ஹைக்கூ ஓர் அறிமுகம் – 10

தொடர் 10 வார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று. கவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன. அத்தகைய வார்த்தைகளை நாம் கவிதைகளில் கையாளும் போது கவனமாக கையாளுதல் அவசியம். ஒருமை, பன்மை வார்த்தைகளைக் கையாளும் போதும் வார்த்தைச் சொற்றொடர்களை அதற்கு தகுந்தாற்போலக் கையாள்வது முக்கியம். மாடு ஓடுகிறது…என்பது சரி மாடுகள் ஓடுகிறது… என்பது தவறு. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 09

தொடர் 09 ஹைக்கூவில் வார்த்தைக் கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவு அந்த வார்த்தைகளை கையாள்வதும் முக்கியத்துவம்பெறுகிறது. வார்த்தைச் சிக்கனமே ஹைக்கூவில் முக்கியமானதாகும். எந்த ஒரு வார்த்தையையும் அனாவசியமாக ஹைக்கூவில் பிரயோகிக்கத் தேவையில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் அக்கவிதையின் பொருளானது மாறாமல் இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட வார்த்தையை நீங்கள் தாராளமாக நீக்கி விடலாம். இரவில் பெய்யும் மழை விடியும் வரை தொடர்கிறது மின்சாரத் தடை. இந்த ஹைக்கூவில் ”பெய்யும்” என்ற Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 08

தொடர் 08 கவிதையில் கற்பனை முற்றிலும் இருக்கக்கூடாது. உவமையோ.. உருவகப்படுத்துவதோ.. ம்ஹூம் அதுவும் ஆகாது. வார்த்தைகளிலும் சிக்கனம் தேவை.  அடிகளோ மூன்று அடி தான் இவ்வளவு கட்டுப்பாடு தந்து கவிதை எழுதுங்கள் எனில் மலைப்பாய்தான் இருக்கும். ஆனால் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பியல்புகளே இது தான். இதில் ஹைக்கூ கவிதைக்கான வடிவமைப்பு மூன்றடி என பார்த்தோம். ஆனால் ஜப்பானில் ஹைக்கூ மூன்றடியாக இருக்கும் என்பதில் உறுதியில்லை. ஏற்கனவே நாம் கண்டுள்ளோம் ஜப்பானிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 07

தொடர் 07 மராட்டிய வீரன் சிவாஜியைப் பற்றி படிக்கும் போது இந்த கதையையும் நீங்கள் படித்திருக்கலாம். ஒருநாள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்த சிவாஜி, இரவு வேளையில் மழையில் சிக்கிக் கொள்ள அந்த கிராமத்தில் இருந்த ஒரு கிழவியின் இல்லத்தில் ஒதுங்க நேரிடுகிறது. கிழவி அன்போடு அவனை வரவேற்றதோடு அன்றைய இரவை அங்கு கழித்துச் செல்ல அனுமதி தருகிறாள். கூடவே தான் தயாரித்த சூடான கோதுமைக் களியினை உண்ணவும் தருகிறாள். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 06

தொடர் 06 கவிஞனை மட்டுமின்றி வாசகனையும் கவர்ந்திழுக்கும் ஒரு கவிதை வடிவம். கவிஞனின் எண்ண ஓட்டங்களோடு வாசகனின் எண்ண ஓட்டங்களையும் உறவாட வைக்கும் ஒரு கவிதை வடிவம் ஹைக்கூ. வாசிக்க கூடிய ஒவ்வொரு முறையும் பல கோணங்களைக் காட்டி நகரும் அற்புத ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு. இத்தகைய ஆற்றலை கொண்டிருப்பதனால்தான் ஜப்பானில் தோன்றிய இந்த கவிதை வடிவம் மேற்கத்திய நாடுகளில் பெரும் புகழை எளிதில் பெற்று விட்டதெனலாம். இந்தியாவில் காலம் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 05

05 ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம் எனலாம். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இதனை சிந்தர், வாமனக் கவிதைகள் என்கிறார். கூடவே ஹைக்கூ வெறும் வடிவம் என்றே பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அது உள்ளடக்க தளத்திலும் மரபு வழிவந்த நுட்பமான பரிமாணங்களையும் கொண்டது. ஜென் புத்தமத தத்துவப் பார்வையும், ஜப்பானிய வாழ்க்கை முறையும் சார்ந்த ஒரு நுட்பமான கவி வடிவம் ஆகும். நாம் தமிழில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 04

04 ஒரு சின்ன விதைக்குள் தான் மிகப் பெரிய விருட்சம் ஒளிந்திருக்கிறது. அது போல தான் ஹைக்கூ.. தனக்குள் பல கோணங்களையும் வாசிக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது. ஜப்பானில் எடோ மரபு காலத்தில் துவங்கி… டோக்கியோ மரபு காலத்தில் பெரும் புகழடையத் துவங்கிய ஹைக்கூ.. ஜப்பானில் இன்று வரை 5, 7,5 என்ற அசை கட்டுப்பாட்டில் எழுதப்படும் மரபுக் கவிதையாகும். ஜப்பான் எழுத்துக்கள் சீனப் பாரம்பரிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 03

03 ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம்.மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனத் தமிழில் சொல்லப்படுவதெல்லாம் ஹைக்கூவிற்கும் பொருந்தும்..மூன்று அடிகளில் வாமன அவதாரம் எடுத்த ஒரு இலக்கிய வடிவம் ஹைக்கூ.. 1916 இல் பாரதி சுதேசமித்திரனில் ஹைக்கூ குறித்து கட்டுரை எழுதியும் கூட..தமிழ் கவிஞர்களும்..தமிழ் இலக்கிய உலகும் இவ்வடிவத்தை பெரிதாய் கவனத்தில் கொள்ளவில்லை. அதன் பின் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே 1966 ஜனவரியில் கணையாழி Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 02

02 ஹைக்கூ ஜப்பானில் ஜென் புத்தமதத் துறவிகளால் ஜென் சார்ந்தும்.. அவர்களது வாழ்வியல்.. இயற்கை சார்ந்தும் எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம்.. அக்கவிதை ஜப்பானில் பிறந்த விதம் மற்றும் அக்கவிதையின் முன்னோடிக் கவிஞர்கள் குறித்தும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஹைக்கூ..ஜப்பானில் பிறந்திருந்தாலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பையும்.. புகழையும் பெற்ற ஒரு கவிதை வடிவமாக இருப்பதற்கு எளிய வடிவ அமைப்பேயாகும்.. அது மட்டுமல்லாது வாசகனையும் சிந்திக்கத் தூண்டி விடும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 01

ஹைக்கூ எனும் சொல் இன்று கவிஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. மூன்றடிகளில் எழுதப்படும் இதன் எளிய தோற்றமும்..உள்ளார்ந்த பொருள் வெளிப்பாடும்..கவிஞனோடு வாசகனையும் தன்பால் ஈர்க்கின்ற ஆற்றலும் ஹைக்கூவை பலரும் எழுதவும்..ரசிக்கவும் செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல ஹைக்கூ கவிதைகள் பலரால் இன்று ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது..ஒரு புதிய கவிஞரின் முதல் தொகுப்பு ஹைக்கூவாகவே இருக்கிறது..ஹைக்கூ சின்னதாய் தோற்றமளிக்கும் பெரிய அற்புதம்.. அத்தகைய ஹைக்கூவை எழுதுகின்ற கவிஞர்களுக்கு இக்கட்டுரை சிறப்பான பல Read more