மருந்து

சுந்தர மருந்து 1 இல்லாளைத் துன்புறுத்தி இன்னொருத்தி கைப்பிடித்துப் பொல்லா நடைபிணமாய்ப் போகாதீர்.-பல்லோரே ! எள்ளும் தமிழ்ஞாலம் என்றுமிவர் சேர்க்காதாம், உள்ளுவீர் கற்பின்றேல் கேடு. சுந்தர மருந்து 2 இறைகிணறு ஈந்திட்ட ஈடற்ற நீரும், மறைசொல வந்திட்ட மாண்பும்-பொறைகொண்ட நல்லோர்தம் நல்வாக்கும் , நானிலமும் , அற்றேயாம் இல்லாரை வஞ்சித்த பேர்க்கு. சுந்தர மருந்து 3 சொல்வள மில்லாமல், சோதனைகள் வெல்லாமல், பல்லோரும் காணப் பணியாமல்,-வல்லோரின் வாய்வார்த்தை கேளாமல், வாழ்வழிக்கும் Read more