
மார்ச் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
வாடா மலர்கள்
ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்
அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு
போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்
பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்
கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்
கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி
விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்
விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும்
தற்கொலைப்படை ராஜாக்கள் – தூக்குத் தூக்கிகளை
தூக்கிலிட்டு மார்தட்டி, என் மார் சுரந்த
பாலெல்லாம் நிலத்திற்கு திலகமிட்டு – சிவப்புப்
பாதையிலே கரைஞ்சயென் கற்பூரமே – நம்
நாட்டு காளைக்கும் வீரமுண்டு – அப்பப்பா
நாடெல்லாம் நீ விட்டுப்போன சுவாசக்காத்தில்
வீரக்குருதி துடிக்குதப்பா , காதல் ரோமியோக்களின்
வாசனை ரோஜாக்கள் உன் கல்லறைக்
கனவுக்கு காணிக்கையானதப்பா – பாரதத்தின்
காயப்பட்ட தேசத்துக்கு கல்கி மகன் – பிறந்தாச்சு ..!!
வாடா மலருக்கு. வாசனையும் பொறந்தாச்சு
வாழ்க! வாழ்கவென பாரத மைந்தனுக்கு
பேரிகை கொட்டியாச்சு…….!!!
பாரெல்லாம் ஒன்னாச்சு….!!!!
கவிதாயினி. விஜி வெங்கட்
ஹைதராபாத்.