புதுக் கவிதை

தேவதை

இந்த பூமிக்கு
இரண்டே இரண்டு
தேவதைகள்தான் …
இன்று நீ
நாளை நம் மகள் …

உன் வீட்டின்
வாசலிலிருந்துதான்
தொடங்குகிறது
என் உலகம் …

 » Read more about: தேவதை  »

தன்னம்பிக்கை

துன்பங்களும் துயரங்களும்!

நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுப்போல நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்து செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்து விடுவதற்கு அல்ல.

 » Read more about: துன்பங்களும் துயரங்களும்!  »

தன்னம்பிக்கை

வாழ்க்கை!

போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது (நேதாஜி).

 » Read more about: வாழ்க்கை!  »

புதுக் கவிதை

” மண் வாசனை”

கரும்பு கொல்லைக்குள்ளே..
கட்டை வெதைக்கையிலே..
ஏங்கண்ணுக்குள்ள.. ஓங்கண்ண..
வெச்சு புதைச்சுப் புட்ட..

மொளைச்சி வார புல்லு போல..
மனசுக்குள்ள துளுத்து வளந்துபுட்ட..
மண்ணணைச்சு வெக்கறப்போ
மனசணைச்சி நின்னுகிட்ட..

 » Read more about: ” மண் வாசனை”  »

புதுக் கவிதை

எனக்குப் பிடித்த தனிமையுடன்….

வெகுநேரம் மௌனத்துடன்
பேசிக் கொண்டே இருக்கின்றேன்
எனக்குள்ளே தொலைந்து தொலைந்து
என்னையே நான் தேடுகிறேன்

எனக்குள்ளே வினாக்கள் தொடுத்து
இதமான விடையை எழுதுகிறேன்
மனக் கணக்கு போட்டு போட்டு
சாதக விடியலைக் காண்கின்றேன்

கண்களுக்குள்ளே கனவுகள் பதித்து
கவிதைகள் நூறு படைக்கின்றேன்
கதைகளுக்குள்ளே ஆழ்ந்து மூழ்கி
கதாப்பாத்திரங்களுடன் உறவாடுகின்றேன்

கடந்துபோன ஞாபகங்களை
இதய ஏட்டில் புரட்டுகிறேன்
காயப்பட்ட நிகழ்வுகளுக்கு
மறதியை மருந்தாய் பூசுகிறேன்

மாய உலகில் சஞ்சரித்து
மறுமையைக் காணத் துடிக்கின்றேன்
ஆருயிரான ஆன்மாக்களுடன்
அளவளாவி மகிழ்கிறேன்

ஆத்திரத்தில் உதிர்த்த வார்த்தைகளை
சொல்லாட்சியில் அழிக்கின்றேன்
அறியாது செய்தப் பிழைகளுக்கு
மனசாட்சியிடம் மண்டியிடுகின்றேன்

எனக்குப் பிடித்த ஏகாந்தத் தனிமை
என்றும் என்றும் என்னுடனே
பிணக்குக் கொண்டுப் பிரிந்தாலும்
திணித்து எனக்குள் வாழ்ந்திடுவேன்!

 » Read more about: எனக்குப் பிடித்த தனிமையுடன்….  »

மரபுக் கவிதை

காலனைக் கண்டேன்!

பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப்
…… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும்
ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற
…… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும்
தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச்
……

 » Read more about: காலனைக் கண்டேன்!  »

குடும்பம்

ஞாபக மறதியால் அவதியா?

*

  • ஞாபக மறதியால் அவதியா
  • இந்த உணவுகளை சாப்பிடுங்க – இயற்கை மருத்துவம்*

    படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை,

     » Read more about: ஞாபக மறதியால் அவதியா?  »

    By Admin, ago
    மரபுக் கவிதை

    என்ஓட்டம் என்இலக்கு

    செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்
            செந்தமிழே கல்விமொழி; தெருவி  லெல்லாம்
    செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்
            செந்தமிழே மழலைமொழி;

     » Read more about: என்ஓட்டம் என்இலக்கு  »