இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 2

தம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் ... அவளது எழில் கொஞ்சும் மேனியழகு ... அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் ... பாருங்கள் ... '' பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும் வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் '' அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள். [ மேலும்… ]

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 1

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை;

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 1  »

பகிர்தல்

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

சூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன்,

 » Read more about: ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு  »

தன்னம்பிக்கை

வார்த்தை வன்மை

நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே
நாவினாற் சுட்ட வடு.

 » Read more about: வார்த்தை வன்மை  »

தெரிந்ததும்-தெரியாததும்

அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி

Grund Schule Klauberg in Solingen

Germany, Solingen  இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது.

நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை.

 » Read more about: அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி  »

By Admin, ago
கட்டுரை

மன்னிப்பு

“தவறு செய்வது மனித இயல்பு
மன்னிப்பது இறை இயல்பு”

மனிதராய் பிறந்த நாம் அனைவருமே தவறு செய்திருக்கின்றோம், செய்கின்றோம். தவறு செய்யாத மனிதன் இல்லை. இவ்வாறு தவறு செய்யும் நாம் மன்னிப்பு கேட்டிருக்கின்றோமா?

 » Read more about: மன்னிப்பு  »

கட்டுரை

சீ… தனம் புலம்பெயர்விலுமா!

பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்
மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்
விதை போட்டது யாரென்று புரியாத போதும்
புலம்பெயந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம்

பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா!

 » Read more about: சீ… தனம் புலம்பெயர்விலுமா!  »

By கௌசி, ago
கட்டுரை

இன்றைய உலகில் தடுமாறும் இளையோர்

19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன்.

 » Read more about: இன்றைய உலகில் தடுமாறும் இளையோர்  »

ஆன்மீகம்

பயணச் சுற்றுலா

நாம் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள். சுற்றுலா செல்லும் யாரும் சென்ற இடத்திலையே தங்கி விடுவது இல்லையே. எங்கிருந்து கிளம்பினோமோ அவ்விடத்திற்கே திரும்பிச் செல்வோம். அதுப்போலவே இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடிந்ததும் நம்மைப் படைத்து அனுப்பியவரிடமே திரும்பி செல்வோம்.

 » Read more about: பயணச் சுற்றுலா  »