புதுக் கவிதை

நீறு பூத்த நெருப்பு

ஏழை மாணவர்களுக்கு
எழுத்தறிவித்த இறைவன்!
இலவச மதிய உணவுத் திட்டத்தால்
எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல
அறிவுப்பசியையும் தந்தாயே…
தென்னாட்டுக் காந்தியே… காமராசா !
பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு
சுயமரியாதை இயக்கம் கொடுத்து
சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே
வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…!

 » Read more about: நீறு பூத்த நெருப்பு  »

மரபுக் கவிதை

மாத்திரையின் பிடியில் மன்பதை

மரத்தால் உயிர்வாழும் காலமாறி
        மாத்திரையால் வாழுகிற காலமாச்சே.
உரத்தால் விளைகின்ற பயிர்மாறி
        உருக்குலைந்த வயலாக உருவாச்சே.

உணவையே மருந்தாக உண்கையிலே
 

 » Read more about: மாத்திரையின் பிடியில் மன்பதை  »

மரபுக் கவிதை

எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு

எண்ணெய்யிலா தலையெனினும்
ஈர்ப்பு இருக்குது; நல்ல
இளமை சிரிக்குது; கண்கள்
பார்க்கத் துடிக்குது; முகமோ
பழக அழைக்குது; இதழ்கள்
பருக விரும்புது.

வறண்டுபோன முடியெனினும்
வனப்பைக் காட்டுது;

 » Read more about: எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு  »

மரபுக் கவிதை

அன்பின் அகலிகை

தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.

அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.

கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.

 » Read more about: அன்பின் அகலிகை  »

மரபுக் கவிதை

திருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே!

தங்கமகளாய் பிறந்தெமக்கு
        தரணியினைப் புரியவைத்தாய்,
சிங்கமென நடைபோட
        செகமதிலே பிறப்பெடுத்தாய்,
சங்கத்தமிழ் பயிலபாட
   

 » Read more about: திருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே!  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2017

தமிழ்த்தேன்

மலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே
மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில்
கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர்
கலைத்தேனே எனவேறு மொழிக லக்க
விலைத்தேனே ஆனாயே!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2017  »

By Admin, ago
ஆன்மீகம்

புனிதப் பயணம்

சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்
      சாரும் புவியின் முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்
      இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை –

 » Read more about: புனிதப் பயணம்  »

வெண்பா

அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது

காப்பு

பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்
சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்
உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட
உன்னருளை வேண்டுகி றேன்!

நூல்

அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்
வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே –

 » Read more about: அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது  »

மரபுக் கவிதை

பனிமலையில் பிறந்தவளோ?

பளபளக்கும் பாவையிவள்
பாதரசத்தில் குளித்தவளா?
படபடக்கும் விழிகளோடு
பனிமலையில் பிறந்தவளா?

கூந்தலில் மல்லிகையைக்
குடியிருக்க வைத்தவளே!
காந்தமானக் கண்களிலே
கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே!

பாவாடைத் தாவணியில்
பருவத்தைக் கட்டிவைத்து
பூவாசம் வீசுகின்ற
புதுப்பெண்ணும் நீதானோ?

 » Read more about: பனிமலையில் பிறந்தவளோ?  »