கவிதை

நெஞ்சத்தில் வைத்துப் போற்று!

இமிழ்கடல் உலகமதே கிடைத்த போழ்தும் இன்னாத தீயவழி என்றால் ஏற்கான் அமிழ்தமிதே கிடைத்திட்ட போழ்தும் அதை அனைவருக்கும் கொடுத்துண்ணும் அரிய பண்போன் தமிழ்மொழியில் பாடிவந்த புலவருக்கோ தன்தலையைத் தந்துதமிழ் காத்த சான்றோன்

கவிதை

தரணி வாழ்த்திட வா!

நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு செம்மொழி நம்மொழி எனக்கூறு செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு முது மொழி நம் மொழி மூல மொழி பிறந்தன இதன்வழி பல மொழி இதற்கிணை ஏது ஒரு மொழி செகத்திற் அறிந்த தமிழ் மொழி

கவிதை

மறவாதீர்

இளங்கதிர் எழவும் இறைகொளக் கருதி இணைந்தெழும் புள்ளினம் போல வளமுடன் வாழ மிகுபொருள் நாடி வையகம் சுற்றிடும் நண்பீர்! உளங்கொள வேண்டி உமக்கிது புகன்றேன்! உணருமின் அன்புடன்! நீர்தாம்

கவிதை

உழவன்

சேறு மிதித்தால் சோறு கிடைக்கும் உலகுக்கு உரைத்தவன் உழவன்! - அந்த உண்மை அறிந்தே உள்ளம் மகிழ்ந்தே வணங்கி நிற்பவன் தமிழன்! எழுந்து ஒளிரும் ஆதவன் அருளைத் தொழுது வாழ்பவன் உழவன்! - அவன் உழுது விளைத்த உணவைப் பெற்றே உலகில் வாழ்பவன் மனிதன்!

கவிதை

மஞ்சத்தின் பரிசு

வண்ணச் சேலைகட்டி வந்து நின்று, தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு, பின்னல் சடையாடக் கோபங் கொண்டு, தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள். வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு, பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,

கவிதை

மறவாதீர்

மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு மகிழ்வுறும் வண்டினம் போலக் கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு களிபெற வலம்வரு பெரியீர்! நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம் நாடிய நாடெது வெனினும் தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்!

By செவ்வேள், ago
கவிதை

விதி

சொத்து! சொத்து!! என்றே நாட்டை முற்றும் சுரண்டி மூட்டை கட்டிச் சுற்றும் மனிதா! சுழலும் விதியால் அற்றுப் போகும் அமைத்த வாழ்வே! கண்ணில் பட்ட காட்சிகள் தம்மை எண்ணிப் பார்த்தே எழுதினேன் கவியே!

கவிதை

மூன்றாம் காதல்

பத்தாம் வகுப்பு படிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தவளுக்காய் எழுதிய காதல் கடிதத்தை அவன் அப்பாவை ? படிக்க வைத்துப் பார்த்த முதல் காதல் !

கவிதை

விதி

துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர்
நன்றே விதியால் நலிந்தோம் என்றே!
இன்பம் உற்றோர் ஏனோ விதியை
எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை!
மதியைக் கொண்டு வறுமை போக்கி
சதியை வெல்லல் விதியின் செயலே!

 » Read more about: விதி  »