மின்னிதழ் / நேர்காணல்

செல்வி திருப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். தற்பொழுது பிரிட்டனில் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். அவருடைய வேலை நேரம் போக மீதி நேரங்களில் தொலைதூரம் நடப்பது, தொடர்ந்த விடுமுறைகளில் ரிஸ்க் எடுத்து மலையேறுவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். வாழ்வின் வசந்தத்தை, வெப்பத்தை ஒருசேர பார்க்கும் அனுபவிக்கும் தருணங்கள் இவை என அழகாகச் சொல்கிறார். அவரின் நேர்காணலில் நீங்களும் அதை உணரலாம்.

நேர்கண்டவர் : 
]முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி

 

ஆகஸ்ட் 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

ஒரு பெண்ணாகிய உங்களுக்கு மலையேற வேண்டுமென்ற ஆவலும் துணிச்சலும் வர ஏதாவது தூண்டு கோலுண்டா?

ஊர் சுத்தறதுதான் ஒரே தூண்டு கோல் எனக்கு . சின்ன சின்ன பைக் ட்ரிப், weekend travel னு போயிட்டு இருந்தேன். நெருங்கிய தோழிகளுடன் ஒரு weekend trip போனப்போ எதிர்பாராத விதமா அந்த homestay ல Trek trails இருந்தது. சும்மா ட்ரை பண்ணலாமேனு ஆரம்பிச்சது இப்போ addiction மாதிரி ஆயிடிச்சு . இந்த trip விவரமா என்னோட வெப்சைட்ல இருக்கு- https://selvisodysseys.com/my-first-adventure/ அதில் போயி பார்த்தால் கூடுதலான தகவல் கிடைக்கும்.

உங்களுக்கு நீண்ட தூரம் நடை பயணம் மேற்கொள்வதும் பிடிக்கும் தானே.தினமும் அப்பயிற்சியை எப்படி மேற் கொள்கிறீர்கள்?

சின்ன வயசுல இருந்தே running, long jump, கபடி kho – kho இப்படி எல்லா விளையாட்டிலேயும் பங்கேற்பேன். அதனால எப்போவுமே fittness கு importance கொடுப்பேன் .

After first experience இன்னொரு trek போலாமேனு செக் பண்ணும்போது எல்லாரும் இந்தவயசுல உங்களால பண்ண முடியாதுனு சொல்லி குரூப்ல சேர்த் துக்க மறுத்துவிட்டார்கள். எனக்கு இப்ப நாற்பத்தெட்டு வயசு ஆகுது. ரொம்ப நாளா செக் பண்ணிட்டேயிருந்தபோ ஒரு குரூப் ஓகே வாங்கனு சொன்னாங்க. அந்த trek ல மலை ஏற ரொம்ப கஷ்டப்பட்டேன். அதுக்கப்புறம் regular உடற்பயிற்சி பண் ணிட்டு இருக்கேன். ஸ்பெஷல் ட்ரைனிங் எல்லாம் இல்ல .நோர்மல் running and strength training only. ட்ரக் போகனுங்கற ஆசைதான் இதற்கெலாம் காரணமே தவிர வேறெந்த லட்சியம்னு சொல்ல முடியாது.

சிறுவயது வாழ்க்கையில் சுவை யான சம்பவங்களைக் கூறுங்கள்.

அது சொல்ல நெறய இருக்கு . வெளயாட்டா செஞ்ச விசயம் இத்தனை சீரியஸாகும்னு நெனச்சிக்கூட பார்க்கமுடியலை.

சின்ன வயசுல அரளி விதைய ஏதோ பருப்புனு சொல்லி நானும் நெறய சாப்பிட்டுட்டு, என் தம்பி மற்றும் பக்கத்து வீட்டு பசங்களுக்கும் கொடுத்து நெலம சீரியஸ் ஆகி hospital admit பண்ணி stomac கிளீனிங் பண்ணி ரொம்ப சிரம்ப்பட்டுக் காப்பதினாங்க . மனசுல அத்தனை பயம். நம்மை எல்லாரும் சேர்ந்து அடிப்பாங்களோ திட்டுவாங்களோன்னு. நல்லவேளை நானும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி வந்த்தால யாரும் ஒன்றும் சொல்லல.

