கவிதை

யாருக்கும் வாய்ப்பதில்லை !

காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு
பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
என்றாலும், மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு!

முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா!

 » Read more about: யாருக்கும் வாய்ப்பதில்லை !  »

கவிதை

உனக்கான கரை

உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.

 » Read more about: உனக்கான கரை  »

இலக்கணம்-இலக்கியம்

கவி, கவிதை, கவிஞர் இவை தமிழா? வடமொழியா?

“கவி, கவிதை. கவிஞர்” இவை தமிழா? வடமொழியா?

“கவி ” வடமொழி என்று அண்மையில் அன்பர் ஒருவரின் கருத்தைப் படிக்க நேர்தது. அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் சுட்டிக் காட்டினார்.

மேலும்,

 » Read more about: கவி, கவிதை, கவிஞர் இவை தமிழா? வடமொழியா?  »

கவிதை

வருவாய் நிலவே!

நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என்
நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே!
நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என்
நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே!

தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே –

 » Read more about: வருவாய் நிலவே!  »

கவிதை

இராவணன் !!

இறை வணக்கம் !

தங்கத் தமிழை அளித்திட்ட
தமிழின் தலைவா முதல்வணக்கம் !
எங்கும் மணந்து கமழ்கின்ற
எழிலே தமிழே என்வணக்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
அவைக்கும் என்றன் நல்வணக்கம் !

 » Read more about: இராவணன் !!  »

கவிதை

தொடமுடியா சரித்திரமே…

அகரத்திற்கோர் பெருமை
நின் பெயரின் முதலெழுத்தை
முதல் எழுத்தாய்க் கொண்டதால்!

ஆக்கத்தின் திறவுகோல்
நின்னணுக் கரங்களிலும்
மழலைப் புன்னகையிலும்!

இந்திய தேசம் கண்டெடுத்த
விஞ்ஞானப் புதையல் நீங்கள்!

 » Read more about: தொடமுடியா சரித்திரமே…  »

கவிதை

வரம் வேண்டும் தேவதையே…

ஏற்றம் தரும் வாழ்வில்
மாற்றம் தர வந்தவளே
மாற்றங்களை தந்து விட்டு
ஏமாற்றமும் தந்தது ஏன்?

நீ காற்றில் எனக்காக
தூது விட்ட முத்தமெல்லாம்
என் காதில் இடியின் சத்தமாய்
வந்து விழுவதேன்?

 » Read more about: வரம் வேண்டும் தேவதையே…  »

கவிதை

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
தங்கமாக மின்னும் துள்ளி
தேனறிவு தரும் அள்ளி.
நாவில் சுவைகூட்டும் நெல்லி.

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
அறிவுப் பால் கொடுக்கும் அம்மா
விரல் பிடித்து அழைத்திடும் அப்பா
தோளோடு தோள் உரசும் நண்பன்.

 » Read more about: எங்க ஊர் ஆரம்பப் பள்ளி  »

கதை

நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள்.

 » Read more about: நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்  »

By Admin, ago
கவிதை

முதுமையில் உழைப்பு

குறள் வெண்பா 10

 

ஊன்றும் ஒருகோல் உதவுமுன் கைதாங்கி
ஊன்றும் சுமையில் முதுகு

முதுமையின் கூனறிந்து முன்னயரா வூக்கம்
பதுமை யிலைநீ பகர்

தளர்வெனு மோர்நோய் தனதாக்காப் பாட்டி
தளரா வளர்தெங்கு தான்

பிறர்கையை நீநோக்கிப் பின்னே புகாது
பிறர்மெச்சப் பாடுபடப் பீடு

உறவுக ணீத்தாலும் உன்கை உழைப்பில்
உறவதாய்க் கொண்டாய் உயர்வு

தனிமையோ சுட்டாலும் தாங்கும் சுமையின்
இனிமையாய்க் கொண்டாய் உலகு

தோற்றும் முதுமையின் தோற்ற மொருகாட்சி
தோற்சுருக் காயதுவே தோன்று

தன்மானம் கைக்கொள்ளத் தாரணியில் ஏற்றமது
என்னும் முதுமை எழில்

சுடுவெயிலும் தண்மதியும் சேர்த்தொன் றதேகண்
டிடுமுதுமை தான்தளரா தின்று

அச்சமின்றி வாழ்வை அனுபவமா யேந்திவி(டு)
இச்சகத்தில் என்றாய் உணர்ந்து

 » Read more about: முதுமையில் உழைப்பு  »