கவிதை

தமிழ்நெஞ்சம் அமின் வாழ்க!

கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! - மன்னுபுகழ் பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி இன்னும் கலையுறுக ஈங்கு! அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும் இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! - நன்வாழ்கை அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்! பொன்னை அகமேந்தும் பூத்து!

கவிதை

முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ் அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக் கண்ணீர்க் கடலெனக் காண்! ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத் தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து பாடுகுயில் தேடும் பறந்து!

கவிதை

புகலிடம் தாராயோ?

உலவும் தென்றல் குளிரெனவே - என் உள்ளச் சோலையில் பூத்தவளே! இலவு காத்த கிளிபோல எனை ஏங்க வைத்தே சென்ற தெங்கே? பிரிவென் கின்ற புயற்கரத்தால் - உயர் பாசச் சுடரை அணைத்துவிட்டுச் சருகாய் என்றன் வாழ்வதனைத் - தரையில் சரியச் செய்தே சென்றதெங்கே?

கவிதை

பாசக்கடல்

துன்பக் கடலினிலே - நான் துயர்படும் வேளையிலே! இன்பமென வருவாள் - என் எண்ணத்திலே நிறைவாள்! பாலில் சுவைசேர்த்தே - என்னைப் பாரடா கண்ணாவென்பாள்! நூலில் இழைபோல - அவள் நுண்ணிய அறிவுடையாள்!

கவிதை

சுரதா

சோகமில்லா மன்னனெவன்? அசோகன் என்பார்! சுடுநெருப்பின் தலைவன்தான் ஞாயிறென்பார்! மேகத்தின் எச்சில்தான் மழையாம்! மதுவை அருந்தாமல் மயங்குவதே மாலை நேரம்! ஊகத்தை மொழிபெயர்த்தால் உண்மை யாமோ உன்னுடைய மொழிபெயர்ப்பே பிள்ளை என்பார்! வேகத்தில் எப்போதும் எழுதிடாமல் விரும்புங்கால் எழுதுகிற கவிஞன் என்பார்!

கவிதை

மைக்காரி

கண்டும் காணாக் கண்மணியே - போகும் கார ணமென்ன பொன்மணியே ! வண்டு விழியே மோகினியே - நீ வாராய் அருகே மாங்கனியே ! மலரும் வண்டும் பேசுதடி - என் மனதில் காதல் வீசுதடி !

கவிதை

நெஞ்சத்தில் வைத்துப் போற்று!

இமிழ்கடல் உலகமதே கிடைத்த போழ்தும் இன்னாத தீயவழி என்றால் ஏற்கான் அமிழ்தமிதே கிடைத்திட்ட போழ்தும் அதை அனைவருக்கும் கொடுத்துண்ணும் அரிய பண்போன் தமிழ்மொழியில் பாடிவந்த புலவருக்கோ தன்தலையைத் தந்துதமிழ் காத்த சான்றோன்

கவிதை

மறவாதீர்

இளங்கதிர் எழவும் இறைகொளக் கருதி இணைந்தெழும் புள்ளினம் போல வளமுடன் வாழ மிகுபொருள் நாடி வையகம் சுற்றிடும் நண்பீர்! உளங்கொள வேண்டி உமக்கிது புகன்றேன்! உணருமின் அன்புடன்! நீர்தாம்

கவிதை

உழவன்

சேறு மிதித்தால் சோறு கிடைக்கும் உலகுக்கு உரைத்தவன் உழவன்! - அந்த உண்மை அறிந்தே உள்ளம் மகிழ்ந்தே வணங்கி நிற்பவன் தமிழன்! எழுந்து ஒளிரும் ஆதவன் அருளைத் தொழுது வாழ்பவன் உழவன்! - அவன் உழுது விளைத்த உணவைப் பெற்றே உலகில் வாழ்பவன் மனிதன்!

கவிதை

மஞ்சத்தின் பரிசு

வண்ணச் சேலைகட்டி வந்து நின்று, தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு, பின்னல் சடையாடக் கோபங் கொண்டு, தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள். வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு, பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,