அடுத்து பள்ளி வாழ்க்கையை பத்தி சொல்லனும்னா நானும் பாரதியும் ஒன்னு தான். அவர் சொல்வார்» காக்கையும் குருவியும் சொல்லிக் கொடுக்காததையா இந்தப் பொடிமூக்கு வாத்தியார் சொல்லிக் கொடுக்கப் போறார்» அதமாதிரிதான் நானும் பள்ளிக்கூடம் போகவே புடிக்காம வாரக்கணக்குல ஸ்கூல் cut அடிச்சுட்டு ஊர் சுத்தி, காடுமேடு சுத்தி வெளயாடிட்டு வீட்டுக்குப் போனா.. அங்க அம்மத்தா கிட்ட திட்டும் நெறய அடியும் வாங்கி இருக்கேன் .

நமக்கெலாம் சின்ன ஙயசுல பேயி னாலும் தெய்வம்னாலும் பயம்தானே வரும் . அப்படியொருநாள் பால் வாங்கிட்டு வந்துகிட்டிருந்தேன். வரும் வழியில ஊர் புறத்தால ஒருகாவல் தெய்வம் நின்னுகிட்டு இருந்திச்சி. பெரியமீசையை முறுக்கிக்கிட்டு. பெரிய முண்டக்கண்ணை திறந்துகிட்டு இருந்திச்சி. கோயில் பக்கத்துல ஒரு தண்ணியிலா கிணறு இருந்திச்சி..ம்… அதுக்குள்ள இருந்து யாரோ «செல்வி இங்க வா» னு கூப்பிட்டமாதிரி இருந்ததால பயந்து நிக்காம ஓடி , வீட்டருகில் போய்தான் நின்னேன் மூச்சிரைத்தபடி. அப்ப கைல இருந்த பால் எல்லாம் கொட்டிட்டு வெறும் பாக்கெட்தான் இருந்திச்சி. காலெல்லாம் முள் காயம். வீட்டுக்குள்ள பயந்துகிட்டே போனா அம்மத்தா பால கொட்டிட்டு வந்தியாடி னு ஒரே திட்டு, அடி. காயத்தோட காயமா அதுவும்.. இப்படி ஏகப்பட்ட மனக்காயங்கள் இருக்கு.

உங்களின் இந்திய வாழ்வுக்கும் இங்கிலாந்து வாழ்வுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளாக நீங்கள் கருதுவது.

ஒரு பெண்ணா இங்க சுதந்திரம் அதிகம் னு நினைக்கிறேன். Solo travelling இங்க safe. யாரும் பார்த்துட்டு என்னடா இந்தப்பொண்ணு இப்படி தனியா ஊரசுத்துது அப்படினு யாரும் சொல்லறதிலே. நம்ம என்ன டிரஸ் பண்ணொறோம்னு யாரும் கவலைப் படறதோ complain பண்றதோ இல்லை

ஒர்க்ல… நமக்கு கீழ இருக்க பசங் களுக்கு ஈகோ இல்ல, அதே மாதிரி மேனேஜர்கும் ஈகோ பிரச்சினை இல்ல. நம்ம சொல்ற ஐடியா கேட்டு analyse பண்ணி feedback குடுப்பாங்க, encourage பண்ணுவாங்க

நம்ம ஊர்ல எந்நேரமும் மனே ஜரோட பிரச்சனை சண்டைனு போகும்

நம்ம நாட்ல தனியா இருக்க பொண்ணுக்கு வாடகை வீடு கிடைக்க ரொம்ப கஷ்டம். ஆனா இங்கலாம் அப்படி இல்ல. இதுமாதிரி நிறைய நிறைய வேறு பாடுகளைப் பார்க்கிறேன்.

 

மலையேற்றத்தில் உங்கள் எதிர் காலத் திட்டம் குறித்து சொல்லுங்கள்.

இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிசாகுதொடர்ச்சி மலைகளில் நிறைய பயணம் போகணும். மலைவாழ் மக்களின் வாழ்வியல்,பண்பாடு கலாச்சாரம் அறியவும் அவங்களோட வாழ்வாதாரம் எல்லாம் தெரிந்துகொள்ள ஆசை . நிச்சயமாக இந்தியா வந்தபிறகு செல்லலாமெனத் திட்டம் இருக்கிறது.

Himalayan trek போகணும், பல நாடு கள் சுற்றி அங்குள்ள மலைகள் ஏறணும்.

