மரபுக் கவிதை

என் க(வி)தை

நூற்றெண்பத்தொன்பது சீர் ஆசிரிய விருத்தம் (27×7 சீர்கள் ஓரடிக்கு) ×நான்கடி

பூவிழிப் பார்வை நோக்கினில் வீழ்ந்து
புதைந்திடு மகவை தனில்நானும்
பொற்றமிழ்ப் பெண்ணாள் பார்வையி லின்பம்
பொங்கிட வீழ்ந்து பொலிவுற்றேன்
புண்ணெனத் தாக்கும் உற்றவர் மற்றோர்
பொசுக்கியும் வாழ்வில் இடறாமல்
பொங்கியெ ழுந்தேன் என்முனே நின்ற
பொறுப்பையு ணர்ந்தே செயல்பட்டேன்
புண்மைகள் தீர நன்மைகள் சேரப்
போற்றிட லானேன் என்வாழ்வில்
பொற்பினைச் சேர்க்கும் கல்வியைக் கண்ணாய்ப்
பொங்கிடு மாவ லால்கற்றேன்
போதுமுன் கல்வி வறுமையைத் தீர்க்கப்
புறப்படு வாயே வேலைக்குப்
பூத்திடும் பசியைப் போக்கிடு மகனே
போபோ என்றார் என்னன்னை
போதெனு மிளமை இன்பங்கள் கழியப்
புரிந்தன வாழ்வின் உண்மைகள்
புரிந்தவப் போது கீழ்மைகள் மிஞ்சிப்
புகுந்தன பலவாய்த் துன்பங்கள்
புதைந்தவென் இன்ப நிலையினை மீட்கப்
பொருந்துவ தேதென வோர்ந்திட்டேன்
பொலிந்திட லுற்றே என்னுடைக் குடும்பம்
பூத்திட லொன்றே குறிக்கொண்டேன்
போதிய வுழைப்பும் போதிலா வுணவும்
புரிந்திடா வுணர்வும் வரப்பெற்றேன்
போற்றியுண் என்றார் உணவினை முன்னோர்
போற்றியும் உணவு கிடைக்கவிலை
போதுமோ என்றே ஏக்கமாய்க் கழியும்
புதிரென வயிறும் சோர்ந்ததுவே
போட்டிடும் உரமே பயிர்தனை வளர்க்கும்
பொசுங்கிடும் பற்றாக் குறையானால்
பூட்டிய அறையின் குப்பையாய் வயிறும்
பொசுக்கென நசுங்கி யுள்வாங்கப்
புதிரினை அவிழ்க்கும் வழிதனைக் கண்டேன்
புதுப்பய ணத்தைத் தொடர்ந்திட்டேன்
புதியவென் பயணம் புலர்ந்திடுங் கதிரின்
புத்துணர் வாக எழுந்ததனால்
பொசுக்கிய வறுமை உடனழிந் தொடப்
புனர்நிலை நோக்கி யேசென்றோம்
புயலெனச் சூழ்ந்த துன்பமாய்த் தன்னின்
பொறுப்பினை மறந்த என்தந்தை
புறப்பபட லானார் தனிமையில் வீழ்ந்தோம்
பொறுப்பினை நானே ஏற்றிட்டேன்
பொறுமையாய்ச் செய்யும் மின்பணி என்றன்
புழினை நாளும் கூட்டியதால்
பொசுங்கிய வாழ்வும் விரிகதி ரோனாய்ப்
புத்துணர் வெய்தி எழுந்ததுகாண்
பொறுப்புகள் தானே மனிதனின் நிலையைப்
புதுக்கிடும் கருவி?

 » Read more about: என் க(வி)தை  »

புதுக் கவிதை

இதழ்சிவப்பு

கண்டாங்கி சேலைகட்டி வாருங்கடி – வாருங்கடி
கவிராஜன் பேத்திபுகழ் பாடுங்கடி.
செண்டாடும் குழலழகி கணவரவர் – கணவரவர்
ஸ்ரீராமன் புகழைச்சொல்லி வாழ்த்துங்கடி.

