மின்னிதழ் / நேர்காணல்

மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணியை ஆற்றுபவர்கள் மருத்துவர்கள்; எனவேதான் மருத்துவர்களை இறைவனுக்கு ஒப்பானவர்களாக நாம் போற்றுகிறோம். அந்த மருத்துவர்கள் மனிதகுலத்தை நேசிப்பவர்களாக இருக்கும்போது அவர்களது பணி மேலும் சிறக்கும். மனிதகுலத்தைத் தாண்டி உலகில் உள்ள உயிர்களையெல்லாம் நேசிப்பவராக அந்த மருத்துவர் இருப்பின் அவரது பணி நிச்சயமாகப் பாராட்டக் கூடியதாகத்தான் இருக்கும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல தாவர இனங்களின் மேல் அன்பு கொண்டு மரங்களை வளர்த்து அவற்றைப் பாதுகாப்பாக வளர்க்கவும் செய்யும் ஒரு மருத்துவரைத்தான் நாம் சந்திக்கின்றோம். தனது மருத்துவப் பணிகளுக்கிடையே சமூகம் நலம் பெற வேண்டி இதுவரை 10000 மரங்களுக்கு மேல் வளர்த்து வரும் மருத்துவர் சகோதரி திருமதி தமிழ் தென்றல் அவர்களிடம் கண்ட நேர்காணல் இதோ…

நேர்கண்டவர்:  
தமிழ்செம்மல் இராம வேல்முருகன்

ஜூலை 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
அரிமா மகளிர் சங்க நிர்வாகிகளுடன் மருத்துவர் தமிழ் தென்றல் அருகில் வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கு தமிழரசு மற்றும் பேட்டி கண்ட இராம வேல்முருகன் இடம் கல்லூரி வளாகம்

வணக்கம் அம்மா

தமிழ்நெஞ்சம் மின்னிதழுக்காகத் தங்களை நேர்காணல் செய்ய விரும்புகிறேன்

தங்கள் பெயர் தமிழ்த்தென்றல் என்று உள்ளதே இது தங்கள் பெற்றோர் இட்ட பெயரா அல்லது தாங்களே வைத்துக் கொண்டீரகளா?

ஆம். எனது தந்தையார் தமிழரசன் எனக்கு இட்ட பெயர் தென்றல். அப்பாமீது கொண்ட அளவுகடந்த அன்பின் அடையாள மாகவும், தமிழ், தமிழினம் மீதுள்ள எனது பற்றும், நான் ஒரு தமிழ்ப்பெண் என்பதை என் பெயரை பார்த்ததுமே தெரியும்போது ஏற்படும் பெருமிதமும் தமிழ் என்ற முன்னெழுத்தை எனது 26வது அகவையில் இணைத்துக்கொண்டேன்.

தங்கள் பெற்றோரைப் பற்றி கூறுங்களேன்

அப்பா PUC வரை படித்தவர்.. ஒரு ஒப்பந்தக்காரர்.. கம்யூனிசக் கொள்கையை கடைப்பிடித்தவர். தொழிலில் நேர்மையும், தொழிலாளர்களிடம் மனிதாபி மானதத்துடன் இருந்ததால் அதிகம் நட்டத்தையே சந்தித் தவர். அம்மா செயலட்சுமி SSLC வரை படித்தவர்..என்னையும், என் இளைய சகோ தரி ஜென்னியையும் சிறப்பாக வளர்த்த அன்புத்தாய்…

தங்கள் சொந்த ஊர் மற்றும் மாவட்டத்தைப் பற்றி..

எனது ஊர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்காவில் காவிரிக்கரையோரம் இருக்கும் ஒரு அழகிய சிறிய கிராமம்தான் மாதிரிமங்கலம்..

தாங்கள் விரும்பிப் படித்து மருத்துவர் ஆனீர்களா அல்லது பெற்றோரின் வற்புறுத்தலால் மருத்துவர் ஆனீரகளா?

ஆறாம் வகுப்பில் படிக்கும்போது அப்பா என் மனதில் விதைத்தது . நாளடைவில் மருத்துவராக வேண்டுமென்பது லட்சியமாகி விட்டது..

ஹோமியோபதி என்ற மருத்துவப் படிப்பைத் தாங்கள் தெரிவு செய்ய என்ன காரணம்?

