேட்டி. 100 குறுந்தொகை பாடல்களை கவிதையாக எழுதும் முயற்சி அருமை. பாராட்டுகள். ஜெயந்தி சுந்தரம்
Raju Arockiasamy · பிப்ரவரி 4, 2022 at 15 h 02 min
“ஒரு பெண் தன்னுடைய குடும்பச் சூழல், சமூகத்தின் பல்வேறு விதமான அழுத்தங்கள் போன்றவற்றைக் கடந்து தனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதே என்பது சவாலான ஒன்று.. அப்படி என் விருப்பத்தின் பேரில், பல வாழ்வியல் சிக்கல்களைக் கடந்து கவிதைகள் எழுதி வருகிறேன். கவிதை எழுதுவது என் ஆத்ம திருப்தியையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது. இதற்கான உந்துசக்தி என்றால் அதுவும் இந்தச் சமூகம்தான்.”
—-அம்பிகா குமரன்
அப்பழுக்கற்ற வார்த்தைகள் ஆணியடிப்பதாய்…இந்தப் புரிதல் எல்லாப் பெண்களையும் சென்றடைய வேண்டும்… சிறப்பு சகோதரி…
உங்கள் ஆளுமை வெல்ல என் வணக்கங்கள்!
அ.முத்துவிஜயன் · மார்ச் 1, 2022 at 16 h 26 min
அருமை கவிஆளுமை பெண்ணியம் பேசும் பெருங்கவிஞர் கலை இலக்கியமேடை பொதுச்செயலாளர் அன்புத்தோழி வாழ்த்துகள்