Basically, உடம்பில் தெம்பு இருக்கும் வரை ஊரசுத்திட்டே இருக்கனும். அதுதான் என் கனவு . என் லட்சியம் எல்லாமே.

உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.

திருப்பூர் பின்னலாடை தொழிலாளர் குடும்பம். அரசு பள்ளி, சத்துணவு என்று நெறய வறுமையில் வளர்ந்தேன். ஆனால் பெற்றோர் அதிக சிரமம் எடுத்து 12th வரைக்கும் படிக்க வைத்தார்கள். அந்த அடிப்படை படிப்புதான் என் பெற்றோர் எனக்கு கொடுத்த பெரிய சொத்து . அந்தச் சொத்தை வைத்துதான் நான் படித்து இன்றைக்கு வெளிநாட்டில் வேலை செய்யுமளவிற்கு வந்திருக்கிறேன்.

இந்தியாவில் பெண்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்கி றார்கள்?. ஒவ்வொரு தாயும் தன் குழந்தை களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டு மென விரும்புகிறீர்கள்.

என்பார்வையில் சொல்லனும்னா பெரும்பாலானவர்கள் ரொம்ப அதிகமா செல்லம் கொடுத்து குழந்தைகளை வளர்க்கிறார்கள்.

என் பொண்ணு சொன்னபேச்சே கேட்கமாட்டா / என் பையன் பாஸ்ட் food தான் சாப்பிடுவான். இதெலாம் ஒரு பேஷன் ஸ்டேட்மென்ட் ஆயிடிச்சு. இப்போ அது எனக்கு சுத்தமா பிடிக்காத விஷயம்.

பெண்கள் குடும்பத்தார் அவர்களை அவமானப்படுத்துனா சமாளிச்சுட்டு போறாங்க, கேள்வி கேட்கறதிலை. குடும்பம் முன்னாடி ஸெல்ப் ரெஸ்பெக்ட் ஒதுக்கி வைச்சுடறாங்க. பட் பசங்க அதை பார்த்து வளரும்போது அதெலாம் சரினு அவங்க மைண்ட்ல ரெகார்ட் ஆய்டும் அது தப்பு. I strongly believe, குழந்தைகள் நாம் சொல்றத கேட்டு ஏதும் பழகறது இல்லை, நம்ம செய்யறத பார்த்து பழகுவாங்க . அதனால் நம்மள யாரும் அவமானப்படுத்தினாலும் அது அப்பாவோ,மாமாவோ அண்ணனோ யாரா இருந்தாலும் அதை தட்டிகேட்கனும். அது தப்புனு சொல்லணும்.

இப்படி நிறய இருக்கு, பேசிட்டே போவேன்… படித்து முடிகிற வரைக்கும் 18-21 yrs பொண்ணு / பையன் சொல்றத கேட்டு எல்லாம் செய்றங்க. அப்புறம் திடீர்னு கல்யாணம் மட்டும் அவங்க சொல்ற மாதிரி செய்யணும் னு சொல்ராங்க. எனக்கு இந்த லாஜிக் புரியறதே இல்ல.

It should be other way சின்ன வயசுல நம்ம சொல்லித்தரனும். ஒரு வயசு வந்தப்புறம் அவங்கள தனியா முடிவுகள் எடுக்க விடணும் . தப்போ சரியோ நாம guide பண்ணலாம் . ஆனா அவங்க வாழ்கை/Career அவங்க choice கு விடணும்.

நீங்கள் இந்தியாவின் இன்றைய அரசியலை சமூகத்தை உற்று நோக்கு கிறீர்கள் எனில் இந்தியக் கல்வி முறை உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா என்பது பற்றி கூறுங்கள். தமிழ்ச் சமூகத்தில் சமூகமாற்றம் வரவேண்டுமெனில் எதிலெலாம் வரவேண்டுமென விரும்பு கிறீர்கள்.

பெண்ணியம் பெண்ணுரிமைன்னு இன்னும் பேசிட்டுதான் இருக்கோம். ஆனா செயல்பாட்டில் இல்ல அது ரொம்பவே மாறனும்.

சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் ரொம்ம இருக்கு. பட் இது முழுக்க பெண்கள் கைலதான் இருக்குனு என் நம்பிக்கை .

பெண்கள் financially, Dependant. எவ்வளவு நல்ல அப்பா / குடும்பம் / கணவர் இருந்தாலும், they must have their own support / survival system

we have to fight our own battle, you cant expect someone else to come and fight for us .எனக்கு பசிச்சா நான்தானே சாப்பிடணும்! அது மாதிரி தான் எல்லாமே.

பிரிட்டனில் மிகப் பெரிய நிறு வனத்தில் பணி செய்கிறீர்கள். அங்கே பெண்ணாக எதிர்கொள்ளும் சிக்கல் என்னென்ன?..

பொண்ண இங்க பெரிய சிக்கல்கள் இல்லங்க. பட் நெறைய இனப் பாகுபாடு இருக்கு. ஒரு பிரச்சனைன்னு வரும்போது அவங்க சப்போர்ட் இருக்காது. Mostly பிரிட்டிஷ் அவங்க குரூப்க்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க.. அப்புறம் ஐரோப்பியர்கள் அதுக்கு அப்புறம் தான் இந்தியர்கள் / ஆசியர்கள்… ஆணோ பெண்ணோ சமமாக பாவிக்கிற மனோ பாவம் இங்க இருக்கு இந்தியாவைக் கம்பேர் பண்ணும்போது.

கொரோனாவுக்குப் பிறகான நம் சமூகம் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள போகிறது. அதற்கான மாற்று வழியாக நீங்கள் கருதுவது.

யோசிக்க யோசிக்க இது பெரிய confusion, இந்த question choicela விட்டுடறேன்.. he heee


8 Comments

புலவர் ச.ந.இளங்குமரன் · ஜூலை 31, 2021 at 2 h 21 min

நல்ல பதிவு, சிறப்பான பார்வை

நீடூா் அஷ்ரப் அலி · ஜூலை 31, 2021 at 3 h 29 min

“குழந்தைகள் நாம் சொல்ல்வதை கேட்டு வளா்வதில்லை. நம் செயலை பாா்த்தே வளா்கிறது” என்பது நூற்றுக்கு நூறு உண்மை…

Saradha Santosh · ஜூலை 31, 2021 at 5 h 58 min

அற்புதமான நேர்காணல்.. வாழ்க வளத்துடன்..

penniam selvakumari · ஜூலை 31, 2021 at 6 h 17 min

செல்வியுடனான நேர்காணல்..ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது..

MuthuVijayan Alagar · ஜூலை 31, 2021 at 9 h 47 min

அருமை வாழ்த்துகள் தொடரட்டும் தமிழ்ப்பணி

சா நாகூர் பிச்சை · ஆகஸ்ட் 4, 2021 at 15 h 07 min

தமிழ்நெஞ்சம் இதழ் எழுதத் துடிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு கிடைத்த அற்புதமான புதையல் என்றே சொல்லிக் கொள்கின்றேன். எழுத்தாளர்களின் வாழ்வில் சிறந்த வழிகாட்டியாகவும் சமூகத்திற்கு தேவையான அங்கீகரிக்கப்பட்ட ஆக்கங்களும் மிகவும் சிறப்பாகவே உள்ளது.. மிக்க நன்றிகள் ஐயா

பாவலர் தஞ்சை தர்மராசன் · ஆகஸ்ட் 9, 2021 at 15 h 52 min

பேரன்புடையீர், வணக்கம், நான் பாவலர் தஞ்சை தர்மராசன்,
கவிதை , சிறுகதைகள் எழுத்தாளர் , ஜோக்ஸ் படைப்பாளர்
தமிழகத்தில் பல இதழ்களிலும் அமெரிக்க மாத இதழ் * தென்றல் * ஆகியவற்றிலும் எனது படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
நான் எனது 20 ஆண்டுகால உலகச்சுற்றுப்பயணத்தில் 2015 இல் இலண்டன்,ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரோம் , வாடிகன் நகர், வெனிஸ் போன்ற நாடுகளிலும் உலகின் இன்னும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்துவந்துள்ளேன். * தமிழ் நெஞ்சம் * இதழுக்கு எனது படைப்புகளை அனுப்பி வைக்கிறேன். தங்களின் அன்பான பதிலை எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
பாவலர் தஞ்சை தர்மராசன்

Admin · ஆகஸ்ட் 28, 2021 at 11 h 27 min

வரவேற்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
editor@tamilnenjam.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.

 » Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ  »

மின்னிதழ்

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம்

நேர்காணல் :  பொன்மணிதாசன்

தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?

 » Read more about: வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.