கவிதை
கவிதை துளிகள்
எழுதி முடித்த கவிதைகளின் முதல் இரசிகனாய் என் பேனா கசங்கியிருந்த காகிதம் பட்டமாகியது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காணாமல் போன குழந்தை கிடைத்து விடுகிறது சுவரொட்டிகளில்
எழுதி முடித்த கவிதைகளின் முதல் இரசிகனாய் என் பேனா கசங்கியிருந்த காகிதம் பட்டமாகியது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காணாமல் போன குழந்தை கிடைத்து விடுகிறது சுவரொட்டிகளில்
அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !
தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி,
நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு செம்மொழி நம்மொழி எனக்கூறு செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு முது மொழி நம் மொழி மூல மொழி பிறந்தன இதன்வழி பல மொழி இதற்கிணை ஏது ஒரு மொழி செகத்திற் அறிந்த தமிழ் மொழி
பத்தாம் வகுப்பு படிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தவளுக்காய் எழுதிய காதல் கடிதத்தை அவன் அப்பாவை ? படிக்க வைத்துப் பார்த்த முதல் காதல் !
உயிரைப் பறித்துக்கொண்டு சென்றாய் - உன் மௌனத்தின் செய்திகளை அறிந்துக்கொள்ள உயிரைப் பின் தொடர்ந்து மனமும் சென்றுவிட்டது.
வண்டுகடி பூ நிற மதிப்பெண் அட்டை நீட்டி " கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க சாரு " அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால் மடமடத்து நிற்கும் பாவாடை கசக்கி நிற்பேன்.
ஆல்பத்தில் சிரிக்கும் உறவு முகங்கள் ஆபத்தில் உதவிகேட்க அவசரமாய் இறுகும் மருந்து தடவி ஆறாத காயம் தந்தையின் கண்ணீர் துளிபட காணாமல் போகும்
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு…
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு…
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு…