நூல்கள் அறிமுகம்

மகரந்தம் தேடும் மலர்கள் & புத்தகம் சுமக்கும் பூக்கள்

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து, தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும் ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

கவிதை

வண்டமிழை வாழ்த்திடுவோம் தோழர்களே!

உழைக்கின்ற வன்கைகள் உயர்வுகளைப் பெற்றிடவே விழைந்தெழுந்து ஒற்றுமையாய் வென்றிடுவோம் தோழர்களே! அலைபாயும் கடல்தனிலே அணையாத விளக்காவோம்! நிலையற்றோர் வாழ்ந்திடவே நெறிபடைப்போம் தோழர்களே!

கவிதை

புகலிடம் தாராயோ?

உலவும் தென்றல் குளிரெனவே - என் உள்ளச் சோலையில் பூத்தவளே! இலவு காத்த கிளிபோல எனை ஏங்க வைத்தே சென்ற தெங்கே? பிரிவென் கின்ற புயற்கரத்தால் - உயர் பாசச் சுடரை அணைத்துவிட்டுச் சருகாய் என்றன் வாழ்வதனைத் - தரையில் சரியச் செய்தே சென்றதெங்கே?

நேர்காணல்

எழிலரசியைப் பாடிய எழில்வேந்தன்

அன்னை தெரசா அவர்களை கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு துறவி என்று மட்டுமே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை என்பதுதான் அவரது நோக்கமாக இருந்ததே அன்றி, மதம் மாற்ற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் அமைந்ததே இல்லை. அவர், தன் வாழ் நாளில் எவரையும் மதம் மாற்றவில்லை, அது தன் நோக்கமும் அல்ல என்பதை பல முறை தெளிவுபடுத்தியும் இருக்கிறார். “மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றிட வேண்டியதுதான் முக்கியம்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவரது சேவையைப் பெற்றவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர் சேவையைத் தொடங்குவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் பணியாற்றிய கோயிலின் மிக அருகாமையில்தான் அமைந்திருந்தது.

புதுக் கவிதை

புதுமைப் பெண்ணிவளா?

அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !

தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி,

 » Read more about: புதுமைப் பெண்ணிவளா?  »