புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
ஆன்மீகம்:~
~~~~~~~~
ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்..!
யாளி என்ற மிருகமானது நவகிரகங்களின் ஒன்றான புதனின் வாகனம்.யாளியை போலவே புதனும் இரு பாலினத்தையும் சார்ந்திராதவர். சில நேரங்களில் அவர் பெண்ணாகவும் பொதுவாக ஆணாகவும் சித்தரிக்கபடுகிறார்.
இதற்கான பிண்ணனி கதை…
~~~~~~~~~~~~~~~~~~~~~
கதாநாயகன் சந்திரனின் காதலில் தொடங்குகிறது. இரவின் நாயகனான நிலவன்(சந்திரன்) தாரா என்ற பெண்ணோடு காதல் வயப்பட்டு அவளை தன்னுடன் அழைத்தும் வந்துவிட்டார். ஆனால், தாராவோ தேவர்களின் குருவான பிரகாஸ்பதியின் மனைவி.
சந்திரன் மீது குரு பிரகாஸ்பதி கடும் சினம் கொண்டு, போர் புரிய முற்படுகையில், தேவர்கள் கூடி தாராவை தன் கணவனோடு மீண்டும் இணையச் சொல்கிறார்கள். அதே சமயம்… தாரா, தான் கருவுற்றிருப்பதை அறிகின்றாள்.
காதலனும்(சந்திரன்), கணவனும்(பிரகாஸ்பதி) இருவரும் அது, தன் குழந்தைதான் என வாதாட தேவர்கள் தாராவிடம் உண்மையை உரைக்குமாறு வினவியும், அவளோ..? உண்மையை கூற மறுத்து விடுகிறாள். ஒரு கட்டத்தில் கருவிலிருக்கும் குழந்தையே, தாயிடம் யார் காரணம்..? என கேட்க, வேறு வழியின்றி சந்திரன் என்ற உண்மையைச் சொல்லி விடுகிறாள்.
முன்னரே கோபத்தில் இருந்த குரு பிரகாஸ்பதி இதை கேட்டதும், சினம் பொறுக்காமால் சாபம் விட துவங்கினார்…
சந்திரனால் உனக்கு பிறக்கும் குழந்தை, ஆணாகவும் இருக்காது..! பெண்ணகாவும் இருக்காது..! என்று சாபமிட
தேவலோகத்தில் அமைதியை நிலைநாட்ட, இந்திரன் அந்த குழந்தையை உலகம் பிரகாஸ்பதியின் மகனாகே அங்கிகரிக்கும் என அறிவித்தார்.
புதன் ஆண் கடவுளாகவே உலகத்தால் அறியப்படுகிறார். அவர் மனைவி பெயர் இளா. இவளும் அவரைப் போன்றவரே அதாவது ஆறு மாதம் புதனின் மனைவியாகவும் ஆறு மாதம் அரசாளும் ஆணாகவும் இருப்பார்.
தமிழில் இளை என்றால் இளையர்/மக்கள் என பொருள்படும். ரிக் வேதத்தில் சரஸ்வதி போன்ற நதிகளுடன் குறிப்பிடப்படும் இளாநதி (தற்போது இளி என்று அழைக்கப்படுகின்றது)
இந்த நதி, சீனாவிற்கு அருகாமை நாடான கஜகஸ்தானில் உள்ளது. ஒருவேளை பாரதம் அதுவரை பரந்திருக்குமோ..? தெரியவில்லை…
உண்மை:~
~~~~~~~~
உண்மையில் புவியியல், அறிவியல் கூற்றுப்படி பார்த்தால், கிழமைகளில் கூட, புதன் ஆறு கிழமைகளுக்கு மத்தியிலே வரும். சூரிய குடும்பத்தில் புதன் கிரகம் பகலில் 420 செல்சியஸ் அளவிற்கு வெப்பமாகவும் இரவில் -170 செல்சியஸ் குளிராகவும் இருக்கும். புதன் கிரகத்தின் ஆங்கிலப் பெயர் Mercury (பாதரசம்). தனிம அட்டவணையில் காணப்படும் ஒரே திரவம் போன்ற தனிமம் பாதரசம் மட்டுமே..! இது, திரவமா..? அல்லது, திடப்பொருளா..? என்று குழப்பத்தைத் தரும் தனிப்பட்ட குணமுடையது.
