மின்னிதழ் / நேர்காணல்

பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் இன்று தமிழில் கதைகளோ, கவிதைகளோ எழுத எண்ணி, அதை நூலாக்கும் வழி தெரியாது தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எழுத்துத் துறையில் நல்லதொரு பாதையைக் காட்டும் சிறப்பான பணியினை ஆற்றிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டின் கொடுந்தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 150 நூல்களை வெளியிட்டு, பல கவிஞர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறது.. இதன் வளர்ச்சியில் நிர்வாகியாக இருந்து முன்னெடுத்துச் செல்லும் முனைவர் லட்சுமிப்ரியா அவர்களும் அவரது தாயார் உமா அபார்ணா அவர்களும் இந்நிறுவன வளர்ச்சிக்கு தங்களை முழுமூச்சுடன் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் எனில் அது மிகையன்று. இவர்கள் வாயிலாக பல இல்லத்தரசிகளும், புதிய எழுத்தாளர்களும் தங்களது எழுத்தினை புத்தகமாக்கி மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த சிறப்புக்குரியவர். ஆங்கிலத்தில் நூலொன்றையும் வெளியிட்டு இருக்கிறார். ஆங்கிலத்தில் தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

இவருடன் இணையம் வழி நடைபெற்ற கலந்துரையாடல்களை நமது தமிழ்நெஞ்சம் வாசகர்களுக்காக இங்கு தருவதில் மகிழ்கிறேன்.

சந்திப்பு  : அனுராஜ்

ஜனவரி 2022 இரண்டாவது இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
ஜனவரி 2022 இரண்டாவது இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
மலேசிய மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வாசித்தபின் எடுத்த புகைப்படம். அருகில் அந்நாட்டின் எழுத்தாளர்.
TNCPCR உறுப்பினரான டாக்டர் சரண்யா ஜெயக்குமார் அவர்களுடன்.
தாய்லாந்த்தில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்ததற்கு கிடைத்த அங்கீகாரம்

உங்களின் இளமைக் காலம் எங்கு எப்படி கழிந்தது..?

மிக எளிமையாகச் சொல்லவேண்டு மென்றால் என்னுடைய இளமைக்காலம் முழுவதும் நூலகத்தில்தான் கழிந்தது. எனக்கு நண்பர்கள் அவ்வளவாகக் கிடையாது அதனால் புத்தகங்கள் தான் எனக்கு எல்லாமாகவும் இருந்தது.

இலக்கியத்தின் மீதான பற்றுதல் எப்போது நிகழ்ந்தது..?

சின்ன வயசுலேர்ந்து எங்க அம்மா புத்தகங்கள் படிப்பதைப்பார்த்துருக்கேன். எங்க அம்மா படிப்பதைப்பார்த்து எனக்கும் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் வந்தது. எங்க அம்மா பாலகுமாரன் சாரின் தீவிர ரசிகை அதனால் நானும் பாலகுமாரன் சார் புத்தகங்கள் படித்து வளர்ந்தேன்.

ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற தாங்கள், தமிழ் இலக்கியத்தின் பேரில் கொண்டுள்ள ஈடுபாடு குறித்து..?

இந்தக்கேள்வியே தேவையில்லை! நான் ஒரு தமிழ்ப்பொண்ணு ஆங்கிலக்கல்வி படித்திருந்தாலும் அம்மாவை யாருக்காவது பிடிக்காம போகுமா? அதனால தமிழ் இலக்கி யங்கள் மீது எனக்கு சிறு வயதி லிருந்தே ஈடுபாடு உண்டு அது இப்போ திடீர்னு வந்தது கிடையாது. ஆங்கில இலக்கியம் படித்ததால் அது எனக்கு தமிழில் கவனிக்காமல் விட்டுப்போன விஷயங் களை கண்டறிய உதவியது. அந்த மாதிரி சிலவிஷயங்கள் நம்ம தமிழில் இருக்கு ஆனால் நாம ஏன் அதுக்கு முக்கியத்துவம் குடுக்கறதில்லைன்னு என்னைக்கேள்வி கேக்க வெச்ச சில விஷயங்கள் இருக்கு. இப்போ அறிவியல் புனைக்கதைகளை எடுத்துக்கிட்டோம்னா நிறைய அறிவியல் புனைக்கதைகளை திரு. சுஜாதா அவர்கள் எழுதி இருக்கிறார். ஆனால் தமிழில் படம்னு பார்த்தோம்னா நாம விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் அறிவியல் புனைவுப்படங்கள் இருக்கு. அதுதான் நான் சொல்ல வர்றேன். ஆங்கிலத்தில் நூறு படங்களுக்குப் பத்து படங்கள் அறிவியல் புனைவுப்படங்களாக இருக்கும்போது தமிழில் ஏன் இவ்வளவு குறைவா இருக்குன்னு தோணுது. அதுக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கறேன். அதேமாதிரி இந்த சமூகத்தின் பிணைப்புகள் நிறைய நம்மகிட்ட இருக்கு. அது ஒருவிதத்தில் பார்த்தா அதுதான் நம்ம கலாச்சார சூழலை நிர்ணயிக்குது. சிலசமயம் அந்த சூழலை உடைக்க வேண்டியிருக்கு அதுக்கு எனக்கு ஆங்கில இலக்கியம் துணை நிற்கிறது, அப்படின்னு நான் நினைக்கிறேன்.

