கவிதை

துணிவு

சாவுக்குப்பயந்த கோழை உன்னுயிர் துப்பாக்கியின் பின்னால் வீர மரணத்தை விரும்பிய வீரனாக‌ நான் உன் துப்பாக்கியின் முன்னால்!!

கவிதை

ஒப்பனை கலைகிறேன்

நட்பும் சொந்தமும்... சிதறிப் போனது இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம் நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள கடைசியாய் அழுது கொள்கிறேன்

கவிதை

தாயும் தாரமும்

தாய்மைக்கென்று தனி புகழில்லை // விலங்கும் தாயாகும் வியப்பில்லை // பெண்ணுக்குத்தாய்மை இயல்புநிலை // தாயா தாரமா பிரிப்பது பொருத்தமில்லை//

கவிதை

உயிர் மூச்சு உள்ளவரை

அழகான கண்ணிமைகளில் ... அழுகைப்பூ பூத்திருக்கு !... விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் ... விண்ணிலே பூத்திருக்கு !... தனித்த வெண்ணிலவாய் ... வெள்ளிகளின் மத்தியிலே .. உண்ணா நோன்பிருந்து ..நீ , உடல் வருத்தி லாபமென்ன ?...

கவிதை

ஓர் ஊமையின் பாடல்!

செயற்கையாகிப் போன புன்னகையைக் கண்டு தாழ்வு உணர்ச்சிகள் நீளுகின்றன! விரக்தியின் உச்சப் படியில் நின்று கதறி சோகமாய் முகாரி இசைக்கிறது என் இயலாமை!

புதுக் கவிதை

இரட்டை மலர்

மொட்டிரண்டுப் பூத்திருக்கு
முறுவலையே காட்டிருக்கு,
கட்டிவெல்லக் கன்னமதில்
கனிமுத்தம் நாட்டிருக்கு.

சின்னஞ்சிறு பூக்களிங்கே
சித்திரமாய்ச் சிரித்திருக்கு,
வண்ணமலர்க் கோலமிட்டு
வானமதைப் பறித்திருக்கு.

பட்டுப்போன்ற மென்மையிலே
பளபளப்பாய்ப் பார்த்திருக்கு,

 » Read more about: இரட்டை மலர்  »

கவிதை

காற்றாடியின் இலட்சியப் பயணம் …

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது உறுதி கொண்டு விண்ணை நோக்கியது உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது நம்பிக்கை ஒளி கொந்துதலால் தும்பிக்கை பலம் உந்துதலால் எம்பி எம்பி உயர எழுந்தது எதிர்படு இடர்களை கடந்தது எதிர்நோக்கு உச்சியை எய்தது

கவிதை

பொங்கலோ பொங்கல் ..!

ஏர் தந்த சீதனத்தை பார் கண்ட எளியவர்க்கு கார் கொண்ட உள்ளத்தால் சீர் கொண்டு பகிர்ந்தளித்து பொங்கிடும் அவர் புன்னகையில் புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!

கவிதை

நிலம்வணங்கும் பொங்கல்

மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது