
மேலுள்ள ஜூலை 2018 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
<div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div>
<script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script>
தந்தைக்கு ஒரு தாலாட்டு!
பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!
தாலாட்டிப் பாலூட்டிப்
பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
ஆளாகி நீஉயர
அறிவுருத்த மறப்பதில்லை!
உயிரிருந்தால் போதுமென்ற
உணர்வுடனே இருப்பதில்லை!
உயிருக்குள் உனைவைத்த
உள்ளுணர்வைச் சொல்வதில்லை!
தந்தையிவர் எனக்காட்டும்
தாய்மட்டும் உயர்வில்லை!
சிந்தையிலே சிறைவைத்த
தந்தைக்கோ நிகரில்லை!
.
பாவலர் அருணா செல்வம்
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
3 Comments
selvakumari · ஜூலை 1, 2018 at 10 h 05 min
பாவலர் அருணா செல்வம் கவிதை மிக அருமை.
Mullai · ஜூலை 1, 2018 at 12 h 54 min
கவிதை சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.
A.Arputha Roslin · அக்டோபர் 1, 2018 at 5 h 37 min
பாவலர் அருணா
தந்தைக்கு நிகர் யாருமில்லை
அருமை..