12ம் வகுப்பு முடித்து Entrance exam முடிவு தெரியும்வரை எனக்கு ஹோமியோபதி பற்றி எதுவும் தெரியாது. நான் பெற்ற மதிப்பெண் என்னை ஹோமியோபதி படிக்க தகுதியானவளென்று அறிவித்ததால் இந்தப்படிப்பை நான் தேர்வு செய்தேன்…

பள்ளி மாணவிகளுடன் மரக்கன்றுகள் நடும் பணியில் மருத்துவர் தமிழ் தென்றல்

ஹோமியோபதி மருத்துவத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் தீர்வு உள்ளதா?

ஆம். இருக்கிறது. ஆனால் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால், இயற்கை யின் விதிகளுக்குட்பட்டே மருந்து வேலை செய்யும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் நோய்க்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் எனக் கூறப்படுகிறதே அது உண்மையா?

ஆம் . பல பிணிகளை ஹோமியோபதி முழுமையாக குணப்படுத்துமென்பது முற்றி லும் உண்மைதான்..

எந்தெந்த நோய்களுக்கு நிரந்தரமான தீர்வு ஹோமியோபதியில் உள்ளது?

ஆயிரக்கணக்கான நோய்களில் 75% சதவீதம் நிரந்தரமாக குணப்படுத்தலாம். உதாரணமாக அறுவை சிகிச்சை தேவைப் படும் தொண்டைசதை அழற்சி (Acute tonsillitis,), கால்ஆணி (Corns), சிறுநீரகக்கல் (Renal calculi), … போன்ற நோய்களை அறுவை சிகிச்சையின்றி, ஹோமி யோபதி மருந்துகள் மூலம் நிரந்தரமாக குணப்படுத்தலாம்.

ஹோமியோபதி மாத்திரைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளனவே. அதனை எவ்வாறு கையாள்வது?

கடினம்தான். மருந்துப்புட்டி மீது மருந்தின் பெயரை எழுதி ஒட்டிவிட்டு பிறகுதான் மருந்தை (Dilutions) சர்க்கரை உருண்டைகளில் சேர்க்க வேண்டும். குறிப்பிடப்படாவிட்டால் என்ன மருந் தென்று கண்டுபிடிக்க முடியாது.

தாங்கள் மருத்துவராகப் பணி யாற்றும்போதே சமூகநலன்களிலும் ஈடு பாடு உடையவராக உள்ளீர்களே? அந்த ஈடுபாடு எவ்வாறு ஏற்பட்டது?

Noble profession.. ஒரு மகத்தான தொழில்… மருத்துவம்.. படித்ததே மக்கள் பணி செய்யத்தான்.. எளிமையான குடும் பத்தில் பிறந்த எனக்கு வறுமையின் வலிகள் நன்றாகவே தெரியும். மருத்துவம் பயின்ற அரசுக்கல்லூரியில் மருத்துவம் பயிற்சி பெற்றபோது வறுமையின் கோடுகள் பதிந்த நோயுற்ற மக்களையே அதிகம் சந்தித்ததால், மக்கள்பணி செய்ய வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியது..

எம்மாதிரியான சமூகநலப் பணி களைத் தாங்கள் மேற்கொண்டு வருகிறீர்கள்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் குக்கிராமங்களுக்கு, சில தன்னார்வ நிறுவனங்கள், அரிமா குழுக்கள். மற்றும் நண்பர்கள் உறவினர் களின் உதவியோடு மருந்துகளோடு மருத்துவக்குழுவோடு சென்று, அங்கே வசிப்பவர்களின் வீட்டு வாயிலில் அமர்ந்து மருத்துவம் செய்துவிட்டு வருவோம் ..

மழைக்காக மரம் நடுகிறேன்

பறவைகளும் நானும் பகிர்ந்துண்ண பப்பாளி வளர்க்கிறேன் …

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக வளர்க்கப்படவேண்டிய மரங்களான மா, பலா தென்னை கொய்யா நெல்லி மரக்கன்றுகள் கொடுத்து வளர்க்க சொல்லுகிறேன்.

மரக்கன்று நடும் ஒரு விழாவில் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களுடன் மருத்துவர் தமிழ் தென்றல்

மரம்வளர்ப்பில் தங்களுக்கு ஈடுபாடு வர என்ன காரணம்?

