ஒழுக்கம்

இயந்திர மாய்மாறி விட்ட உலகினில்
     இன்றைய குமுகாய மிழந்த தெத்தனை
இயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)
      இன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்!
உயரிய குமுகாய வளர்ச்சி யென்பது
     உன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்!
செயலிலு மொழுக்கத்தைக் காட்டும் மானிடர்
      செம்மையாய் வாழ்ந்திடுவர் வழிகாட் டி டுவரே!

எத்துறை கண்டிடினும் கையூட் டரசியல்
      எங்கணும் நாள்தோறும் வன்முறைப் பாலியல்
இத்தரை மாந்தரெலா மின்று துன்புறும்
      இழிநிலை வந்ததுவே யிழந்த பண்பினால்!
முத்தமி ழிலக்கியங்கள் முன்னி றுத்திய
      முதுமொழி பின்பற்றும் முறைதா னொழுக்கமாம்!
தத்துவம் பேசுவதால் பயனொன் றுமில்லையே!
      தன்னொழுக் கம்பேணினால் தலைகு னிவில்லையே!

பயிரினை வேலியது மேய்ந்தாற் போலவே
      பண்பிலா மாந்தர்கள் உறவுப் போர்வையில்!
உயிரினைக் காத்திடுவோ(ம்) ஒழுக்க மேன்மையால்!
      உரக்கவே யுரைத்திடுவோம் நீதிக் கல்வியால்!
துயிலுமிக் குமுகாயம் விழிக்க வேண்டுமே
      துரத்திடும் கேட்டினைத்தான் கரத்தி லடக்கிட!
பயிலுவோம் நல்லொழுக்கம் பண்பு மேவிட
      பாரினி லுயர்ந்திடவே தேவையே ஒழுக்கமே!

உயிரினும் மேலான ஒழுக்க மென்பது
      உண்மையில் தொலைந்துபோய்விட் டதன்றோ யிதனையு(ம்)
உயிர்க்கொலை யென்றேநாம் உரைக்க வேண்டுமே!
      உறவுகள் திரிந்தனவே யொழுக்கக் கேட்டினில்!
நயந்தரும் செல்வமெலாம் நாச மாகிடும்!
      நல்லொழுக் கமில்லையென்றால் நாடும் கெட்டிடும்!
பயன்தரு மறிவுரையைக் கேட்டு நடந்திடில்
      பண்பது வளர்ந்திடுமே பாரில் வென்றிட!

மு. மணிமேகலை

அக்டோபர் 2019
பக்கத்திலிருக்கும் அக்டோபர் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


1 Comment

கா.அமீர்ஜான்(AMEERJAANKAADHAR · அக்டோபர் 8, 2019 at 8 h 08 min

கவிதை இலக்கியம் விருப்பம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »

நேர்காணல்

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.

 » Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்  »