நேர்காணல்  / மின்னிதழ்

தினமும் தவறாமல் முகநூலில் இவரது கவிதை வரும். கடந்த 1100 நாட்களாகத் தொடர்ந்து முகநூலில் தினமும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அன்றைய நாளை வரவேற்றுக் கவிதைபாடுபவர். 1000 நாட்களுக்கு மேல் கவிதை எழுதியதற்காக சாதனையாளர் விருதைப் பெற்றவர். மத்திய அரசுப் பணியில் இருந்த போதும் ஓய்வின்றி ஒருநாளும் தவறாது பூபாளம் பாடிய பரணி இவர். ஆம் பரணி சுப சேகர் என்ற கவிஞரைத் தெரியாதர் இருக்க முடியாது . ஆம் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்தாலும் மதுரைக்கும் சென்னைக்கும் அவ்வப்போது பயணித்துக் கொண்டிருந்தாலும் கவிதை எழுதுவதைக் கைவிடாத கவிஞர் பெருமகன் பரணி சுப சேகர் அவர்களைத்தான் இப்போது காணச் செல்கிறோம்.

நேர்காணல் : ! சந்திப்பு தமிழ்நாடு அரசின் 2020 க்கான தமிழ்ச்செம்மல் விருதினைப்பெற்ற நமது தமிழ்நெஞ்சம் இதழில் ஆசிரியர் குழுவில் இணைந்து தமிழ்பணிச் செய்துவரும் தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன் வலங்கைமான்

தென்சென்னைத் தமிழ்ச்சங்க விழாவில் இயக்குனர் இராசி அழகப்பன்,கவிஞர் பிறைசூடன் ஆகியோருடன் அருகில் கவிஞர் ஜீவரேகா, கவிஞர் ஜூபிளி நடராஜன் ஆகியோர்.
பிப்ரவரி 2021 இதழை பதிவிறக்கம் download செய்ய இங்கே கிளுக்கவும்

இனிய வணக்கம்

தமிழ்நெஞ்சம் இதழின் சார்பாக இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரணி சுப சேகர் என்ற பெயரில் கவிதைகள் படைத்துவரும் தங்கள் இயற்பெயர் என்ன? பரணி சுப சேகர் என்று பெயர் வைத்துக் கொண்டதற்கு ஏதும் சிறப்புக் காரணம் உண்டா?

இயற்பெயர் சுப. சேகர் என்பதே. ஆரம்பத்தில் கவிதைகள்(?) எழுதும் போது ஐபரணி என்ற பெயரில் எழுதி வந்தேன். பிறகு ஆன்மிக சிந்தனையில் பரணி. சுப சேகர் என எழுதத் துவங்கினேன். பரணி என்பது என் நட்சத்திரம்

தங்களின் பெற்றோர் உடன்பிறந்தோர் மற்றும் பிறந்த ஊர் பற்றி.

பிறந்தது முதல் 1987 வரை சிவகங்கை யில்தான். ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை.. சிவகங்கைதான். 1989ல் மதுரையில் வீடுகட்டி குடியேறி னோம். தாயார் கோமதி அம்மாள் தந்தையார் சுப்பிரமணிய அய்யர். உடன் பிறந்தோர் 8பேர் நான் எட்டாவது குழந்தை. எனக்குப்பின் என் தம்பி மொத்தம் 9 பேர்

மகாபலிபுரத்தில் நடைபெற்ற விழாவொன்றில் கவிஞர் பரணி சுப சேகர், தமிழ்நெஞ்சம் அமின் அவர்களிடமிருந்து விருதினைப் பெறும் தருணம். உடனிருக்கும் கவிஞர்கள் நா. பாண்டியராஜன், கவிச்செல்வா, க. நா. க்ல்யாணசுந்தரம், முத்து விஜயன் மற்றும் சிலர்.
சென்னையில் விழாவொன்றில் திரு. பழ நெடுமாறன் அவர்களிடமிருந்து விருதினைப் பெறுகிறார் கவிஞர் பரணி சுப சேகர்
உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குனர் பேரா அவர்களிடமிருந்து விருதினைப் பெறும்போது அருகில் முனைவர் பசும்பொன் மற்றும் கவிஞர் பாண்டியராஜன்.

கவிதைகளை எழுதுவதால் தாங்கள் தமிழில் கற்றுத் தேர்ந்துள்ளீர்களா? அல்லது தமிழில் பட்டம் பெற்றுள்ளீர்களா அது பற்றி கூறுங்களேன்.

தமிழை முறையாக படிக்கவில்லை; நான் ஆங்கில வழி கல்வியில் வேதியியல் படித்துள்ளேன். தமிழ் மேல் ஆர்வம் உண்டு.எத்தனை வயதில் அரசு வேலைக்குச் சென்றீர்கள்? எந்தெந்த ஊர்களில் பணி புரிந்துள்ளீர்கள்? தங்கள் பணி குறித்து ஏதேனும் கூறுங்கள்..

எத்தனை வயதில் அரசு வேலைக்குச் சென்றீர்கள்? எந்தெந்த ஊர்களில் பணி புரிந்துள்ளீர்கள்? தங்கள் பணி குறித்து ஏதேனும் கூறுங்கள்..

24 வயதில் மாநில அரசுப் பணியில் தற் காலிகப்பணி. 1987ல் மத்திய அரசுப் பணி.சிவகங்கை திருப்பத்தூர் தேவகோட்டை மதுரை அம்பத்தூர் தாம்பரம் ஆகிய நகரங்களில் பணி புரிந்துள்ளேன். மாநில அரசிலும் சரி மத்திய அரசுப் பணியிலும் சரி மக்களுக்கு சேவை செய்யும் பணியே அமைந்தது.. இறைவன் கொடுத்த வரமே.

அலுவலகப் பணியிலும் நற்பெயர் ஈட்டி.. அத்தோடு தொழிற்சங்கம் மனமகிழ் மன்றத்தில் 25 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து மன நிறைவாகும் வகையில் 34 ஆண்டுகள் பணியாற்றி கடந்த செப்டம்பரில் விருப்ப ஓய்வு மூலம் பணி நிறைவு செய்தேன்.

கவிஞர் முத்து விஜயன், நக்கீரன் ஆசிரியர் ஆருர் தமிழ் நாடன், Universal achievers books of records. Uma selvam and babu, பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, கவிதாயினி பாரதி பத்மாவதி, கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி இவர்களுடன் உலக சாதனை விருதுவிழாவில் 1100 நாட்களுக்கு மேல் காலை வணக்கம் பாடல்கள் எழுதி சாதனைப் புரிந்ததற்கான விழாவில் கவிஞர் பரணி சுப சேகர் விருதினைப் பெறும் தருணம்.

கவிதை எழுதுவதில் எவ்வாறு ஈடுபாடு வந்தது? தங்களுடைய ஆதர்சன கவிஞராக யாரை எண்ணுகிறீர்கள்?

கவிதைகள் நிறைய படித்ததால் எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்தது. கல்லூரி யில் படிக்கும்போது கவிஞர் மீராவின் மாணவராக இருந்ததாலும் கல்லூரி தமிழ் மன்ற செயலராக இருந்ததாலும் *பாரதி எனும் கையெழுத்து இதழை* நடத்தி வந்தேன். பின் மத்திய அரசுப் பணிக்கு வந்த போது மற்றவர்களின் தமிழ் உணர்வைக் கொண்டு வர *இதயமலர் மற்றும் உதயமலர்* என்று இரு கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தினேன். *உதயமலர் என்பது என் வரிகளை மட்டுமே கொண்டது.. அதில் ஒன்றான.. *மற்றுமொரு கடிதம் என்ற இதழ் ஆனந்தவிகடன் ஆசிரியர் திரு பால சுப்பிரமணியன் அவர்களின் பாராட்டை பெற்றது* அனைத்து முன்னோடி கவிஞர் களுமே எனக்கு பிடித்தவர்கள் தான்.

தினமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது?

நன்றாக எழுத வேண்டுமென்றால் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் எனத் தோன்றி யது.. அப்படியானால் எதை எழுதுவது என் யோசித்து விடியலை… நாளை.. காலை வணக்கத்தை.. மன மெடுத்தேன்

உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குனர் பேரா அவர்களிடமிருந்து விருதினைப் பெறும்போது அருகில் முனைவர் பசும்பொன் மற்றும் கவிஞர் பாண்டியராஜன்.
விழாவொன்றில் கவிஞர் பரணி சுப சேகர், முனைவர் பசும்பொன், மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குனர் முனைவர் வீரராகவன் ஆகியோருடன்...

இதுவரை எத்தனை கவிதைகள் எழுதி யுள்ளீர்கள்? எவ்வளவு எழுதுவதாக உத்தேசம்?