மீண்டும் புராணத்தை காண்போம்..! இந்து புராண கடவுள்கள் எல்லோருக்கும் ஒரு வாகனம் இருக்கும். அது போல, இருபாலினமான புதனின் வாகனமும் அப்படித்தானே இருக்க வேண்டும். ஆண்மையின் கம்பீரமாக சிங்கத்தின் உடல் அமைப்பும், பெண்மையின் கர்வமாக யானையின் தலையும் உடைய யாளியினை, சந்திரனின் வாகனமாக வைத்தனர்.
பண்டைய தமிழர்கள் அறிவியலிலும், கற்பனை வளத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம். மனித இனத்தை ஒன்றுபடுத்தவும், மக்கள் அச்சமின்றி, நெறிகளை பின்பற்றி வாழவும், அவர்கள் கடவுள்களையும், கோவில்களையும் உருவாக்கினர். கடவுள் நம்பிக்கை நன்மையை காத்தன, தீயவற்றை அழித்தன.
மனிதனின் அசாத்திய சக்திகள் கடவுள்களின் வரமாகின. அப்படியான கடவுளின் இருப்பிட பாதுகாவலர்கள் எப்படி இருக்க வேண்டும். யாளிகள் கோவில்களின் பாதுகாவலன், மனிதனை கடவுளின் வசிப்பிடத்திற்கு வழிநடத்துபவை.
கொஞ்சம் மிரட்டலாகவும், கம்பீரமாகவும் இருக்கத்தானே வேண்டும்.
அறிந்தவை:~
~~~~~~~~~~
யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன.
யானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின் (மகரம்) தலைகளையும் சில நேரம் நாய், எலி போன்ற வேறு சில விலங்குகளின் உருவத்தையும் கொண்டுள்ளன. பாம்பின் வால் தோற்றத்தை முழுமை செய்கிறது.
யாளி யானையின் பலத்தையும், சிங்கத்தின் வேகம் மற்றும் ஆற்றலையும், நாகத்தின் பய காரணியையும் ஒரு சேர கொண்டது. பழமையான கோவில்களின் மண்டப தூண்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர, முப்பரிமாண யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே, யானை நிற்கும் சிலையையும் பார்த்திருப்போம். பொதுவாக, யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்..!
யாளியானது, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும். யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம். ஆனால்..? வெளியே எடுக்க முடியாது..! இதனை, யாளி முட்டை என்பர்…
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி, அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது…
யாளிகள் கோவில்களை பாதுகாப்பதுமாகவும், மக்களை ஆலயத்திற்கு வழி நடத்துவதாகவும் நம்பப்பட்டது. இரு வகையான துதிக்கை வடிவங்கள் கோவில்களில் வழக்கத்தில் உள்ளன. ஒன்று பிள்ளையாரை போன்ற உருவம் கொண்ட கஜ யாளி மற்றொன்று ராஜ யாளி, கற்பகிரகத்தின் இரு வாசலையும் அலங்கரிப்பவை.
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழுஉருவ, முப்பரிமாண சிலைகள் கிடையாது.
இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25000 ஆம் ஆண்டு காலத்திலேயே வழக்கத்தில் இருந்து, பின்னர் கி.பி 800-ல் தான் மீண்டும் கோவில்களில் இடம்பெற்றன. முதலாம் ஆதித்யன் மற்றும் பராந்த சோழனால் கற்றாளி எனப்பட்ட செங்கற்களுக்கு பதிலாக கருங்கற்களை கொண்டு முதன்முதலில் கோவில்கள் கலைநயத்துடன் கட்டப்பட்டன. அதில் தொடங்கி, மற்ற கோவில்களில் யாளி முக்கிய இடம் பெற்றது. அது, தென்னிந்தியக் கோவிலின் கலை அம்சமாக விளங்கியது.
