கவிதை
அறிவோமே
பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் அருளால் சிறந்தாலும்
மின்னும் கல்வி இல்லாரை
மேன்மை யாக எண்ணாரே!
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏனைக் கலைகள் பொன்னாகும்!
மண்ணில் நன்றாய் வாழ்தற்கு
வளரும் கல்வி பெறுவோமே!
பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் அருளால் சிறந்தாலும்
மின்னும் கல்வி இல்லாரை
மேன்மை யாக எண்ணாரே!
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏனைக் கலைகள் பொன்னாகும்!
மண்ணில் நன்றாய் வாழ்தற்கு
வளரும் கல்வி பெறுவோமே!
பேரீச் சம்போல் சுவைகூட்டி, பெரியோர் சொன்ன நெறிகாட்டி, மாரி பொழியும் குளிராக மனமே சிலிர்க்கக் கவிதீட்டி, பாரி வள்ளல் கொடைபோல வாரித் தமிழைப் படைத்திடுமே! பாரீச் நகரில் பைந்தமிழைப் பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!
மானம் காக்கும் அறநெஞ்சம் - உலக மனத்தைக் கவரும் அறநெஞ்சம் ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் - நலம் இயற்றும் கடமை கெடாநெஞ்சம். நீதி வகுத்த நன்நெஞ்சம் - சங்க நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம் ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் - வேறு அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?