மின்னிதழ் / நேர்காணல்

நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின்

சேனையூர் சப்றீன் நீங்கள் உங் களைப் பற்றிய அறிமுகத்தை எங்களது வாசகர்கள் நெஞ்சத்தை தொட்டே இனிதே ஆரம்பியுங்களேன்?

எனது பெயர் சஹாப்டீன் முஹம்மது சப்றீன் நான் கிழக்கு மாகாணத்தின் அம் பாறை மாவட்டதில் அட்டாளைச்சேனை எனும் ஊரில் வசித்து வருகிறேன் நான் சேனையூர் சப்றீன் எனும் புனைப்பெயரில் கவிதைகள், பாடல்கள், ஆய்வுக்கட்டுரைகள் என எழுதி வருகிறேன் அதுமட்டுமல்லாது இணைய தளங்களில் உள்ள எழுத்து.கொம் கவியுலகப் பூஞ் சோலை, ஒரு கவிஞனின் கனவு மற்றும் அக்னிச் சிறகுகள் தமிழ்பேரவை போன்ற தளங்களிலும் குழுமங்களிலும் தொடராக எழுதி வருகிறேன். அதுமட்டுமல்லாது சுயாதீன ஊடகவியலாளராகவும் தற்போது பொது ஊடகங்களில் பேசப்படாத செய்திகளை தொலைபேசி ஊடகவியலாளராக நவீன முறையில் மக்கள் செய்தி PEOPLE NEWS ஊடகத்தின் முகாமையாளராகவும் பணியாற்றுகிறேன் எனது குடும்ப பின்னனி பற்றி கூறப் போனால் எனது தந்தை சஹாப்டீன் தாய் றகுமத்தும்மா சகோதரர் ஜெசீல் (ஆசிரியர்) சஜீத் சகோதரி சபானி ஆகிய ஆறு உறுப்பினர்களை கொண்ட ஒரு சாதாரண குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.

tamilnenjam_202108_t
ஆகஸ்ட் 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

சேனையூர் சப்றீன் கலைத்துறையில் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

இயல்பில் நான் ஒரு இலக்கியப் பித்துள்ளவன் புத்தகங்கள் மீது காதல் அதிகம் பாடசாலைக் காலங்களில் இருந்து வாசிப்பு மீதும் கதை, கட்டுரை, பேச்சு, அறிவிப்பு போன்றவற்றில் எனக்கு அதிகம் ஈடுபாடு இருந்தது சிறிய வயதில் இருந்தே முடிவெட்டும் சலூன் கடைகளுக்கு போனால் அங்குள்ள பத்திரிகைகளில் வெளிவரும் ஆக்கங்களை வாசிப்பதுண்டு பிறகு நான் ஆரம்பித்தில் இருந்தே முகநூல் வாயிலாக தத்துவ கவிதைகள் காதல் கவிதைகள் பாடல்கள் என சின்ன சின்ன பந்தி வரிகளால் ஆக்கங்களை எழுதிப்போடுவேன் அதனை என் முகநூல் நண்பர்கள் சிலர் குரல் கொடுத்து உயிர் கொடுப்பார்கள் சிலர் பத்திரிகைகளுக்கு அனுப்பி வெளிவந்ததை பிரதியாக எனக்கு அனுப்பி வைப்பார்கள் இவ்வாறே எனதான ஊக்கத்தையும் ஆர்வத்தை யும் அதிகரித்தார்கள் இவ்வாறே கலைத் துறை யில் ஈடுபாடு ஏற்பட்டது.

உங்களது புனைப்பெயர் அந்தப் பெயருக்குப் பின்னால் ஏதாவது சுவா ரசியங்கள் இருப்பின் அதை கூட பகிர்ந்து கொள்ளலாம் எங்களது வாசகர்களுக்காக?

ஆரம்ப காலங்களில் நான் முஹம்மது சப்றீன் எனும் எனது பெயரில் தான் என் எழுத்துக்களை ஆரம்பித்தேன். ஆனால் சமூக வலைதளங்களில் எனது கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது அதன்பிறகு எனது சொந்த ஊர் அட்டாளைச்சேனை அதில் சேனையூர் எனும் பதத்தை எடுத்து சேனையூர் சப்றீன் என்று எனது ஆக்கங்களை எழுதி வருகிறேன் புனைப் பெயராக மாற்றக் காரணம் எனது ஊர்மீதான அதீத காதலும் பற்றுதலும் பொதுவாகவே எனது ஊர் நடைப் பாவனைகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தே கலையாக இயற்கையை வளமாகவே கொண்டு அமைந்துள்ளது ஆகவே எனது ஊரையும் உலகறியச் செய்யவே எனது நாமத்தோடு ஊரையும் சேர்த்து எழுதி வருகிறேன்.