அதற்கு முந்தைய கோவில்களில் இந்த சிலைக்களுக்கான தடயம் ஏதுமில்லை. மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.
அனுமானம்:~
~~~~~~~~~~
சில அறிக்கைகள் இப்படி ஒரு விலங்கினம் இந்திய வனப்பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் எனவும், கொடூர இந்த வேட்டை விலங்கை கண்டு மக்கள் அச்சம் கொண்டிருந்தனர் என்றும் கூறியது. காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கத்தினால் இவை மெல்ல அழிந்திருக்கலாம் எனவும் கருதியது. ஆனால் இந்த கோட்பாட்டிற்கு எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.
தற்போது, பெரும்பாலான ஆராச்சியாளர்கள் யாளி என்பது இந்து புராணத்தில் வரும் மற்றுமொரு கற்பனை கலப்பின விலங்கு மட்டுமே என்கிறார்கள். மேலும், எந்த தடயமோ அல்லது தொல்பொருள் படிவமோ இவை விலங்கினம் என இன்றுவரை நிரூபிக்கவில்லை.
டைனோசர் என்று சொல்லப்படும் உயிரினத்தின் உடலமைப்புக்கும், யாளியின் உடலமைப்புக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதால், யாளிதான் உண்மையில் டைனோசராக இருக்கலாம், என்றொரு கோட்பாடும் உள்ளது. யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்றும் ஒரு தரப்பால் நம்பப்படுகின்றது.
அதன்படி, குமரிக்காண்டம் ஆழிப்பேரலையால் அழிவுற்றபோது, அங்கிருந்து கடந்து வந்த மக்கள் அறிந்த விலங்குதான் யாளி. எனவே, அது டைனோசரின் வழிதோன்றலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் குமரிக்காண்டமே இன்னும், ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை…

1 Comment

S.XAVIERRAJ · மார்ச் 15, 2024 at 16 h 27 min

யாளி என்பது ஒரு கற்பனைச் சிற்பம். சிங்கம், சிங்கமே. அதற்கு எப்படி துதிக்கை இருக்கும். அது போல்தான் மற்ற யாளிகள்.
சிம்மம்- சிங்கம்
யானை-யானை
ஆடு-ஆடு
டைனோசர் என்பது முற்கால தாவும் மிருகங்கள் (ஆடு,மாடு, யானை, கங்காரு,…..) ஊர்ந்து செல்லும் மிருகங்கள் (உடும்பு, முதலை…..) இவைகளாக இரருக்கும். உருவத்தில் முற்கால மிருகங்கள் பெரியனவாக இருக்கும். எப்படி மனிதரில் அதிகம் உருவம் பெருத்தவனை இராட்சதன் என்று சொல்கிறோமே. அல்லது மிருகங்களை கற்பனைகளில் அதிகம் பெருத்தவைகளாகச் சொல்லியிருப்பர்..
அது போல்தான் அனகோண்டா.
இந்துக்களில் தசாவதாரத்தில் மச்சம் பெரியதாகி விஷ்ணு (மனித)முகத்தோடு படவை இழுத்துச் செல்கிறது.
திமிங்கலத்தில் படவை கட்டினால் இழுத்துச் செல்லும்.
சிங்கத்தின் முன்னால் போனால் நம்மை அடித்துக் கிழித்துவிடும். நரசிம்ம அவதாரத்தில் சிங்கமுகம் கொண்டு கரத்தால் (சிங்க நகங்கள் ) இரணியன்அடித்துக் கிழிக்கப்படுகிறான்
ஆக கற்பனைகள் ஒரு சில நேரம் புராணங்களாக மாறுகின்றன.
தீர்வு..: இறைவன் உருவமற்றவனாகவும், உருவமுள்ளவனாகவும் வருவான். அனைத்தும் அவனே. ஆனால் உலகம் மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டதே.
S.XAVIER RAJ.BE.(Civil)
S/o, I.SAVARIAPPAN, Retired Police (Late)
LOURDUMARY (Late)

Indian Philosopher

15.4.2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »