கவிதை

சங்கே முழங்கு

PicsArt_1419573449514தேனாய்  சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய்  கனியமுதாய்
மானாய்  மயிலாய் மரகதமாய்
— மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய்  வளியாய் வயல்வெளியாய்.

 » Read more about: சங்கே முழங்கு  »

கவிதை

மோகத்தை அழைக்கவா

தோகைமயில் நடந்தால் போதும் தொப்புள்குழி தெரியவா வேண்டும் ? வாகைப்பூ மலர்ந்தால் போதும் வயிறுமுழுதும் தெரியவா வேண்டும் ?

கவிதை

நெருடல்

மனது நம்மை மயக்கும் மாயை; தனது என்று தாவும் பாவை. பிணக்கு கொண்டு பிதற்றும் சாது; கணக்கு உண்டு காணும் போது. நினைப்பதை அடைய நீண்டு வளரும்; வினைப்பயன் கண்டு வெம்பித் தளரும். அணையாய் நின்று அறமாய் வாழும்; கனையாய் வந்த கவர்ச்சியில் வீழும்.

கவிதை

தாயும் தாரமும்

" தாயுடன் தாரமும் ------ தக்கதோர் வாழ்வினைச் சேயுடன் சேர்ந்ததே ------ செல்வம் தரும்வாழ்க்கை . நோயுடன் நின்றிடில் ------ நோகாமல் சேவைசெய்யும் தாயுடன் தாரமும் ------ தருவரே நேசத்தை ."

மரபுக் கவிதை

அழகு மலர்

விழியாலே கதைசொல்லும்
வெள்ளிநிலவே! உந்தன்
மொழிசொல்லும் கவிதையுமே
மெளனம்தானோ? வீணாய்ப்
பழிபோடும் எண்ணத்தின்
பார்வையிது, விழியில்
வழிகின்ற கவர்ச்சியிலே
வழிமாறும் மனமும்தான்.

கன்னத்தில் கைவைத்தக்
காரிகையே!

 » Read more about: அழகு மலர்  »

கவிதை

தமிழர் திருநாள் திராவிடர் திருநாளல்ல‌

தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம் தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும் தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில் திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்

மரபுக் கவிதை

சொல்வாய் நீயே!

மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன்
மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே!
கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன்
கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே!

அதிகாலைத் துயிலெழுந்த அழகியே –

 » Read more about: சொல்வாய் நீயே!  »

கவிதை

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே !

கவிதை

வண்டமிழை வாழ்த்திடுவோம் தோழர்களே!

உழைக்கின்ற வன்கைகள் உயர்வுகளைப் பெற்றிடவே விழைந்தெழுந்து ஒற்றுமையாய் வென்றிடுவோம் தோழர்களே! அலைபாயும் கடல்தனிலே அணையாத விளக்காவோம்! நிலையற்றோர் வாழ்ந்திடவே நெறிபடைப்போம் தோழர்களே!

கவிதை

பாவேந்தனே மீண்டும் வா வேந்தனே

சாதிமதப் பேய்களுக்கு எதிராய் நின்றான் சவக்குழியைத் தோண்டிஅதைப் புதைப்போ மென்றான்! பாதிவழிப் பயணத்தில் துணைஇ ழந்த பாவையர்க்கு மறுவாழ்வை அமைப்போ மென்றான்! நீதிவழிக் காதலுக்குத் தடைகள் செய்யும் நீசருக்கு எரிமலையாம் இவரின் தோற்றம்! நாதியற்ற இனம்போல தமிழர் வீழ்ந்தார் நடுவழியில் இவன்பாட்டால் எழுந்து நின்றார்!