விடியல் கவிதை நீங்கலாக 1000 கவிதைக்கு மேல் எழுதியிருப்பேன் என நினைக்கின்றேன். விடியல் வணக்கம் 1100 தொடர்ந்து கொடுத்தமைக்காக சாதனை விருது கொடுக்கப்பட்டது. வரை முறைகளுக்காக அதற்கு எண் கொடுக்கப்பட்டது. இப்போது 1600 ஐத் தாண்டிவிட்டேன். எல்லா நாட்களும் தொடர்ந்து கொடுத்துள்ளேன்.. நிறுத்துவதாக எண்ணம் இல்லை. ஆனால் விரைவில் மாறுபட்ட நோக்கில் சங்க இலக்கியங்களை உள்வாங்கி காலை வணக்கம் தர எண்ணியுள்ளேன்

கன்னியாக்குமரியில் குமரித்தமிழ்ச்சங்க விழாவில் முனைவர் கமல செல்வராஜ் அவர்களிடமிருந்து விருதினைப் பெறுகிறார் கவிஞர் பரணி சுப சேகர்

கவிதைகளைத் தொடர்ந்து எழுதியதற் காகச் சாதனை விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே அதுபற்றிக் கூறுங்களேன்.

1100 நாட்கள் தொடர்ந்து எழுதியதைச் சாதனையாக அங்கீகாரம் செய்து Universal books of records மற்றும் Kalam books of records சார்பில் சான்றளிக்கப்பட்டது

இதுவரை பெற்ற விருதுகள் பற்றி…

முகநூல் குழுமங்கள் சார்பில் நிறைய விருதுகள் பெற்றுள்ளேன்.
கவிவாரிதி
பாரதி விருது
நக்கீரர் விருது
எம் ஜி ஆர் விருது
தமிழ்ப்பணிச்செம்மல்
கபிலர் விருது
செந்தமிழ்ச்செம்மல்
பாரதிதாசன் விருது
சிந்தனைக்கவி
கவிச்சரம்

என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன்

இதுவரை தாங்கள் எழுதியுள்ள நூல்கள் பற்றி..

இதுவரை 7 நூல்கள் எழுதியுள்ளேன்.

மற்றுமொரு கடிதம்
அனலில் உலவும் மலர்கள்
பரணியின் கவிதைகள் பாகம் 1
(மகரந்தத்தின் தேடல்)
சுகமான சோகங்கள் (பாகம் 2)
இதுவும் கவிதைகளே (பாகம் 3)
விடியல் வணக்கம் (பாகம் 1)
விடியல் வணக்கம் (பாகம் 2)

கன்னியாக்குமரியில் குமரித்தமிழ்ச்சங்க விழாவில் முனைவர் கமல செல்வராஜ் அவர்களிடமிருந்து விருதினைப் பெறுகிறார் கவிஞர் பரணி சுப சேகர்

முகநூல் குறித்து என்ன நினைக்கி றீர்கள்? இது வரமா சாபமா?

முறையாக பயன் படுத்தினால் முகநூல் வரம்தான்.. அதிகமான படைப்புகளை அறியும் வாய்ப்பு முகநூல் மூலம் மட்டுமே கிடைக்கிறது.

இந்தக் கொரானா ஊரடங்கு காலத்தில் எவ்வாறு பொழுதைக் கழித்தீர்கள்?

ஊரடங்கு காலத்தில் என்றில்லை.. என்றும் எனக்கு ஒரே மாதிரிதான்.பொது இட நிகழ்வுகள் மட்டுமே இல்லாது இருந்தது. தினமும் 450 புலன வழி நண்பர்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட முகநூல் நண்பர் களுக்கும் பல்வேறு குழுமங்களில் பதிவ தற்குமே நேரம் சரியாக இருக்கிறது. இதில் பாதிக்கும் குறையாமல் வரிகளுக்கு விமர்சனமோ வாழ்த்தோ வருகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது

வளரும் இளங்கவிஞர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?

வளரும் இளங்கவிஞராகத்தான் நானே உள்ளேன். என்னை நான் கவிஞன் எனப் போட்டுக் கொள்வதில்லை.. இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது

ஆனால் என்பாதையில் நான்கண்ட உண்மை ஒன்றுதான்.. அது தொடர் முயற்சியே துணை வரும். பலனை எதிர்பார்க்காது கடமையாக எழுதினால் ஒரு சமயத்தில் மற்றவர் கவனம் நம்மீது நிச்சயம் திரும்பும் என்பதே உணர்ந்த உண்மை. கடமைக்கு கோவிலுக்கு காப்பு கட்டுவது போல் எழுதிவிட்டு அதற்கு விருது எதிர்பார்ப்பதில் உடன்பாடில்லை.. இது அறிவுரையில்லை.. அன்புரை.