இயற்கை வளங்களை கொள்ளை யடிப்பதோடு தமிழ் மக்கள் வாழமுடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும் அரசின் ஒரு திட்டமான டெல்ட்டா விளைநிலங்களை பாழாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தி னால் வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்கவே, மரமிருந்தால் மழை வரும் என்ற நம்பிக்கையோடு மரம் வளர்க்கிறேன்..

மற்றவர்களைப்போல் அல்லாமல் தாங்கள் பெரியமரக்கன்றுகளை அதாவது ஐந்து அடிக்குக்குறையாத உயரம் உடைய மரக்கன்றுகளை வழங்குகிறீர்கள் அதுமட்டுமல்லாது அவற்றைப் பாதுகாக்க இரும்புக் கூண்டுகளையும் வழங்கி வருகிறீர்கள். இந்த எண்ணம் எவ்வாறு தோன்றியது?

ஒரு அடி இரண்டு அடி மட்டுமே வளர்ந்த கன்றுகள் பைகளிலிருந்து பூமிக்கு மாற்றப்படும்போது, அதிக வெப்பம் அல்லது மழை இரண்டையுமே தாங்காது… அசைவப் பிரியர்கள் அதிகம் வாழும் நாட்டில் ஆடு மாடுகளுக்கா பஞ்சம்.. அவைகளிடமிருந்து காப்பாற்றிடவே பாது காப்பு கூண்டுகள்..

பெண்களை முன்னேற்றத் துடிக்கும் மருத்துவர் ஒரு குடும்பத் தலைவியை மரம்நடச்செய்த போது...

இதுவரை எவ்வளவு மரக்கன்றுகள் நட்டிருப்பீர்கள்?

கொடுத்தது வைத்தது என்று கணக்கு போட்டால் 10ஆயிரம் மரக் கன்றுகள். .

சமூக சேவைகளை ஆற்றுவதற்கான நிதியை எவ்வாறு திரட்டுகிறீர்கள்? அல்லது தங்கள் சொந்தச் செலவில் செய்கிறீர்களா

75% நண்பர்கள் மற்றும் உறவினர் கள், 25% என் பங்கு.

தாங்கள் நட்ட மரக்கன்றுகள் பெரிய மரமானபிறகு அவற்றைக் காணும் போது தங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்?

நான் உயிர்வாழ உயிர்வாயு கொடுத்த இயற்கை அன்னையிடம் நான் பட்ட கடன் தீர்ந்த திருப்தி வரும்… அந்த மரம் தரப்போகும் மழை , நிழல், குளிர்ச்சி, பூ, காய், கனி, மருந்துகள் உயிர்வாயு என பல நன்மைகளை நினைத்தால் மனம் பரவசமடைகிறது..

ஒரு பெண்ணாகச் சமூகச்சேவை ஆற்றுவதில் தங்களுக்கு ஏற்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவங்கள் குறித்து.

முதலில் எதிர்மறை.. என்னுடைய சமூக சேவை என்பது கடலில் கரைத்த பெருங்காயம் போலத்தான்.. மிகச்சிறிது..பிறருக்கு உதவ பொருளாதாரம் தேவைப் படும்போது மற்றவர்களிடம் அதற்கான உதவியை கேட்க தயக்கமாக இருக்கும்..குறிப்பாக ஆண் நண்பர்களிடம்..மறுத்து விட்டால் அவமதிப் பாகிடுமே என்ற எண்ணம்.. அவ்வளவுதான் …

ஒரு சமூக சேவகியாக., மக்களின் சின்ன சின்ன தேவைகளை மட்டுந்தான் பூர்த்தி செய்துள்ளேன். ஆனால் அதுவுமே அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தபோது என் மனம் நிறைவடையும்…

ஒரு நீண்டநாள் கனவும் உள்ளது..எங்கள் கிராமத்தில் இயங்கும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிக்கு ஒரு காரைக்கட்டிடம் கட்டித்தந்நால் பெரும் பாலான பிள்ளைகளை தமிழ்வழி கல்விக்கு மாற்றிடலாம்.. தனியார் பள்ளிகளில் படிப்பவர்களை திருப்பி கொண்டுவரலாம், அதன்மூலம் இரண்டு அரசு ஆசிரியப்பணி கிடைக்கும்… அதற்கான முயற்சிகளில் இருக்கிறேன்..