கவிஞர், பாடலாசிரியர் இந்த இரு முகங்களுக்கும் எவ்வாறான ஒற்றுமை வேற்றுமை காணப்படுகின்றது?

கவிதைகள் பாடல்கள் இரண்டுமே ஒரு கருவை வைத்துதான் அமையும் அதனாலே அதில் ஒற்றுமை காணப்படுகி றது. ஒரு கருவை வைத்து எழுதி விட்டு அதனை பந்தியாக அமைத்தால் கவிதையாக இனம் காணப்படும் ஆனால் பாடல் எழுதும் போது அதற்கு அதிகம் விதி முறைகள் உள்ளன பல்லவி அனுபல்லவி சரணம் போன்றவை வார்த்தையில் சந்தம் அதிகம் இருக்க வேண்டும் இசைக்கு எதிராக அமைய வேண்டும் இதில் வேற்றுமை உள்ளது.

உங்கள் முயற்சியில் உருவான பாடல்கள் பற்றி கூறுங்களேன்?

எனது ஊரிலே தேசிய மட்டத்தில் பல சாதனைகள் படைத்த சோபர் என்று அழைக்கப்படும் ஒரு விளையாட்டுக் கழகம் உள்ளது சமூகத்துக்கு உதவி செய்வதில் அதீத ஈடுபாடாக இருப்பதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் அதிகம் சந்தர் பங்களையும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பதிலும் பெரும் சக்தி வாய்ந்த அந்த விளையாட்டுக் கழகத்துக்கே எனது சொந்த முயற்சியில் நடையில் வீரம் பயிற்சியின் தேகம் என்று ஆரம்பிக்கும் துள்ளலான பாடலை எழுதி முகநூல் வாயிலாக வெளியிட்டேன் அதிகமான ரசிகர்களின் பார்வைக்கு எட்டியது.

அதன் பிறகு தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் திரு. கபிலேஷ்வரின் இசை யில் காதல் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது தற்போது தமிழ்சினிமாவில் வெளிநாட்டு பாடலாசிரியராக கலக்கிக் கொண்டிருக்கும் கவிஞர் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மி னால் தான் இந்த வாய்ப்புகிடைத்தது அதனையும் வெற்றிகரமாக எழுதினேன் பலதரப்பட்ட தமிழ் வானொலிகளில் அந்த பாடலை வெளியிட்டு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது பிறகு முன்னால் கிழக்கு மாகான முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அவருக்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன் ஊர் சோகம் எதனாலே உருவானது என ஆரம்பிக்கும் பாடல் அதற்கும் நல்ல வரவேற்ப்புகிடைத்தது சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டனர் பிறகு தொலை வினில் நீ எனும் ஆல்பத்தில் நீ வந்த வாழ்க்கையே என்று ஆரம்பிக்கும் காதல் பாடல் கெலெக்சி ஹிட்டினால் வெளியிட்டுயிருந்தோம் இலங்கையின் தேசிய சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் டீவியில் நம்ம ஹிட்ஸ் நிகழ்ச்சியில் பேசும் பாடலாக அமைந்தது அதன் பிறகுதென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடல் எழுதவாய்ப்பு கிடைத்து நான் அதை விரும்பல எனது இலக்கு அதுவல்ல.

உங்களது மொழியாளுமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் எவ்வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்?

எனது திறமைகளை வளர்ப்பதற்க்கு நான் அதிகம் புத்தகங்களை வாசிப்பேன் ஒரு கலைஞன் தன் இலக்கியப் பயணத்தில் மேல் உயர்ந்து போவதற்க்கு அடிப்படையாக அவர்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும் அந்த வாசிப்புதான் நாளை அவர்களை வாசிக்கும். எனது தேடலில் அதிகம் வாசிப்புதான் அந்த வாசிப்புதான் நாளுக்கு நாள் என்னை தேடித்தருகிறது இவ்வாறே நான் பலரை தேடியும் இருக்கிறேன்.

கவிதை மனிதனுக்கு ஏன் தேவைப் படுகிறது? கவிதையால் என்னதான் செய்து விட முடியும்?

