வெண்பா

கம்பன் புகழைப் பாடு மனமே!

கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்!

 » Read more about: கம்பன் புகழைப் பாடு மனமே!  »

சிறுகதை

இறுதி ஆசை

கற கறக்கும் லுமாலா சைக்கிள் ஆட்களை கண்டதும் முகமன் கூறி புன்னகையோடு ஒலிக்கும் இரண்டு மணிச் சத்தம், ஹம்ஸா பாய் என எல்லோர் வாயிலும் பழக்கப்பட்ட பெயர், நாட்டாமை வேலை செய்து மனைவியையும் நான்கு குமருப் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் அவரை எப்படித்தான் செலவுகளை சமாளிக்கிறீங்க என்று கேட்டால்,

 » Read more about: இறுதி ஆசை  »

மரபுக் கவிதை

பாடு மனமே பாடு!

எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
    போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
    என்றும் மனச்சுமையைப் போக்கும் !

 » Read more about: பாடு மனமே பாடு!  »

வெண்பா

திருப்புகழைப் பாடு மனமே!

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்!
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர்!

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும்!

 » Read more about: திருப்புகழைப் பாடு மனமே!  »

வெண்பா

பாட்டுக்கோர் புலவன் பாரதி!

பாரதியார் போலிங்குப்  பாரினிலே  கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த  விற்பன்னன்! – ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத்  தங்கத் தமிழாலே!
பொங்கட்டும்   இன்பப் பொழில்!

போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு)  ஈடான என்றுமவன்!

 » Read more about: பாட்டுக்கோர் புலவன் பாரதி!  »

மரபுக் கவிதை

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!

செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!

கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும்  மோகன மே!

 » Read more about: இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!  »

மரபுக் கவிதை

என் க(வி)தை

நூற்றெண்பத்தொன்பது சீர் ஆசிரிய விருத்தம் (27×7 சீர்கள் ஓரடிக்கு) ×நான்கடி

பூவிழிப் பார்வை நோக்கினில் வீழ்ந்து
புதைந்திடு மகவை தனில்நானும்
பொற்றமிழ்ப் பெண்ணாள் பார்வையி லின்பம்
பொங்கிட வீழ்ந்து பொலிவுற்றேன்
புண்ணெனத் தாக்கும் உற்றவர் மற்றோர்
பொசுக்கியும் வாழ்வில் இடறாமல்
பொங்கியெ ழுந்தேன் என்முனே நின்ற
பொறுப்பையு ணர்ந்தே செயல்பட்டேன்
புண்மைகள் தீர நன்மைகள் சேரப்
போற்றிட லானேன் என்வாழ்வில்
பொற்பினைச் சேர்க்கும் கல்வியைக் கண்ணாய்ப்
பொங்கிடு மாவ லால்கற்றேன்
போதுமுன் கல்வி வறுமையைத் தீர்க்கப்
புறப்படு வாயே வேலைக்குப்
பூத்திடும் பசியைப் போக்கிடு மகனே
போபோ என்றார் என்னன்னை
போதெனு மிளமை இன்பங்கள் கழியப்
புரிந்தன வாழ்வின் உண்மைகள்
புரிந்தவப் போது கீழ்மைகள் மிஞ்சிப்
புகுந்தன பலவாய்த் துன்பங்கள்
புதைந்தவென் இன்ப நிலையினை மீட்கப்
பொருந்துவ தேதென வோர்ந்திட்டேன்
பொலிந்திட லுற்றே என்னுடைக் குடும்பம்
பூத்திட லொன்றே குறிக்கொண்டேன்
போதிய வுழைப்பும் போதிலா வுணவும்
புரிந்திடா வுணர்வும் வரப்பெற்றேன்
போற்றியுண் என்றார் உணவினை முன்னோர்
போற்றியும் உணவு கிடைக்கவிலை
போதுமோ என்றே ஏக்கமாய்க் கழியும்
புதிரென வயிறும் சோர்ந்ததுவே
போட்டிடும் உரமே பயிர்தனை வளர்க்கும்
பொசுங்கிடும் பற்றாக் குறையானால்
பூட்டிய அறையின் குப்பையாய் வயிறும்
பொசுக்கென நசுங்கி யுள்வாங்கப்
புதிரினை அவிழ்க்கும் வழிதனைக் கண்டேன்
புதுப்பய ணத்தைத் தொடர்ந்திட்டேன்
புதியவென் பயணம் புலர்ந்திடுங் கதிரின்
புத்துணர் வாக எழுந்ததனால்
பொசுக்கிய வறுமை உடனழிந் தொடப்
புனர்நிலை நோக்கி யேசென்றோம்
புயலெனச் சூழ்ந்த துன்பமாய்த் தன்னின்
பொறுப்பினை மறந்த என்தந்தை
புறப்பபட லானார் தனிமையில் வீழ்ந்தோம்
பொறுப்பினை நானே ஏற்றிட்டேன்
பொறுமையாய்ச் செய்யும் மின்பணி என்றன்
புழினை நாளும் கூட்டியதால்
பொசுங்கிய வாழ்வும் விரிகதி ரோனாய்ப்
புத்துணர் வெய்தி எழுந்ததுகாண்
பொறுப்புகள் தானே மனிதனின் நிலையைப்
புதுக்கிடும் கருவி?

 » Read more about: என் க(வி)தை  »

புதுக் கவிதை

இதழ்சிவப்பு

கண்டாங்கி சேலைகட்டி வாருங்கடி – வாருங்கடி
கவிராஜன் பேத்திபுகழ் பாடுங்கடி.
செண்டாடும் குழலழகி கணவரவர் – கணவரவர்
ஸ்ரீராமன் புகழைச்சொல்லி வாழ்த்துங்கடி.

மூவேந்தர் பரம்பரைகள் ஆண்டநிலம் –

 » Read more about: இதழ்சிவப்பு  »

வெண்பா

உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்!

 » Read more about: உள்ளத்திற் கஃதே உயர்வு!  »

புதுக் கவிதை

தாயன்பு!

வேதனை வலிகளுடன்
போறாடி எனை ஈன்றெடுத்தாய்!
பாலோடு தேன்கலந்தே
திகட்டாமல் ஊட்டுவித்தாய்!
தேரோடும் வீதியிலே
சலிக்காமல் நடக்க வத்தாய்!
பாரெல்லாம் போற்றிடவே
பண்பாளனாய் நீ வளர்த்தாய்!

 » Read more about: தாயன்பு!  »