ஒரு படைப்பாளனுக்கு அரசியல் சாத்தியப்படுமா?
சாத்தியப் படாது. கவிஞனுக்கு மென்மையான உள்ளம். கண்ணதாசனே அதில் தோற்று போனதை உதராணமாக கொள்ளலாம்
தற்கால படைப்பாளர்களில் தங்க ளைக் கவர்ந்தவர் யார்?
உதயணன் என்ற வரலாற்று நாவலாசிரியர் என் நண்பர். மற்றும் உரையாசிரியர் கவிஞர் முத்து இராமமூர்த்தி காஞ்சிபுரம்.
ஒரு கவிதையை எழுத மூடு வேண்டும் என்கிறார்களே. தங்கள் அனுபவம்?
அப்படியொன்றும் இல்லை எந்த சூழலிலும் எழுதலாம் .
எப்படியும் இதில் வெற்றியடைந்தே தீருவது என்று ஏதேனும் லட்சியமுண்டா. அதை வெற்றிகாண வழி கண்டீர்களா?
ஆம் சிலப்பதிகாரம் என்ற சங்ககால நூலை இந்த நூற்றாண்டிற்கு தகுந்தவாறு படைத்து அறிஞர்களின் பாராட்டு பெற்ற நினைத்தேன் வெற்றியும் அடைந்தேன் அதில்.
ஒரு ஆரம்பகால படைப்பாளிக்கு தங்களின் வழிகாட்டல் என்ன?
நூல்கள் ஆயிரம் ஆயிரம் படித்து அதன்மூலம் ஏற்படும் தெளிவு. பிறகு ஒரு படைப்பாளியாக வர ஒரு வாய்ப்பு