கவிதை

என் மூக்குத்தி தேவதைக்கு …

தன்னை ஒரு வானமாகத் திறந்து எண்ணங்களை நட்சத்திரங்களாக விதைத்து அந்த நிலாவைக் குடியேற்றும் அன்பு நடவடிக்கைதான் அவனின் கடிதம் '' என் மூக்குத்தி தேவதைக்கு ...

கவிதை

மனசுக்குள் சுமந்திருப்பேன்

நேசமுடன் ஒரு வார்த்தை நேற்றே நீ சொல்லியிருந்தால் வஞ்சிக் கொடியுன்னை வாரியணைத்திருப்பேன்.. பாசமுடன் ஒரு பார்வை பார்த்துச் சொல்லியிருந்தால் பைங்கிளியே உன்னை பூப்போல தாங்கியிருப்பேன்..

கவிதை

காலம் வரும்வரை காத்திருப்பாய் …

கன்னத்து குழியழகு கார்மேக முடியழகு வண்ணத்தில் நீ இருக்காய் வானழகு வடிவமடி. எண்ணத்தில் நீ இருக்காய் ஜென்மத்தில் நீ வாழ்வாய்! வில்லழகு நெற்றியிலே பொட்டழகு மின்னுதடி வட்டமிட்ட உன்முகம் பூ அழகு புன்னகையும் எனைக் கிரங்கச் செய்யுதடி!

கவிதை

முரண்

மாக்கோலம் போடுவது மருதாணி இடுவது பூச்சரம் தொடுப்பது கோயிலுக்குப் போவது இப்படி எதுவுமே என்னிடத்தில் இல்லாததால் விடிவேதும் இல்லாது வேதனைப்படுகிறேனாம்.

கவிதை

கணவன் மனைவியாய் …

சந்தேகச் சகதியில் நீ சறுக்கி விழுந்திடாதே ! சகதி சரியாகிவிடும். . சந்தேகமோ .. வாழ்வை .. சருகாக்கி விடும் ..! உள்ளங்கள் இணைவதால் ! உணர்வுகள் உயிர்பெரும் .. கன்னம் சிவந்திட வாழ்வில் களிப்பும் வளம்பெறும் ..!

கவிதை

கை(ஐ)விரல் மருதாணி

மருதாணி கொஞ்சம் தடுமாரி - உன் கன்னம் சிவப்பாகிப் போனதோ! மஞ்சல் முக மதியே நீ கண்கள் மறைத்தாய் நீ வெட்கம் நிறமாகி செக்கச்சிவப்பான உன் பொழிவதனை மருதானி கடன் வேண்டுமென்று கன்னம் தழுவாமல் கரங்களில் கவசம் செய்கிறாய்!

கவிதை

மருமகள்

மாமியார் உறவினை தாயேன ஏற்றிடும் மக்களில் இன்னுமோர் மகளவள்! - சீதனம் சுமந்தவள் புக்ககம் வருகையில் அகந்தையை செருப்பென மாற்றிடும்நல் குணத்தவள்! சுட்டிடும் வார்த்தைகள் மனதெல்லாம் எரித்தினும் சோகத்தை மறைத்துமே சிரிப்பாள் - கன்னம் வழிந்திடும் நீரினில் காயங்கள் போக்கிடும் வல்லமை படைத்துமே இருப்பாள் !