மற்றொரு விழாவில் முன்னாள் அமைச்சர் எச். வி. ஹண்டே அவர்களிடம் விருதினைப் பெறுகிறார் கவிஞர் பரணி சுப சேகர்
மதுரை உலக்த் தமிழ்ச் சங்கம் ந்டாத்திய தமிழ் நிலாக் கவியரங்கில் கவிதைப் படிக்கும்போது...

முகநூல் குழுமங்களின் செயல்பாடுகள் தமிழை வளர்க்கின்றன என்று தாங்கள் கருதுகிறீர்களா?

முகநூல் குழுமங்கள் தமிழை வளர்ப்பது உண்மைதான். இன்று வலைதளப் பதிவு களில் தமிழ் உயர்ந்துள்ளது.. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

பிரபலமான பத்திரிகைகளில் கவிதை களுக்குப் பெரிதாக முக்கியத்துவம் தரப் படுவதில்லை என்று கருதுகிறீர்களா?

பிரபலமான பத்திரிகைகள் கவிதைகளை முக்கியப் படுத்துவதில்லை என்பது உண்மை தான். இதற்கு காரணம் கவியுணர்வு கொண்ட வர்கள் அங்கு ஆளுமையாக இல்லையோ என்னவோ.. தமிழ் ஆளுமைகள் உள்ள பத்திரிகைகள் முக்கியத்துவம் தருகின்றன. மொத்தத்தில் எதற்குமே ஒரு தனி பரிந்துரை தேவையாகிறது என்பதும் பொதுவான கருத்தாக உள்ளது.

தங்கள் வாழ்க்கைத்துணைவர் பற்றி..

வாழ்க்கைத்துணை மீ லதா அவர்கள். என் எழுத்துப்பணிக்கு எந்நாளும் இடையூறு செய்வதில்லை. பல வருடங்களாக உடல்உபாதையால் சிரமப்படுகிறார்.. மன தைரியத்தால் இன்றளவும் தொடர்கிறார்.

தங்கள் குழந்தைகள் பற்றி

இரு பெண்கள்.. மூத்தவள் ஐஸ்வர்யா. திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இளையவள் ஜெய பாரதி BE.சென்னையில்பணி.

பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் விருதினைப் பெறும் தருணம்.

தமிழ்நெஞ்சம் மற்றும் அதன் ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்…

மின்னிதழ் வரவுகளில் தமிழ்நெஞ்சம் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. இதற்கான காரணம் நல்ல படைப்புகளை தேடித்தேடி பதிவேற்றம் செய்கிறார்.. அத்தோடு வளர வேண்டிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அதன்மூலம் சிறந்த கவிதைகளை அடை யாளம் காட்டுகிறார்;


7 Comments

Mowjoon Zim · பிப்ரவரி 1, 2021 at 1 h 18 min

மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்!

ஈழவேங்கை தம்பியின் தம்பி · பிப்ரவரி 1, 2021 at 2 h 54 min

சிறப்பு, வாழ்த்துகள் ஐயா

ம.மணிவண்ணன் · பிப்ரவரி 1, 2021 at 3 h 43 min

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

Buvana satkunam,,vancouver canada · பிப்ரவரி 1, 2021 at 4 h 32 min

மிகச் சிறந்த எழுத்தாளர் பண்பாளர் மனித நேயமுள்ள இரக்க சுபாவம் கொண்டவர். கடமை தவறாத கண்ணியம் மிக்கவர். அவர் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும்! வாழ்க வளமுடன் நலமுடன்!

புவனா சற்குணம் கனடா

ஓசூர் மணிமேகலை · பிப்ரவரி 2, 2021 at 10 h 58 min

தமிழ்நெஞ்சம் தரமான மின்னிதழ். பல்சுவை படைப்புகளுடன் ஆளுமைகளின் நேர்காணல், ஆக்கமுள்ள கருத்துகள், அழகான வடிவமைப்பு என்று ஒவ்வொரு மாதமும் மெருகேறிக் கொண்டே செல்கிறது.ஆசிரியரின் தமிழ்த்தொண்டு அகமகிழ்வூட்டுகிறது.மனமுவந்த வாழ்த்துகள்.வாழ்க! வளர்க!💐
ஓசூர் மணிமேகலை

செல்வம் பெரியசாமி · பிப்ரவரி 6, 2021 at 19 h 22 min

அருமையான இதழ் ஐயா

நிறைமதி நீலமேகம் · பிப்ரவரி 28, 2021 at 11 h 39 min

அருமைங்க…சகோதரருக்கு இனிய வணக்கத்துடன் நல்வாழ்த்துகள்💐💐💐

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »