தமிழ்நெஞ்சம் ஏப்ரல் 2020

தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக்கலப்பது தொண்டை யில் சிக்கிய துரும்பு போல இருக்கிறதே. சொல்பருக்கைகள் என்னும் நூலில் விரவியுள்ள மொழிக்கலப்பை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றியது உண்டா?

‘‘தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக் கலப்பது தொண்டையில் சிக்கிய துரும்புபோல் இருக்கிறதே?’’ – இந்தக் கேள்வி ஒரே நேரத்தில் மகிழ்வையும் துயரையும் தூவுகின்றது.

மகிழ்வுக்கு உங்கள் தனித்தமிழ் பற்றும், துயருக்கு ‘‘தொண்டையில் சிக்கிய துரும்பாக’’ மாறி உங்களைத் தொல்லைபடுத்துகின்றேனே எனும் தன்னிரக்கமும் காரணங்களாகும்.

நான் தொடக்கக் காலத்திலிருந்து தனித்தமிழ் வழியில் வந்தவன் இல்லை, நாற்பது நாற்பத்தைந்து அகவை வரை கலப்புத் தமிழிலேயே புரண்டு கொண்டிருந்தவன் என்ற உண்மையை நேர்மையோடு உங்களிடம் ஒப்புக் கொள்கிறேன்.

திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகத் தலைமை ஆசான் தனித்தமிழ் நாவலர் த.ச.ஐயாவின் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் தனித்தமிழ்ப் பக்கம் திரும்பினேன்.

என்னுடைய மூத்த மகள் பெயர் பவித்ரா. இளையமகள் கலைவாணி. அடுத்த மகன் பெயர் கபிலன். இந்தப் படிநிலை என் தனித்தமிழ் வளர்ச்சிப் போக்கைக் காட்டும்.

இல்லம், மேடை, பொதுவிடங்களில் இயன்ற அளவு தனித்தமிழையே பயன் படுத்துகிறேன்.

நீங்கள் குறிப்பிடும் என்னுடைய, ‘‘சொல்பருக்கைகள்’’ கவிதை நூல் வெளி யீட்டின் போதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசியர் மன்றப் பொதுச்செயலர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம், நூலில் பிறமொழிச் சொற்கள் கலப்பைச் சுட்டிக் காட்டியும், கண்டித்தும் கருத்துரை வழங்கினார் .

அந் நூலில் பிறமொழிச் சொற்களை வலிந்து திணித்திருக்க மாட்டேன்.

  • எதுகை மோனைக்காகப் பயன்படுத்தி யிருப்பேன்.
  • மக்களிடையில் அதிகப் புழக்கத்தில் உள்ள (பிறமொழிச்) சொற்களை, கவிதையின் எளிய புரிதலுக்காக கையாண்டிருப்பேன்.
  • சில சொற்கள் தமிழோடு இரண்டறக் கலந்து விட்டிருப்பதை விலக்காமல் விட்டிருப்பேன்.
  • தமிழா இல்லையா என்ற விவாதத்திற்குரிய சொற்களையும் அரவணைத்திருப்பேன். (கவிதை என்ற சொல் தமிழ்தான் என்பவர்களும் இருக்கிறார்கள். அதை ஒதுக்கிப் பாவலரை மட்டும் பயன்படுத்தும் நண்பர்களும் எனக்குண்டு!)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அளவு எனக்குத் தனித்தமிழ்ப் பயிற்சி இல்லை.அத்திசை நோக்கிப் பயணிக்கவே அவாவு கிறேன். இந்த நேர்காணல் மொழிக்கலப்புப் பயன்பாட்டை என்னிலிருந்து களைய மேலும் உந்து ஆற்றல் தரும் என நம்புகிறேன். நன்றிப்பூச்செண்டு தோழர்!


3 Comments

Niraimathi · ஏப்ரல் 1, 2020 at 3 h 39 min

சிறப்பு, இனிய நல்வாழ்த்துகள்.

Kavibalatamil · ஏப்ரல் 1, 2020 at 10 h 13 min

நான் எதார்த்த கவிஞர். தற்பொழுது பருவத்தின் மிச்சத்தின் உச்சத்தால் “பள்ளி மர நிழல்” எனும் கவிதை நூல் எழுதியிருக்கிறேன். என் கவிதைகள் இந்த தமிழ்நெஞ்சத்தில் வெளியாக ஆவல்

Admin · ஏப்ரல் 6, 2020 at 11 h 46 min

ஆக்கங்களை அனுப்பவும். வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது

நேர்காணல்

தேயிலை தேசத்து சாமான்யனுடன்…

நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>

நேர்காணல்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி