மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2019

உலகமெங்கும் பெண்ணியம் பேசும் நேரத்தில், மென்மையாக நீங்கள் பெண்ணியத்தை ஒத்துக் கொள்ளாததன் காரணமென்ன..

சுவாரசியமான கேள்வி .. முதலில் “மென்மையாக” எனும் உங்கள் குறிப்பீடு அழகாக இருப்பதுடன் என் மீதான உங்கள் புரிதலைப் புரிய வைக்கிறது.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2019  »

புதுக் கவிதை

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

நீலவண்ண தாவணியில்
நெஞ்சையள்ளும் பேரழகில்
கருஞ்சாந்து பொட்டிட்டு
கண்பறிக்கும் அழகாலே

செந்நிர இதழ்மீது
கருந்துளி மச்சத்தில்
காளையரை மயக்குகின்ற
கச்சிதமான அழகாலே

செவ்விதழ் இதழிணைத்து
தித்திக்கும் மொழிப்பேசி
தேன்சொட்டும் சுவையினில்
தேவதையின் அழகாலே

வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
என்னருகில் வந்தாளே
வான்மகள் நிலவாக
ஔிர்ந்தேதான் நின்றாளே

உச்சரிக்க வார்த்தையின்றி
உதட்டினை கட்டிப்போட்டு
ஊர்மெச்சும் அழகோட
உருவாகி வந்தாளே

பேரழகு யாதென்று
அறியாதோர் அறிந்திடத்தான்
பிரம்மனோட பிறப்பையும்
எஞ்சியே எழில்கொண்டாளே

தோகைமயில் அழகினையும்
மிஞ்சியே வந்தாளே
பஞ்சவர்ண கிளியாக
பிரபஞ்சத்தில் மலர்ந்தாளே

எழில்நிறைப் பேரழகே
என்மனம்நிறை ஓரழகே
உனக்காக நானானேன்
எனக்காக நீயாவாய் ?

 » Read more about: வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2019  »

By Admin, ago
கட்டுரை

யாளி – 2

யாளியை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இது, அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும். யாழிகளின் வகைகள்:- ••••••••••••••••••••••••••••••••• சிம்ம யாளி மகர யாளி கஜ யாளி ஞமலியாளி பெரு யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்..!  » Read more about: யாளி – 2  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2019

பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தாலும் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இந்தியாவிற்கு வந்து நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதுமே உண்டு. நான் இணையதளம் மூலமாக ஒரு கலைக் கழகத்தைப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன்.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2019  »

By Admin, ago
ஆன்மீகம்

முருகவேள் புகழ்மாலை

திருச்செந்தூர்  கந்தர் கலி வெண்பா
சண்முக கவசம்
பகை கடிதல்
குமாரஸ்தவம்
வேல் வகுப்பு

இவைகள் உள்ளடக்கிய சிறுதொகுப்பு நூல்

தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.

 » Read more about: முருகவேள் புகழ்மாலை  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.

 » Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம்  »

By Admin, ago