கவிதை மனிதனுக்குள்ளும், ஏன் விலங்குகளிடமும் தாவரங்களிலும்கூட இருக் கிறது. கவித்துவத்தின் அடிப்படையான அழகி யலின் இலைகளில் கவிதை ஊடுருவி நரம்பாய் இருக்கிறது. எங்கோ ஒரு தாய் தனது குழந்தையைக் கொஞ்சவோ தூங்கவைக்கவோ செய்த அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகளே முதல் கவிதையாக இருந்திருக்கலாம் அழகி யலில் இருந்து அறிவியல் வரை பரவும் கவிதையின் வீச்சுக்கள் நம்மை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. பல நூற்றாண்டுகள் வரை இசையுடன் கலந் திருந்த கவிதை அண்மையில் தான் பாட்டுக் கும் உரைநடைக்கும் இடைப்பட்ட ஒரு இறுக்கமான வடிவத்தை எட்டியது. தன் போக்கில் செல்லும் ஒரு மனிதனை, பிறிதொரு பாதையைக் காணும்படி, நல்ல கவிதைகள் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. வழக்கமான வழக்கத்திலிருந்து விடுபடும் தருணங்களும் கவிதைத் தருணங்களே. ஒரு சிறிய ஆசுவாசத்தை யேனும் கவிதைகள் தர முடியலாம். குறள், ஹைக்கு, காப்பியங்கள், காண்டோக்கள் என விதம் விதமாக மனிதனின் துணையாக தொடர்ந்து இருப் பவை, கவிதைகள். மனிதனின் புற வரலாற்றை அல்ல, அகவரலாற்றைப் பொதிந்து வைத் திருப்பவை கவிதைகள்.

உங்கள் எழுத்து எதிர்கால சமூகத் தைப் புரட்டிப்போட வேண்டும் என நினைத்த துண்டா?

என்னுடைய எழுத்து எதிர்கால சமுதாயத்தை புரட்டிப்போடும் அப்படிங்கிற நினைப்பு எனக்கில்லை. அதை சாதிக்க முடியுமா என்ற மிகப்பெரிய ராட்ஷச வினா எனக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பெரியாரை நினைவூட்டுகிறேன் அவரை விடவா மிகப்பெரிய சீர்த்திருத்தவாதி எழுத்துலகத்திலே பிறந்திருக்க முடியும். அவ்வளவு பின்தங்கிய சமூகத்தில் பிறந்து வளர்ந்த, அவரே உலகத்தினுடைய மிகப் பெரிய பகுத்தறிவு ஞானப்பார்வை கொண்ட மகா எழுத்தாளர் பெரியார். அவருடைய எழுத்து, சமூகத்தை புரட்டிப் போடும், மாற்றத்தை உருவாக்கும் என்ற அவருடைய முழுமையான எண்ணமே இன்னும் நிறை வேறவில்லை என்ற பட்சத்தில், எல்லா எழுத்தாளர்களுடைய இலக்குமே சமூகத்தை சீர் திருத்தம் செய்ய வேண்டும் என்ற நிலையில் மட்டும் இருந்து விடுவதில்லை. சமூகத்தினுடைய அவலங்களை, தவறு களை அடுத்தடுத்த சந்ததியினருக்கு சுட்டிக் காட்டுவது கூட போதுமானதாக இருக்கும். அந்த விதத்தில் என்னுடைய எழுத்துக்களின் மூலமாக செய்ய நினைப்பது, சோர்ந்து போய் கிடக்கும் இளையவர்கள் மனதால் மிகவும் அவஸ்த்தை பட்டு கிடக்கும் நினைவுகளின் நிகழ்வுகளை மீண்டும் புதிய தலைமுறையினருக்கு ஓர் எடுத்து காட்டாக நினைவூட்டி வாழ்வியல் டிசைனை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய எழுத்து ரீதியான இலக்கு அதற்கான முயற்சிகளையே நான் செய்து வருகிறேன்.

நீங்கள் விமர்சனங்களை எவ்வாறு ஏற்று கொள்வீர்கள்?

விமர்சனங்களை ஏற்பதும் அந்த விமர்சனங்களில் இருந்து மீண்டும் நல்ல விதைகளை விதைப்பதும் எனக்குப் பிடிக்கும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சமூகம் சார்ந்த கோபங்களை வெளியில் யாருக்கும் பயப்படாமல் துணிந்து கொண்டே கொட்டித்தீர்ப்பேன். ஆனால் அதில் உண்மை புதைந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் வீட்டார் என்னை திட்டுவார்கள் உனக்கேன் இந்த வேலை என்று. ஆனால் அதற்காக நான் என் இயல்பை மாற்ற முடியாது.