மற்றவை எல்லாமே மகிழ்ச்சியான அனுபவங்கள் தான்.

களப்பணியில் மரக்கன்றுகளை நடுவதற்குக் குழிகளைத் தோண்டும் பணியில் மருத்துவர்

கொரானா ஊரடங்குகாலத்தில் தங்களுடைய பணி எவ்வாறுள்ளது?

3500 மக்கள் தொகையுடைய எங்கள் கிராமத்தின் அத்தனை பேருக்கும், சிறுவர்கள் மற்றும் சில இளைஞர்களின் உதவியோடு கபசுரக்குடிநீர் இரண்டு சுற்று வழங்கப்பட்டது .

நண்பர்களின் உதவியோடு 200 குடும்பங்களுக்கு மட்டும், குடும்பத் தலைவர் இல்லாத, ஊனமுற்று, நோயுற்று வேலை செய்யமுடியாதவரின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, அரைகிலோ பருப்பு, அரைகிலோ எண்ணெய் வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு புத்தரிசிகூட வாங்க முடியாத குடும்பங்கள் ஏராளம்.. சில குடும்பங்களுக்கு புத்தரிசி யோடு, புத்தாடையும் கொடுத்து, அவர் கள் ஆனந்தமாக பொங்கல் கொண்டாடிய போது மனம் நெகிழ்ந்தது…

தொலைநோக்கு சிந்தனையோடு, 750 குடும்பங்களுக்கு தலா ஒரு தென்னை, மாங்கன்று, கொய்யாச்செடி வழங்கப் பட்டது..

மருத்துவச் சேவையில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க இயலாத அனுபவம் …

மருத்துவத்தில் நம் தேசம் எத்த னையோ புதுமைகளை கண்டிருந்தாலும், அது நலிந்தோர்க்கு தேவைப்படும்போது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி யிருக்கும் மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும்போது, அங்கே குழந்தைகளும் வளரிளம் பெண்களும் ரத்தச் சோகை நோயிலும், பல்வேறு தொற்று நோய் களாலும் பாதிக்கப்பட்டு முறையான மருத்துவம் கிடைக்காமல் வாழ்வதை பார்த்தபொழுது, எதிர்காலத்தில் அவர் களின் உடல் வலிமை குறித்து மனதில் எண்ணற்ற கேள்விகள் எழுந்து மறக்க முடியாமல் செய்துவிட்டது..

மகளிர் தின விழாவில் மருத்துவர் தமிழ் தென்றலைக் கௌரவிக்கும் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன்

சமூகப் பணிகளில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க இயலாத அனுபவம்…

சமூகப்பணிக்கு போகும்போது நான் சந்தித்த, நேர்மையான முறையில் எதை யாவது செய்து தன் வாழ்வில் ஏற்றத்தை பார்க்க முயற்சிக்கும் பெண் களுக்கும், மனித ஆற்றலில் 50%ஐ கைக்குள் வைத்திருக்கும் பெண்களின் மனித ஆற்றல் பெரும்பாலும் வீட்டிற்குள் முடங்கியிருப்பதை பார்க்கு ம்போது.., மதுவுக்கு அடிமையான ஆண் களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தன் பிள்ளை களுக்கும், தனக்கும் பயன்படுத்திய உடைகளை கேட்டபோது கண்கள் நிரம்பியது… இவர்களின் வாழ்க்கையை சரிசெய்ய நாம் என்ன, எப்படி செய்யலாம் என்ற எண்ணம் தொடர்ந்து மனதில் ஓடுகிறது.. மறப்பதெப்படி?

நீங்கள் நட்ட மரக்கன்றுகள் மரங் களாக வளர்ந்து சிரிக்கும்போது தங்களுக்கு ஏற்படும் மகிழ்வை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

என் தாயென நேசிக்கும் பூமித் தாயின் ஆடையில் ஏற்பட்ட ஒரு ஓட்டையை நிரப்பிட என்னால் முடிந்த தென்று மட்டற்ற மகிழ்ச்சி கொள்வேன். அவளுக்கு போர்த்திட இன்னும் நிறைய ஆடைகளை உருவாக்குவதில் எனக்கு பெருமகிழ்ச்சியே…

தாங்கள் நட்ட இடத்தில் மரக்கன்று கள் சரியாகப் பராமரிக்கப்படாத போது தங்கள் மனநிலை எப்படிஇருக்கும்? அதை எப்படிக் கடந்து செல்வீர்கள்?

