நூல்கள் அறிமுகம்

காட்டு நெறிஞ்சி

நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி.

முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”.

 » Read more about: காட்டு நெறிஞ்சி  »

புதுக் கவிதை

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

 » Read more about: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது  »

மரபுக் கவிதை

கறுப்புத் துணியைக் கழற்றி எறி!

வாய்மை வெல்லும் எனச்சொல்லி
….. வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
….. தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
…..

 » Read more about: கறுப்புத் துணியைக் கழற்றி எறி!  »

ஆன்மீகம்

குணசீலர்

சில மாதங்களுக்கு முன்பு மாற்றுமத நண்பருடன் கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய ஒருவர்மனிதர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியும், பிரபலமான சிலரிடம் இருந்த குணநலன்களைப் பற்றியும் பேசினார். அவர்தமது உரையில் அஹிம்சைக்கு மகாத்மா காந்தியையும்,

 » Read more about: குணசீலர்  »

வெண்பா

பாரதிக்குப் புகழ்மாலை

(கட்டளைக் கலித்துறை)

பாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே
பாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே
மாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன்
பாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே!          

 » Read more about: பாரதிக்குப் புகழ்மாலை  »

புதுக் கவிதை

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி ..!

சிவந்த வானமாய் அவன் கண்கள் ..!
சினேகிதத்தில் அவன் மடி தவலும் குயில்கள் ..!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிக்க சவால் விட்டவன் ..!

 » Read more about: அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!  »

மரபுக் கவிதை

செந்தமிழ்ச் சீர்கவி பாரதி

முண்டாசு கட்டிய பாரதியே செல்வ
……. பாரதியே முத்தமிழ் கொட்டிய
அண்ட சராசரம் எங்கிலுமே கவி
……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே!

சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச்
…….

 » Read more about: செந்தமிழ்ச் சீர்கவி பாரதி  »

மரபுக் கவிதை

பாரதி புகழ் வாழ்க

(கும்மி)

கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள்
கூடாரத் தைவிட்டு ஓடிட வே
துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின்
சொந்தக்கா ரக்கவி பாரதி யே!

வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி
வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே
தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத்
தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்!

 » Read more about: பாரதி புகழ் வாழ்க  »

மரபுக் கவிதை

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
—– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
—– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
—–

 » Read more about: தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி  »

தெரிந்ததும்-தெரியாததும்

வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

 » Read more about: வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!  »

By Admin, ago