கவிதை

பரிதவிக்கும் பணியாரம்

சுட்டுவைத்தேன் பணியாரம்
சூடாறும் முன்னே
தட்டினிலே பரப்பிவைத்தேன்
தானாக விற்குமென்று .
மொத்தமாய் வித்திட்டு
முதலீடு செய்யலாமென்று
சப்தமிட்டுக் கூவிப்பார்த்தேன்,
சாப்பிட யாரும் வரவில்லை .

 » Read more about: பரிதவிக்கும் பணியாரம்  »

கவிதை

நெஞ்சிலோர் புதுசுகம்!

பெண்

உள்ளம் தந்த காதலிடம் நான் பாடவா
உறங்கு மின்ப இரவினிலே நான் நாடவா
இல்லமென்னும் மணமாலை நான் சூடவா
இன்பமான காதல் தேரில் நீ ஆட வா

ஆண்

கானத்து கருங்குயிலே நீ என்னருகே வா
உன் செம்பவள கனியிதழை பருக நான் வரவா
உன் விழியசைவில் கவி படைக்க நான் வரவா
இடை அழகை கவிதையிலே நான் தரவா

பெண்

தேடிவந்த தென்றலிடம் சொன்னேன்
சூடிவிட்ட மல்லிகையில் சொன்னேன்
என் நெஞ்சில் வரும் நேரமதை சொன்னேன்
என் நெஞ்சில் புது சுகம் ஒன்று கண்டேன்
என் நெஞ்சில் மோதும் நேரம் நின்று

ஆண்

உன் மல்லிகை கூந்தலிலே வண்டு
மதுவருந்தி பாடுவதை கண்டு
அசைகின்ற கொடியிடையாள் தண்டு
ஆடுதடி இடைவடிவில் இன்று

 » Read more about: நெஞ்சிலோர் புதுசுகம்!  »

கவிதை

முதல் வசந்தம்!

செல்வமோ பல கோடி
செயலாற்ற பல பேர்கள்
வெல்வாரோ யாரு மிலர்
வெறுப் பாரும் உலகிலில்லை
சொற்கேட்டு நடப் பதற்குச்
சொந்தங்கள் அணி திரள்வர்!

எல்லாமே இருந் தாலும்
என்மனதில் அமைதி இல்லை!

 » Read more about: முதல் வசந்தம்!  »

கதை

கீறல்கள்

201605161457முகில்கள் மறைத்துக் கொண்டிருக்க, அதனூடே தனது ஒளிக் கீற்றை நுழைக்க, பகீரதப் பிரயத்தனம் செய்து, வெற்றியும் கண்ட சூரியன், வெளி மண்டலத்தில் தனது கதிர்களைப் பரவவிட்டுக் கொண்டிருந்தான். இளவேனில் காலந்தான் இது என்பதை,

 » Read more about: கீறல்கள்  »

கவிதை

பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்

அனாதையாக கிடக்கிறார்
கோடிகளின் அதிபதி
சாலை விபத்து  !

பயண களைப்பு
நிழல் தேடுகிறான்
விறகுவெட்டி  !

சாலையில் பணப்பை
மரித்து போனது
மனசாட்சி  !

 » Read more about: பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்  »

கவிதை

பாதுஷா

பாதாமில் செய்திட்ட பாதுஷாவே
நான்தான் இனியுந்தன் நாதர்ஷாவே !
முந்திரியில் செய்தகுளோப் ஜாமூனே
முறுவலிலே நீதருவாய்முன் ஜாமீனே !

ஜீராவில் மிதக்கின்ற ஜாங்கிரியே
எனக்காக நீயென்றும் ஏங்குறியே !

 » Read more about: பாதுஷா  »

கவிதை

காதல் இசை

என் காதலை
வலிமைப்படுத்தவே
எளிமைப்படுத்தி எழுதுகிறேன்
உனக்கான பாடலை.

…..

நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.

 » Read more about: காதல் இசை  »

கவிதை

சிதறல்கள்

உனக்கான திசை நோக்கி
என் எழுத்துக்கள் உதிர்கின்றன
அவை பிறந்த நேரம் இனிமையானவை
பிரசவ வலியின் வேதனை நீ அறியமாட்டாய்
எனக்குள் மூடி வைத்து இருக்கும்
என் வலிகள் அவை..

 » Read more about: சிதறல்கள்  »

கவிதை

மரபை இழக்காதே மானிடா!

என்னை என்றும் இகழ்ந்தாலும்
ஏற்றுக் கொள்வேன் மகிழ்வுடனே
அன்னைத் தமிழின் மரபைத்தான்
அவச்சொல் சொல்லிப் பேசிட்டால்
கன்ன மிரண்டும் வீங்கிடுமே
கனிந்த நட்பும் பிரிந்திடுமே!

மரபின் மாண்பைப் புரியாது
மதியி ழந்தே ஏசாதீர்
சிரத்தில் ஏந்தா  விட்டாலும்
சீர்தான் கெட்டுப் பேசாதீர்
மரத்தில் அடித்த ஆணியைப்போல்
மனதின் அடியில் பதிந்திடுமே
சரமாய்க் கோபம் வந்தேதான்
சவுக்காய் வார்த்தை நீண்டிடுமே!

 » Read more about: மரபை இழக்காதே மானிடா!  »

கட்டுரை

நாவலந்தேயம்

நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு – எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

 » Read more about: நாவலந்தேயம்  »