இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3

பாடல் – 03

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2

பாடல் – 02

தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில்.

(பொருள்):

தன் குணம் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1

நூல்

பாடல் – 01

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

(காப்பு)

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.

(பொருள்):

கண் அகல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

முன்னுரை

தமிழ் மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டிகட்கு முன்னரே தோற்றமுற்றிலங்கும் உயர் தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவி வளர்த்துக்கொள்ள காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிய நாட்டரச்சராம் பாண்டியருக்கே உரியது. இங்ஙனம் பாண்டியர் நிறுவிய சங்கம் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்  »

மரபுக் கவிதை

முகத்தொகை

(தரவு கொச்சகக் கலிப்பா)

புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
      மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
   

 » Read more about: முகத்தொகை  »

மரபுக் கவிதை

அவளென் அதிகாரம்

(கலிவெண்பா)

சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும்
கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப்
பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால்
மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே
எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத
ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள்
நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின்
றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல்
நின்றுவிட்டேன்;

 » Read more about: அவளென் அதிகாரம்  »

கவிதை

அவளென் பா

விருத்தப்பா

தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள்
….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை
சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ
….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்!
தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும்
…..

 » Read more about: அவளென் பா  »

கவிதை

அப்துல் கலாம்

(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015)

விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும்
… விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை
அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை
… அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர்
நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே

 » Read more about: அப்துல் கலாம்  »