கட்டுரை

இல்லற தர்மம்

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது.

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.

 » Read more about: இல்லற தர்மம்  »

By Admin, ago
கட்டுரை

முக்கோண முக்குளிப்பு

“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம்.

 » Read more about: முக்கோண முக்குளிப்பு  »

கதை

உனக்கென இருப்பேன்…

3 நிமிட சிறுகதை

“ஹாய்டா ராஜேஷ்..”

“ஹாய் உமா.. என்ன சர்ப்ரைஸ் காலிங்..”

“என்னமோ தெரியலடா.. இன்னிக்கி காலையிலேயிருந்தே ஒன்னோட நெனப்புதான்.. அஞ்சி வருஷத்துக்கு முன்னால இந்த தேதியிலதான் நாம மொதமொதலா சந்திச்ச நாளுங்குறதாலகூட இருக்கலாம்..”

“ஓ..

 » Read more about: உனக்கென இருப்பேன்…  »

கவிதை

மௌனம்

மௌனமே மொழியானது
உனக்கும் எனக்கும்
மந்திர விழி பேசுது
மயக்கம் கிறக்கம்
சுந்தர கவியானது
இதய இயக்கம்
சேர்ந்திட முடியாதது
வாழ்வியல் குழப்பம்
கனவினில் கூத்தாடுது
பேசாத அன்பின் நெருக்கம்
விடிந்ததும் மனம் ஏங்குது
புரியாத வார்த்தையின் விளக்கம்
உறவினில் கலந்தாயே
சிறகுகள் விரிக்க
விறகாக்கி எரிப்பாயோ
இந்த வீணையை உணராமல்
இல்லை
உலகாக்கி கேட்டு மகிழ்வாயோ
இந்த ஊமையை
சபை ஏற்றி மகிழ்வாயோ

 » Read more about: மௌனம்  »

கவிதை

எழுதத் துடிக்கும் மனசு…!

எழுதத் துடிக்கிறது என் மனசு..
எழுத
காகிதம் காணாமல்
கனக்கிறது மனசு..
மெய்யான ஒன்றை
பேனா மையால் தான் எழுத வேண்டுமா..?
என்
இதயக் காகிதத்தில்
இரத்தத்தால் எழுதி வைத்த
கிறுக்கல்களை
மொழிபெயர்க்கிறேன்..!

 » Read more about: எழுதத் துடிக்கும் மனசு…!  »

கவிதை

நட்பு

அன்புகொண்ட நண்பரோடு
பழகுகின்ற போதினில்
என்புஞ்சதையும் உள்ளதுபோல்
இருவர்நட்பும் அமையுமே.

எந்தநாளில் எந்தநேரம்
என்னதீமை நேரினும்
அந்தநாளில் அந்தநேரம்
அதனைப்போக்க நண்பனே

மின்னல்போல வந்துமுன்னே
இன்பஞ்சேரச் செய்வனே.

 » Read more about: நட்பு  »

கவிதை

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா!

விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா!

உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா!

எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா !

உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா!

 » Read more about: ​உச்சிக் குளிருதடா!  »

கவிதை

கன்னியே

சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ
சிந்தனை வளைக்குதடி – கடல்
அலைபோல் உந்தன் நினைவே எந்தன்
அடிமனம் துளைக்குதடி

கண்ணே உன்னைக் காணக் காணக்
கனவுகள் வளருதடி –

 » Read more about: கன்னியே  »

கவிதை

அப்துல் கலாம்

(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015)

விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும்
… விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை
அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை
… அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர்
நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே

 » Read more about: அப்துல் கலாம்  »

கவிதை

வைரமுத்தை தோற்கடிப்பேன்…

திணரவைக்கும் திமிராலே
திரும்பி பார்க்க வைத்தாய் நீ
கிறங்கடிக்கும் சிரிப்பாலே
விரும்பிப் பார்க்க வைத்தாய் நீ

உன் சின்னஞ்சின்னஞ் சிணுங்களிலே
இளையராஜா இசை கேட்டேன்
கொஞ்சி கொஞ்சி நீபேச
கவிதை கோடி நான் கோர்த்தேன்

மாசி மாத காற்றைப்போல்
மனசுக்குள்ளே நீ வீசு
உன்னை எண்ணி உயிர்த்தேனே
ஒற்றை வார்த்தை நீ பேசு

வாசப் பூவே நீ கேட்டால்
வானில்கூட பூப்பறிப்பேன்
வாழ்வின் பொருளே உனக்காக
வைரமுத்தை தோற்கடிப்பேன்

சாடையாலே நீ சொன்னால்
சாவைகூட சாகடிப்பேன்
கைகள் கோர்க்க நீ வந்தால்
காலின் கொலுசாய் நானிருப்பேன்

 » Read more about: வைரமுத்தை தோற்கடிப்பேன்…  »