வாடா மலர்கள்
ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்
அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு
போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்
பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்
கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்
கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி
விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்
விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும்
தற்கொலைப்படை ராஜாக்கள் – தூக்குத் தூக்கிகளை
தூக்கிலிட்டு மார்தட்டி, என் மார் சுரந்த
பாலெல்லாம் நிலத்திற்கு திலகமிட்டு – சிவப்புப்
பாதையிலே கரைஞ்சயென் கற்பூரமே – நம்
நாட்டு காளைக்கும் வீரமுண்டு – அப்பப்பா
நாடெல்லாம் நீ விட்டுப்போன சுவாசக்காத்தில்
வீரக்குருதி துடிக்குதப்பா , காதல் ரோமியோக்களின்
வாசனை ரோஜாக்கள் உன் கல்லறைக்
கனவுக்கு காணிக்கையானதப்பா – பாரதத்தின்
காயப்பட்ட தேசத்துக்கு கல்கி மகன் – பிறந்தாச்சு ..!!
வாடா மலருக்கு. வாசனையும் பொறந்தாச்சு
வாழ்க! வாழ்கவென பாரத மைந்தனுக்கு
பேரிகை கொட்டியாச்சு…….!!!
பாரெல்லாம் ஒன்னாச்சு….!!!!
கவிதாயினி. விஜி வெங்கட்
ஹைதராபாத்.
8 Comments
selvakumari · மார்ச் 1, 2019 at 4 h 05 min
மிக அருமை
Saradha k. Santosh · மார்ச் 1, 2019 at 6 h 52 min
வாடா மலர்கள் .. மிக அருமை கவிஞர் விஜி வெங்கட் அவர்களே
.
வி. விஜயலெட்சுமி வெங்கட் · மார்ச் 1, 2019 at 11 h 36 min
தமிழ் தொடர்போடு என்றென்றும் இருக்க வேண்டும்.
Sarabass · மார்ச் 1, 2019 at 13 h 04 min
அருமை அருமை
தமிழ்மாமணி புலவர் வெ.அனந்தசயனம் · மார்ச் 1, 2019 at 13 h 17 min
மிகி அருமை
தமிழ்நெஞ்சம் நெஞ்சில்
மிஞ்சி நிற்கிறது !
வெல்க பணி !
என்றும் வேண்டும்
இன்ப அன்பு !
புதுநகர் செல்லத்துரை · மார்ச் 2, 2019 at 22 h 06 min
‘மீதமிருக்கும் முத்தம்’ எழுத்துப் பிழைகளால் தடக்கி விழுந்து, தொடர்ந்த ஆக்கங்களில் நிமிர்ந்து நடந்தேன்!
தமிழ்நெஞ்சம் வளர்கிறது.
பா.சே.ஆதவன் · மார்ச் 10, 2019 at 12 h 05 min
அருமையான ஆக்கம்… இனிய பாராட்டுகள்!
பா.சே.ஆதவன் · மார்ச் 10, 2019 at 12 h 06 min
அருமை ஆக்கம்… இனிய பாராட்டுக்கள்
நம்பிக்கை நாற்றங்கால் கவிதை….!!