மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 7

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும். அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி ‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

By Admin, ago
நேர்காணல்

திருப்பூரைச் சேர்ந்த மலையேறும் மகளிர்

மின்னிதழ் / நேர்காணல்

செல்வி திருப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். தற்பொழுது பிரிட்டனில் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். அவருடைய வேலை நேரம் போக மீதி நேரங்களில் தொலைதூரம் நடப்பது, தொடர்ந்த விடுமுறைகளில் ரிஸ்க் எடுத்து மலையேறுவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.

 » Read more about: திருப்பூரைச் சேர்ந்த மலையேறும் மகளிர்  »

By Admin, ago
நேர்காணல்

புதிய பாடலாசிரியர் சேனையூர் சப்றீன்

மின்னிதழ் / நேர்காணல்

நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின்

சேனையூர் சப்றீன் நீங்கள் உங் களைப் பற்றிய அறிமுகத்தை எங்களது வாசகர்கள் நெஞ்சத்தை தொட்டே இனிதே ஆரம்பியுங்களேன்?

எனது பெயர் சஹாப்டீன் முஹம்மது சப்றீன் நான் கிழக்கு மாகாணத்தின் அம் பாறை மாவட்டதில் அட்டாளைச்சேனை எனும் ஊரில் வசித்து வருகிறேன் நான் சேனையூர் சப்றீன் எனும் புனைப்பெயரில் கவிதைகள்,

 » Read more about: புதிய பாடலாசிரியர் சேனையூர் சப்றீன்  »

By Admin, ago
புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்

By Admin, ago
நேர்காணல்

பாவேந்தல் பாலமுனை ஃபாறூக் அவர்களுடன்…

இலங்கையின் தலைசிறந்த கவிஞர் களில் ஒருவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் என பல சிறப்புகளும் பன்முகத் திறமையும் கொண்ட இலக்கிய வாதி நீங்கள். உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பியுங்கள்! நேர்காணல் : தமிழ்நெஞ்சம் அமின்

By Admin, ago
நேர்காணல்

தமிழ் தென்றலின் தீராக்காதல் பசுமை

மின்னிதழ் / நேர்காணல்

மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணியை ஆற்றுபவர்கள் மருத்துவர்கள்; எனவேதான் மருத்துவர்களை இறைவனுக்கு ஒப்பானவர்களாக நாம் போற்றுகிறோம். அந்த மருத்துவர்கள் மனிதகுலத்தை நேசிப்பவர்களாக இருக்கும்போது அவர்களது பணி மேலும் சிறக்கும்.

 » Read more about: தமிழ் தென்றலின் தீராக்காதல் பசுமை  »

By Admin, ago
மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 6

ஹைக்கூ (ஜப்பானிய சிறுகவிதைகள்) எழுதும் பாரம்பரிய கலை முதலில் ஜப்பானில் பௌத்த பிக்குகளிடமிருந்து தொடங்கி இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த ஆன்மீக கலை வடிவம் அந்த நேரத்தில் இருப்பதை வலியுறுத்துகிறது, கவிதையின் குறுகிய தன்மை (மூன்று வரிகள்) ஜென் பௌத்த தத்துவத்தின் பிரதிபலிப்பாகும். ஜென் பௌத்த தத்துவத்தின் முக்கிய கூறுகளை பிரதிபலிக்கும் 12 ஜப்பானிய ஹைக்கூக்கள் ,இங்கே காண்போம்,

By Admin, ago
மின்னிதழ்

மனம்திறக்கும் ஓசூர் மணிமேகலை

மின்னிதழ் / நேர்காணல்

புன்னகையை மென்னகையால் கொண்டு யாவரையும் வசீகரிப்பவர். அவர் பன்முகப்படைப்பாளி. பள்ளி ஆசிரியர், ஓவியர், கவிஞர், பேச்சாளர், சமூகநல உபகாரி இப்படி அடக்கத்துடன் ஒளிர்ந்து நிற்பவர். அடக்கமும் அயராது உழைப்புமாக பரிணமிக்கும் இவர் பல நூல்களைத் தமிழுழகிற்கு தந்தவர்.

 » Read more about: மனம்திறக்கும் ஓசூர் மணிமேகலை  »

நேர்காணல்

வள்ளலார் வழியில் வாழும் மருத்துவர்

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம் ஐயா

மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் பொதுவாக மற்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள். தாங்கள் ஒரு பன்முகக் கலைஞராகப் பரிணமித்துள்ளீர்கள். தமிழ்சார்ந்த பணிகளாகட்டும் சமுதாயம் சார்ந்த பணிகளாகட்டும் ஆன்மீகம் சார்ந்த பணிகளாகட்டும் திரைப்படத் துறை சார்ந்த பணிகளாகட்டும் எல்லாவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறீர்கள்.

 » Read more about: வள்ளலார் வழியில் வாழும் மருத்துவர்  »

By Admin, ago
மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 5

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

By Admin, ago