திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 70

பாடல் – 70 காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால் வேதம் கரைகண்ட பார்ப்பானும் – தீதிகந் தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர் செல்வ ரெனப்படு வார். (இ-ள்.) காவோடு – சோலையை உண்டாக்குதலுடன், அறக்குளம் – அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் – தோண்டுவித்தவனும்; நாவினால் – நாவினால் ஓதி, வேதம் – வேதத்தை, கரை கண்ட – முடிவுகண்ட, பார்ப்பானும் – அந்தணனும்; தீது – தீய வழியை, இகந்து Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 69

பாடல் – 69 அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் – நொந்து நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும் பெறுமா றரிய பொருள். (இ-ள்.) அரும்தொழில் – (உழுதல் பெருஞ்சுமை தாங்குதல் முதலிய) அரிய தொழிலை, ஆற்றும் பகடும் – செய்யவல்ல கடாவும், திருந்திய – குற்றமற்ற, மெய்நிறைந்து – உடலிலக்கணம் நிரம்பி, நீடு இருந்த – நெடுநாள் (மணமின்றி) இருந்த, கன்னியும் – இளம் பெண்ணும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80 முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. (இ-ள்.) முறை செய்யான் – முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற – அடைந்த, தலைமையும் – தலைமைத் தன்மையும், நெஞ்சில் – மனத்தில், நிறை இலான் – உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட – மேற்கொண்ட தவமும் – தவமும்; நிறை ஒழுக்கம் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 68

பாடல் – 68 இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள. (இ-ள்.) இல்லார்க்கு – வறியவர்க்கு, ஒன்று ஒருபொருளை ஈயும் – கொடுக்கும், உடைமையும் – செல்வமும்; இவ்வுலகில் – இவ்வுலகத்தின் பொருள்களின், நில்லாமை – நிலையாமையை, உள்ளும் ஆராய்ந்து அறியும், நெறிப்பாடும் – வழியில் பொருந்துதலும்; எவ்வுயிர்க்கும் – எல்லா வுயிர்க்கும், துன்பு Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 67

பாடல் – 67 எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும் செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி – மயிர்நரைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும் நொந்தார் செயக்கிடந்த தில். (இ-ள்.) எதிர் நிற்கும் – (தாம் சினந்தால்) தம் எதிர்நின்று பேசும்; பெண்ணும் – மனையாளும்; இயல்பு இல் – ஒழுக்கமில்லாத, தொழும்பும் – ஏவலாளும்; செயிர் – பகை, நிற்கும் – கெடாது நிற்கும், சுற்றமும் – உறவினரும், ஆகி – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 66

பாடல் – 66 கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும் சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் – பற்றிய கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும் சால்போடு பட்ட தில. (இ-ள்.) கொழுநனை – கணவனை, இல்லாள் – இல்லாதவளது. கறையும் – மாதவிடாயும்; வழிநிற்கும் – தன் ஏவலின் வழியில் நிற்கின்ற, சிறு ஆள் – சிற்றளை, இல்லாதான் – இல்லாதவனுடைய, கை மோதிரம் – கைவிரல் அணிந்த மோதிரமும், பற்றிய – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 65

பாடல் – 65 அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற விட்டகல் கில்லாத வேட்கையும் – கட்டிய மெயந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும் தந்நெய்யில் தாம்பொரியு மாறு. (இ-ள்.) அலைகடலின் அலைகின்ற – கடலைப்போல், அச்சம் தோன்றலும்; மாறி – மாறிப் பெரும் பயம் (ஒருவர் உள்ளத்தில்) தொன்றுதலும்; ஆர்வு உற்ற – அனுபவித்தவற்றை, விட்டு அகல கில்லாத – விட்டு நீங்கமாட்டாத, வேட்கையும் – விருப்பமும்; கட்டிய – (அறிவுடையோரால்) Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 64

பாடல் – 64 நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் – தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (இ-ள்.) நல் விருந்து – நன்மையான விருந்தினரை, ஓம்பலின் – பாதுகாத்தலால், நட்டாள் ஆம் – கணவனுக்கு நட்பினளாம்; வைகலும் – நாடோறும், இல் – இல்லறத்தை, புறஞ் செய்தலின் (வழுவாது) காத்தலால், ஈன்ற தாய் (ஆம்) – பெற்ற தாயாம்; தொல்குடியின் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 63

பாடல் – 63 நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலும் – சீர்பயவாத் தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்த லில. (இ-ள்.) நோ – (தமக்கு வரும்) துன்பத்துக்கு, அஞ்சாதாரோடு – பயப்படாதவரிடத்து, நட்பும் – கொண்ட நட்பும்; விருந்து அஞ்சும் – விருந்தினர்க்கு உண்டி கொடுக்க அஞ்சுகின்ற, ஈர்வளையை – மனைவியை, இல்லத்து – மனையினிடத்தில், இருத்தலும் – இருக்கச் செய்தலும் : Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 62

பாடல் – 62  நன்றிப் பயன் தூக்கா நாணிலியும் சான்றோர்முன் மன்றில் கொடும்பா டுரைப்பானும் – நன்றின்றி வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர் எச்சம் இழந்துவாழ் வார். (இ-ள்.) நன்றிப்பயன் – ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பயனை, தூக்கா – அளந்தறியாத, நாண் இலியும் – நாணமில்லாதவனும்; சான்றோர் முன் – பெரியவர் முன்னே, மன்றில், அறநிலையத்தில், கொடும்பாடு – பொய்ச் சொல்லை, உரைப்பானும் – சொல்லுகின்றவனும்; நன்று Read more