வீட்டு உபயோகப் பொருட்களை வைக்க காரைவீடு போதும், ஆனால் அதனுள் மனிதர் வாழ உயிர்வாயு வேண்டும். குடியிருக்க காரை வீடு கட்டும் ஒரு பொறுப்புள்ள குடும்பம், மூச்சுவிட உயிர்வாயு தரும் மரங்களை நட்டு வளர்க்க மறந்து விடுகிறார்கள். அவர்கள் வீட்டு வாயிலில் நான் நடும் மரங்களை பராமரிக்காமல் விட்டு, அச்செடி அழியும் போது அவர்களின் சுயநலமும், குறுகிய எண்ணமும் வெளிப்பட்டு விடுகிறது. மனிதர்களை புரிந்துகொள்ள கிடைத்த மற்றொரு வாய்ப்பு இது என்று வேறிடத்தை தேடிப் போய்விடுவேன்.. ஆனாலும் மிகவும் பிடித்த ஒரு பொருளை, வைத்த இடத்தில் காணாமல் போனால் ஏற்படும் அந்த வேதனை சில நாட்களுக்கு நெஞ்சில் நிற்கும் …

இக்கால மாணவர்களுக்கும் இளைஞர் களுக்கும் தாங்கள் கூறும் அறிவுரை

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியில் கைபேசியும், மதுவும் புகுந்துவிட்டதால் கல்வியின்மையும் கலாச்சார சீரழிவும் ஏற்பட்டு மீண்டும் ஓர் அடிமைச்சமூகம் உருவாகும் சூழல் நிலவுகிது. சிறிதளவும் சமூக அக்கறையில்லாத இளைய சமுதாயம் அதற்கான எதிர்மறையான விளைவை எதிர்காலத்தில் சந்திப்பார்கள். அதை தவிர்க்க கொஞ்சம் சமூக. விழிப்புணர்வு பெறவேண்டும்.

பெண்களுக்குத் தங்கள் அறிவுரை

மக்கள்தொகையில் 50% இருந்தும், உயர்கல்வி பெற்றிருந்தும், பெரும்பாலான பெண்களின் மனித ஆற்றல் குடும்ப பராமரிப்பிற்கு மட்டுமே செலவாகி, நாட்டின் முன்னேற்றறத்திற்கு பெரிய தடைக்கல்லாக இருக்காமல் பெண்கள் அனைத்து துறைகளிலும் 50% பணிபுரியும் நிலையை ஏற்டுத்த பெண்கள் முயற்சிக்க வேண்டும்.

இத்தகைய சிறப்புடைய மருத்துவர் தமிழ் தென்றல் அவர்களின் மருத்துவர் பணியும் சமூகப் பணியும் சிறக்க வேண்டி வாழத்தி விடைபெற்றோம்.
n


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

கவிக்கோ துரை வசந்தராசன்

மின்னிதழ் / நேர்காணல்

பாவேந்தர் பரம்பரை விழுது என புலவர் புலமைப்பித்தன் அவர்களால் அடையாளப் படுத்தப் பட்டவர் கவிக்கோ துரைவசந்தராசன் அவர்கள். தந்தைப் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைவழி ஈர்க்கப்பட்டு இன்றும் புரட்சிகரமான எழுத்துகளால் தன்னை நிலை நாட்டிக்கொண்டிருப்பவர்.தாம் வசிக்கும் மாதவரம் பால்பண்ணைப் பகுதியில் 1984ல் தொடங்கப்பட்ட பண்ணைத் தமிழ்ச்சங்கம் மூலம் எண்ணற்ற இலக்கியவாதிகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 » Read more about: கவிக்கோ துரை வசந்தராசன்  »

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 8

எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென். சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்... பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது. அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும் கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.

நேர்காணல்

அத்திப்பூ நீரை லத்தீப் நேர்காணல்

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம். தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் மூலம் தமிழ்நெஞ்சம் வாசகர்களைச் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நெஞ்சம் வாசகர் என்ற முறையிலும் எனது மனமார்ந்த நன்றி.

 » Read more about: அத்திப்பூ நீரை லத்தீப் நேர்காணல்  »