கவிதை

மௌனம்

மௌனமே மொழியானது
உனக்கும் எனக்கும்
மந்திர விழி பேசுது
மயக்கம் கிறக்கம்
சுந்தர கவியானது
இதய இயக்கம்
சேர்ந்திட முடியாதது
வாழ்வியல் குழப்பம்
கனவினில் கூத்தாடுது
பேசாத அன்பின் நெருக்கம்
விடிந்ததும் மனம் ஏங்குது
புரியாத வார்த்தையின் விளக்கம்
உறவினில் கலந்தாயே
சிறகுகள் விரிக்க
விறகாக்கி எரிப்பாயோ
இந்த வீணையை உணராமல்
இல்லை
உலகாக்கி கேட்டு மகிழ்வாயோ
இந்த ஊமையை
சபை ஏற்றி மகிழ்வாயோ

 » Read more about: மௌனம்  »

கவிதை

எழுதத் துடிக்கும் மனசு…!

எழுதத் துடிக்கிறது என் மனசு..
எழுத
காகிதம் காணாமல்
கனக்கிறது மனசு..
மெய்யான ஒன்றை
பேனா மையால் தான் எழுத வேண்டுமா..?
என்
இதயக் காகிதத்தில்
இரத்தத்தால் எழுதி வைத்த
கிறுக்கல்களை
மொழிபெயர்க்கிறேன்..!

 » Read more about: எழுதத் துடிக்கும் மனசு…!  »