ஹைக்கூ

துளிப்பா

  • சொல்லித்தந்தப் பாடம்
    பதியவில்லை மனதில்
    ஆசிரியை முகம் !
  • எங்கள் வீட்டு தோட்டத்தில்
    மலராத மொட்டு
    முதிர்கன்னி.
  • வீட்டுவாசல் வந்து
    முழம்போட்டுத் தருகிறாள்
    பூக்காரி
  • குறைந்த கூலி
    அவன் நிறைவடைகிறான்
    முதலாளி.
 » Read more about: துளிப்பா  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10

பாடல் – 10

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.

(பொருள்) :

கணக்காயர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9

பாடல் – 09

பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை.

(பொருள்) :

பெருமை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8

பாடல் – 08

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து
வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.

(பொருள்) :

தொல் அவையுள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7

பாடல் – 07

வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.

(பொருள்) :

வாளைமீன் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 8

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;

இராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 8  »

மரபுக் கவிதை

எழுகின்ற விடியல்

எழுகின்ற விடியலிலே இனிமை வேண்டும்
      ஏரியிலே தூயதண்ணீர் ஓட வேண்டும்
உழுகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும்
      உணவினிலே விடங்கலக்கா தர்மம் வேண்டும்
இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
 

 » Read more about: எழுகின்ற விடியல்  »

குடும்பம்

சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!

இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…

 » Read more about: சிறுவர்கள் உலகம்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6

பாடல் – 06

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் – அறவினையைக்
காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.

(பொருள்) :

பிறர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6  »