இதுவரையில் தங்களது நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை..?

பேக்கிடெர்ம் டேல்ஸ் 2020 ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதுக்கான விதை என்னோட சின்னவயசுலயே விழுந்ததுதான். நான் நிறைய முறைகளில் இந்த நிறுவனம் தொடங்க முயற்சி செஞ்சேன் ஆனால் அது ஒரு பெரிய இரும்புக்கதவு போல இருந்தது. அத்தனை எளிதா அது எனக்குத்திறக்கல. எழுத்தாளாராகணும்னு நிறைய ஆசைகளோட இருக்கறவங்கதான் எங்களுக்கு குறிக்கோள். ஒண்ணும் வேண்டாம் அவங்க கதைகளை எங்களுக்கு அனுப்பினா போதும். கதைகள் நன்றாக இருந்ததுன்னா அவங்களுக்கு ஒரு பைசா செலவில்லாம நாங்க அந்தக்கதைகளை வெளியிடுவோம். அது யாராக இருந்தா லும் சரி நல்ல கதைகளோடு எங்களை அணுகினா நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். இதுவரை எங்கள் நிறுவனம் மூலம் நூற்றி முப்பது புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. பத்து மொழிகளில் நாங்கள் வெளியிட்டிருக்கோம்.

தங்கள் நிறுவனம் வாயிலாக சாதிக்க நிர்ணயித்திருக்கும் இலக்கு என்ன..?

ஒரு ரெண்டு திட்டம்னு இல்லை. பலத்திட்டங்கள் இருக்கு. இது வரைக்கும் நாங்க நிறைய புத்தகங்கள் வெளியிட்டிருக்கோம். யோசிச்சுப்பாருங்க! புத்தகங்கள்தான் ஒரு நாட்டோட பொக்கி ஷங்கள் இல்லையா? ஆனால் புத்தகங்கள் எழுதற எழுத்தாளர்களோட நிலமையைப் பார்த்தீங்கன்னா அன்னிலேர்ந்து இன்னிக்கு வரை மாறவே இல்லை இல்லையா? ஒருசில எழுத்தாளர்கள் தவிர அவங்க என்னிக்குமே பணக்காரர்களா இருந்ததில்லை. இந்த நிலை மாறணும். உண்மையைச்சொல்லணும்னா அரசாங்கம் நல்ல எழுத்தாளர்களைத் தத்து எடுத்துக்கணும். எப்படி விளையாட்டு வீரர்களைத் தத்து எடுத்துக்க றாங்களோ அந்தமாதிரி எழுத்தாளர்களையும் தத்து எடுத்துக்கணும். இந்த மாதிரி பல விஷயங்கள் யோசிச்சுக்கிட்டே இருக்கறதுனால பேக்கிடேர்ம்டேல்சோட ஆசைன்னு பார்த்தீங் கன்னா சினிமாவுக்குள்ள போறது தான். ஏன்னா சினிமாதான் அவங்களுக்குத் தேவையான அதிர்ஷ்டத்தைக்கொடுக்கும், ஒரு நிலையான வாழ்க்கையைக்கொடுக்கும். வேற வேலைகளை செய்துக்கிட்டே கிடைக்கற நேரத்துல எழுதணுங்கற அவங்க நிலைமையை எங்களால கொஞ்சம் மாத்த முடியும். முக்கியமா என்னன்னா அவங்களுக்கு எழுதுவதற்கு அமைதியான ஒரு இடத்தை கொடுக்கவேண்டும். ஒரு எழுத்தாளரா என்னால புரிஞ்சுக்க முடியுது. குறைஞ்ச இடத்துல நிறைய சத்தங்களோட அவங்க எழுதறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குப்புரியுது. குடும்பத்தினர்கள் இந்த எழுத்தை எழுத்தாளர்களைப் பாராட்டி ஊக்குவிக்காத நிலைமைதான் இன்னிக்கு இருக்கு. எப்பொழுதும் சமைக்கற சத்தம், குழந்தைகள் சத்தம், அவ்வப்போது காலிங் பெல் அடித்து வரும் தொந்தரவுகள் இதெல்லாம் என்னால் சகிக்க முடியாத தொந்தரவுகள் அதனால அதுக்காகவே ஒரு ரிசார்ட் மாதிரி எழுதணும்னு நினைக்கிறவங்க வந்து எழுதறதுக்கான ஒரு இடம் அதை பேக்கிடெர்ம்ஸ் மூலமா கட்டித்தரணும் அங்க பெரிய பெரிய எழுத்துக்கள், நிறைய அருமையான சிந்தனைகள் உருவாகணும்ங்கறதுதான் எங்களோட ஆசை, பார்ப்போம்.

தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவு படுத்த இயலுமா..?

எதிர்காலத்திட்டம்னா தமிழ்ல ஏதாவது புதுமையைப் புகுத்தணும்னு பொதுவா எல்லாரும் சொல்றதுதான் ஆனால் அது அப்படிக்கிடையாது. தமிழ்ல புதுமையை ஏற்படுத்தணும்னா தொழில்நுட்பரீதில ஒரு மாற்றம் வரணும். உதாரணத்துக்கு மதன் கார்க்கி சார். எனக்கு அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவர் தொழிநுட்ப ரீதில தமிழை எப்படி மாத்தலாம், தமிழை எப்படி ஆப்ல கொண்டு வரலாம்னு இப்படி பல விஷயங்களை ரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காரு. நான் அவரை எனக்கு ஒரு முன்மாதிரியா வெச்சுருக்கேன். இப்போ தமிழில் பாண்டில் வேலை பார்க்கணும்னா வெறும் ஒரு முப்பது பாண்ட் தான் இருக்கு. அதனால இந்த மாதிரி சில விஷயங்களை நாம முறியடிக்கணும் ஏன்னா தமிழ் அப்படிப்பட்ட ஒரு மொழி. அத்தனை கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து, பேசிக்கிட்டிருக்கற ஒரு மொழி அது. அப்படி இருக்கும்போது உங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலே உங்களுக்கு உதவிகள் கிடைக்கணும்னா அதுக்கு நிறைய பேர் தமிழைப்படிக்க ஆரம்பிக்கணும். நிறைய பரிசுகளை நம் தமிழ் வாங்கணும். புக்கர் அவார்டை தமிழ்நாட்டிலிருந்து வாங்கணும்கறது பேகிடெர்மசோட ஒரு பைத்தியக்காரத்தனமான ஆசை. அதை நாங்க அடைய முடியுமான்னு கூட எங்களுக்குத்தெரியலை. ஆனால் எனக்கு புக்கர் படிச்சதுலேர்ந்து ஏன் தமிழனால் ஒரு புக்கர் அவார்ட் கூட வாங்க முடியலைங்கற கேள்வி இருந்தது. ஒருவேளை பேகிடெர்ம் டேல்ஸ் அதுக்கு பதில் சொல்லும். அதை நோக்கித்தான் நாங்க பயணிக்கிறோம். நோபல் பரிசு எடுத்தீங்கனா இவ்வளவு பெரிய நாட்டுல ஒரே ஒரு நோபல் வாங்கி இருக்கோம். அதுவும் எங்கேயோ ஒரு ஓரத்துல. ஏன்? தமிழ்நாட்டுல அறிவாளிகள் இல்லையா? தமிழ்நாட்டுல ஏன் வாங்க முடியலை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்றதுக்காகவே பேகிடெர்ம் டேல்சை ஆரம்பிச்சோம். அதாவது ஒரு எழுத்தாளரா நான் மட்டும் எழுதிக்குவேன், நான் மட்டும் சந்தோஷமா இருப்பேன் அப்படிங்கறது கிடையாது. என் கூட இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து பயணிக்கணும். எல்லாராலயுமே எல்லாத்தையும் அடைய முடியுமான்னா? அதை உறுதியா சொல்ல முடியாது ஆனால் எங்க தரப்புலேர்ந்து ஒருத்தராவது சாதிச்சாக்கூட நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். இதுதான் எங்களோட எதிர்காலத்திட்டம்.

மலப்புரம் அரசு கலைக்கல்லூரி, கேரளா.
விழாவொன்றில் கிடைத்த அங்கீகாரம்.
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் நடந்த விழாவில்..
கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது. நடந்த விழாவில்..
யூனிட்டி மகளிர் கல்லூரி, மன்ஜோரி விழாவில் ..

தங்களின் தமிழார்வத்திற்கு காரண மானவர் எனில் யாரைக் குறுப்பிடு வீர்கள்..? ஏன்..?