குறைந்த பட்சம் ஒரு தனிநபரையும் பாதிக்காத வண்ணம் கருத்து ரீதியாக மோதுவேன். எங்கள் படைப்பு ரீதியாக இதுவரை யாரும் மோசமான விமர்சனங்களை வைக்கவில்லை. காதல் மொழி பற்றியோ அல்லது என் கவிதைகள் பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வந்தன அவற்றை நான் திருத்தியிருக்கின்றேன். அந்த வகையில் விமர்சனங்களை நான் முழுமனதோடு எற்றுக் கொள்ளும் பக்குவத் தோடுதான் உள்ளேன்.

இன்றைய இளைஞர்கள் எல்லா விடயங்களிலும் மிகவும் அவசரமாகவே செயற்படுகின்றார்கள் இது ஆரோக்கிய மானதா? அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

அவசரமாக செயற்படுதல் என்றால் இரண்டு வகையில் பார்க்க வேண்டும் ஒன்று நிதானமாக பயணித்தல் இரண்டாவது நிற் க்காமல் ஓடுதல் சில விடயங்களிடம் நெருங்கும் போது நிதானமாகத்தான் நெருங்க வேண்டும் சில விடயங்களை நிற்காமல் ஓடித்தான் அடைய வேண்டும் இன்றைய தொழிநுட்ப‌ வளர்ச்சி அதிகம். அந்த வளர்ச்சி போல நாமும் செயற்பட வேண்டும் எந்தவொரு விடயத்தையும் தொடரும் போது நாம் தொடர்ந்த அந்த விடயம் யாருக்காவது இடைஞ்சலாக இருக்குதா அல்லது அந்த விடயம் வெற்றிகரமாக முடியுமா என நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும் கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்து அதில் கிடைப்பது எதுவென்றாலும் உனது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு அனுபவமாக இருக்கும் தோல்வி களை அதிகமாக தனிமையில் கொண்டாடு தோல்விக்கு பிறகுதான் வெற்றிக்கு அங்கீ காரம் கிடைப்பது

உனது வெற்றிக்கு நீ பாடுபடு வதைவிட உன்னோடு போட்டியிடும் அந்த தரப்பினரின் தோல்விக்கு நீ பாடுபடு உன்னைத்தேடியே தானாக வெற்றி வரும் இதுவே எனது வெற்றியின் ஆயுதம். இவ்வாறு இன்றைய இளைஞர்கள் செயற் பட்டால் நியாயமான அங்கீகாரத்தை அடைய முடியும்.

மிக இலகுவாக இணையவழி போட்டி களில் பரிசுகள் விருதுகள் கிடைக்கின்றது இது எத்தனை காத்திரம் என நினைக்கின்றீர்கள்?

முழுமையாக சொல்லப்போனால் இவ்வாறான போட்டிகளுக்கு நான் அதிகம் போட்டியிடுவதில்லை எனக்கு நேரம் கிடைத்தால் அந்த நேரத்தில் வாய்ப்புகள் இருந்தால் போட்டி விதிமுறைகளை அறிந்து கொண்டு நான் போட்டியிடுவேன் ஆனாலும் சிலர் நன்றாக செயற்படுகிறார்கள் சிலர் ஒரு குழுவாக இருந்து கொண்டு அவர்கள் போட்டிகள் நடாத்தி கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்து அந்த கலைஞர்களை போட்டியிட வைத்து ஏற்பாட்டு குழுமத்தில் உள்ளவர்களுக்கே அதிகம் பரிசு வழங்கு வதை என்னால் காணக்கூடுது இவர்கள் ஏன் இவ்வாறு செயற்படுகிறார்கள் என்றால் அவர்களது வளர்ச்சியை பட்டை தீட்டவே இந்த முயற்சி என கூறலாம். ஆனால் நேர்மையாக செயற்படும் இலக்கிய உள்ளங்களின் வீட்டுக்கதவை விருதுகள்தானாகவே முன் வந்து தட்டும்.

உங்களுக்கான வாய்ப்புக்களில் இலங்கை ஊடகங்களின் பங்களிப்பு?

ஊடகங்கள் சிலர் பணத்திற்காக செயற்படுகிறார்கள் சில ஊடகங்கள் இனத் திற்காக செயற்படுகிறார்கள் இலக்கி யத்தை நேசிக்கும் ஊடகங்கள் ஓர் கலைஞனின் அங்கிகாரத்தை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகி றார்கள் அவ்வகையான ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கு என தான வாழ்த்துகள் எனதான பயணத்தில் எனக்கு ஊடகங்ககள் ஓர் தடையல்ல, என்னை தொடர்புகொண்டு நேர்கண்ட உங்களுக்கும் பத்திரிகை ஊடகத்திற்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.

 » Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ  »

மின்னிதழ்

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம்

நேர்காணல் :  பொன்மணிதாசன்

தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?

 » Read more about: வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.