மூவேந்தர் பரம்பரைகள் ஆண்டநிலம் –

 » Read more about: இதழ்சிவப்பு  »

வெண்பா

உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்!

 » Read more about: உள்ளத்திற் கஃதே உயர்வு!  »

புதுக் கவிதை

தாயன்பு!

வேதனை வலிகளுடன்
போறாடி எனை ஈன்றெடுத்தாய்!
பாலோடு தேன்கலந்தே
திகட்டாமல் ஊட்டுவித்தாய்!
தேரோடும் வீதியிலே
சலிக்காமல் நடக்க வத்தாய்!
பாரெல்லாம் போற்றிடவே
பண்பாளனாய் நீ வளர்த்தாய்!

 » Read more about: தாயன்பு!  »

புதுக் கவிதை

தீபாவ(ளி)லி

கொளுத்திப் போட்ட பட்டாசுகளில்
மருந்துகளைத் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதை வைத்தே வெடிகளைத் தயாரித்து விடுவான்.
ஒவ்வொன்று வெடிக்கும்,
ஒவ்வொன்று புஸ்ஸ்ஸ் விடும்.
அடுத்த வீட்டு அண்ணன் கொடுத்த
பழைய உடைதான்,

 » Read more about: தீபாவ(ளி)லி  »

புதுக் கவிதை

வாய்க்கும் நல்லதீபாவளி

ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி இருளகற்றி
மருளகற்றி மனம்மகிழ தீபாவளி வருமெமக்கு
நிறைவான மனதுவர தீபாவளி உதவிடட்டும்
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி! புலனெல்லாம் தூய்மைபெற புத்துணர்வு பொங்கிவர அலைபாயும் எண்ணமெலாம் நிலையாக நின்றுவிட மகிழ்ச்சியது மனமெங்கும்
மத்தாப்பாய் மலர்ந்துவிட வாசல்நின்று பார்க்கின்றோம் வந்திடுவாய் தீபாவளி!  » Read more about: வாய்க்கும் நல்லதீபாவளி  »

ஆன்மீகம்

நபிகளாரின் இறுதிப் பேருரை

அறிவோம் இஸ்லாம் – 49

 

ஹிஜ்ரி 10 ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய முடிவு செய்தார்கள். ‘கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இருக்கிறேன்’

 » Read more about: நபிகளாரின் இறுதிப் பேருரை  »

இலக்கணம்-இலக்கியம்

கும்மிப் பாடலில் வெண்டளை வேண்டுமா?

kummi_cg301p021இசைத்தமிழ் வடிவமான சிந்துப் பாடல்களில் ஒன்றான “கும்மிப் பாடல்களில்” வெண்டளை வரவேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். யாப்புத் தொடர்பான தற்கால நூல்களிலும் இந்தக் கருத்துள்ளது.

ஆனால் “கும்மிப் பாட்டில் “வெண்டளை கட்டாயமில்லை என்பதே என் கருத்து.

 » Read more about: கும்மிப் பாடலில் வெண்டளை வேண்டுமா?  »

மரபுக் கவிதை

வெடிதனை வெடிக்க வேண்டாம்!

diwali_tn1வெடிதனை வெடிக்க வேண்டாம் – வான்
வெளிதனைக் கெடுக்க வேண்டாம்!
செடிகொடி மரங்கள் தன்னில் – வாழும்
சிட்டினை அழிக்க வேண்டாம்!

விலங்குகள் பறவை எல்லாம் –

 » Read more about: வெடிதனை வெடிக்க வேண்டாம்!  »

புதுக் கவிதை

அவர்கள்

அவர்கள்
தங்களை நல்லவர்கள் போல்
தெரியப்படுத்திக்
கொள்கிறார்கள்??

அவர்களின்
உடல்மொழி
ஒவ்வொரு மனிதர்களிடத்திலும்
இலகுவாக
பொருந்திக்கொள்கிறது?

வெளிச்சத்தை
உமிழ்ந்து
விட்டில்களை உண்ணும்
விளக்குகளைப்போல
அவர்களின் பேச்சு
வன்மத்தை கக்குகிறது??

 » Read more about: அவர்கள்  »