நான் தமிழை நேசிக்க காரணமே எனது தாயார் தான். அவர் தான் நான் செய்யும் சமூக, இலக்கிய பணிகளுக்கு முழுதும் துணைநிற்கிறார்.

தங்களது நிறுவனம் வாயிலாக இப்போது செய்து கொண்டிருக்கும் இலக்கியம் சார்ந்த வேறு பணிகள்..?

மற்ற பணிகள் எனில்..
கல்லூரி மாணவர்களுக்கு க்ரியேட்டிவ் எழுத்து பயிற்சி அளித்துக் கொண்டி ருக்கிறோம். முக்கியமாக டார்ஜிலிங், பூடான், இந்தோனேஷியா, மலேஷியா, நம்நாட்டின் பல பகுதிகளில். பல நாடுகளில் இலக்கிய கூட்டங்களில் இது குறித்து பேசியும் உள்ளேன். தற்போது நமது நிறுவனம் பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான இலக்கியம் சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் செய்து தருகிறது.

தங்களின் மொழிபெயர்ப்பு பணி குறித்து..?

மொழி பெயர்ப்பு எனில்,
எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களின் பங்குக்கறியும் பின்னிரவுகளும் எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களின் மரநிற பட்டாம்பூச்சி , இவை இரண்டும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. முராகமி அவர் களின் ஸ்புட்னிக் ஸ்வீட் ஹார்ட் விரைவில் தமிழில் வெளி வரவிருக்கிறது. நீலம் தோய்ந்த புதினம் எனும் பெயரில் ஒரு கதை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேக்கிடெர்ம் டேல்ஸ் இதுவரை கடந்துவந்த பாதையில் சாதித்திருப்பது..? இனி சாதிக்க நினைப்பது..?

இதுவரை 150க்கு மேற்பட்ட கதைத் தொகுப்பு, 10 கவிதைத் தொகுப்புகள், சிறுவர் கதைகள், மற்றும் சிறார்கள் எழுதிய கதைத்தொகுப்புகள், வெளியாகி உள்ளன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வந்துள்ளது.

நமது நோக்கம்…

மதம், இனம், மொழி பேதமற்ற இலக்கிய பணிகள் Pachydermtales இது ஒரு பெரிய குடும்பம். எங்களுக்கும், எழுத்தாளர்களுக்குமான உறவு புத்தகம் வெளிவந்தவுடன் முடிவடைவதில்லை. எப்போதும் தொடர்ந்து கொண்டிருப்ப தையே விரும்புகிறோம்.

இதுவரை பெற்ற விருதுகள் குறித்து..?

தாய்உள்ளம் வழங்கிய இளம் தொழிலதிபர் விருது. சிறந்த ஆராய்ச்சி விருது ஆசிய நிறுவனத்தால் தாய்லாந்தில் வழங்கப்பட்டிருக்கிறது. ராஜ்கோட்டில் சக்தி கல்வி நிறுவனம் வழங்கிய சமூகப்பணிகளுக்கான விருது. இதை தவிர்த்து, உலக மனித உரிமை தளத்தில் இலக்கியத்திற்கான தூதராக அங்கீகாரம் வகிக்கிறேன்.

இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளின் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பணிபுரியும் நிலை குறித்து..?

அவசியம் தேவையான ஒன்று. நம்முடைய பாரம்பரியமிக்க பெருமைகளை வெளிப்படுத்தும் களம் அதுவே. நம்முடைய மொழி சிறப்பு வாய்ந்தது. அதனை ஆய்வு கட்டுரைகளாக நான் பல வெளிநாடுகளில் சமர்ப்பித்திருக்கிறேன்.

17 சர்வதேச மாநாடுகளில் கட்டுரை கள் சமர்ப்பித்துள்ளார். 23 ஆய்வுக் கட்டுரை களை வெளியிட்டுள்ளார். நேபாளம், பூடான், தாய்லாந்த், இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளதோடு, தாய்லாந்தைச் சேர்ந்த ஆசிய நிறுவனம் வாயிலாக சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதினையும் பெற்றிருக்கிறார். ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் எழுதியிருப்பதோடு, தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மொழிகளில் இதுவரை 150 நூல்களுக்கும் மேலாய் புத்தகங்களை இவரது பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

– அனுராஜ்

ஜனவரி 2022 முதல் இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

1 Comment

அனுராஜ் · ஜனவரி 11, 2022 at 2 h 41 min

அருமையான வடிவமைப்பில் வெளியிட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.

 » Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ  »

மின்னிதழ்

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம்

நேர்காணல் :  பொன்மணிதாசன்

தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?

 » Read more about: வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.