சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »

கவிதை

தம்பி… 7

தொடர் எண் 7.

தலைப்பு : இன்சொல்.

ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே
நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய்
தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால்
வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே.

 » Read more about: தம்பி… 7  »

கவிதை

தம்பி… 6

தொடர் எண் 6.

தலைப்பு : வீரம்

வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய்
ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள்
ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு
வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு.

 » Read more about: தம்பி… 6  »

கவிதை

தம்பி… 5

தொடர் எண் 5.

தலைப்பு : நட்பு.

கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே
உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே
பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும்
தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய்.

 » Read more about: தம்பி… 5  »

கவிதை

தம்பி… 4

தொடர் எண் 4.

தலைப்பு : ஏமாறாதே.

மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும்
கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை
ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள்
மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே.

 » Read more about: தம்பி… 4  »

கவிதை

அனுபவம்

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம் வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை... ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்... இப்படி எத்தனை காலம்தான் ஏமாறப் போகின்றோமோ... சிந்தனை செய்யும் சக்தி இருந்தும் அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்.. கொஞ்சம் அதிகம்தான்...

கவிதை

தம்பி… 3

தொடர் எண் 3

தலைப்பு : தம்பி நலமா ?

உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும்
என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே
நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா
ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே.

 » Read more about: தம்பி… 3  »

கவிதை

தம்பி… 2

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான் சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.

கவிதை

தம்பி… 1

திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய் இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய் கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய் துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.

கவிதை

தம்பி… அறிமுகம்

நான்.

பேச்சில் தமிழே உயர்வாக பிறந்தேன் தஞ்சை மாவட்டம். மூச்சில் முழக்கம் தமிழாக. முயன்றேன் கற்க இலக்கணமே. வீச்சில் தமிழே உரையாக வீறு கொள்வேன் கவியரங்கம். தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே தேன்த மிழையே பரப்பிடுவேன். கற்றேன் தமிழை இனிதாக கனியின் சுவையை உணர்ந்தேனே. நற்ற வைச்சொல் வேன்நன்றாய் நம்த மிழின்வு யர்வினையே. பற்றெ னப்பற் றினேன்தமிழை. பாக்கள் வடித்தே மகிழ்ந்தேனே. உற்ற உறவாய் தமிழர்கள் உயர்வும் பெறவே உதவிடுவேன். கவியாய் மலர்ந்த சிந்தனைகள் கற்றால் வாழ்வில் உயர்ந்திடவே. கவிவி தைகவி தைநூலே. கற்றோர் வாழ்த்த மகிழ்ந்தேனே. செவியில் தமிழால் இன்புறவே சேவை என்றும் தமிழுக்கே. புவியில் இவனும் தமிழுக்காய் புரிந்தான் தொண்டு வாழ்த்திடவே. கவிஞர் கோவிந்தராசன் பாலு தொடரும்    (மேலும்…)