இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 22

பாடல் – 22

பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்
பற்றறா தோடும் அவாத்தேருந் – தெற்றெனப்
பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு.

(இ-ள்.) பற்று என்னும் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 22  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 21

பாடல் – 21

வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.

(இ-ள்.) வருவாயுள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 21  »

மரபுக் கவிதை

உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)

மண்மகள் மடியில் உழன்றாடி
மழைமேகத் துளியில் உடல்நீராடி
மக்கியத் தழைகளில் விருந்தோம்பி
மண்ணைப் பொன்னாக்கும் அபரஞ்சி

வளை உருளையாய் நீள்கொண்டு
தசை நார்களால் இடம் பெயரும்
இனம் நிலைக்க கிளைடெல்லம்
இடை துண்டாயின் மீள்கொள்ளும்

ஏர்முனை துணையாய் முன் உழுது
வேர்முனை சுவாசம் சீராக்கி
போரடிக்கும் களத்தை மிருதாக்கி
நீரோட்டம் பயத்திடும் மண்ணுயிரி

மரித்த மண்ணை உயிர்த்திடும் சஞ்சீவி
களிமண் குழைவை முறித்திடும் காஞ்சுகி
வேர்காய்ப்பை தணிக்கும் பஞ்சக்கிருதி
கார்பொழிவில் மண்ணரிப்பை தடுக்கும் பஞ்சமி

ஆண்பெண் அற்ற அர்த்தநாரீ
அகிலம் காக்கும் சுவீகாரி
அரை இருபக்கச் சமச்சீர் உடலி
அயனவன் படைப்பில் கொடையாளி

உழவனின் உண்மை உதவிக்கரம்
உக்கிரமாய் உயர்த்தும் மண்ணின் தரம்
உகமகள் ஊழியனாய் உச்சவரம்
உச்சிட்ட உண்டையாய் மண்புழுஉரம்

பாரதத்தின் மண்புழுக்கள் பலநூறு ரகம்
அறுவகையே பயன்தரும் மண்புழுஉரம்
முறையாய் காப்பின் மண்வளம் பெருகும்
மூன்று போகமும் மகசூல் அரும்பும்

வளைதசைப் புழுக்களைப் பெருக்கிடுவோம்
மண்புழுஉரங்கள் உற்பத்தி செய்திடுவோம்
பொன்பொருள் சந்ததிகளுக்கு சேர்ப்பதைவிட
மண்வளம் குன்றாது வளம் காத்திடுவோம்!

 » Read more about: உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)  »

சிறுகதை

யார் அந்த நிலவு?

பக்கத்து வீட்டு பரிமளம் வந்து அந்த விஷயத்தைச் சொன்னதிலிருந்து ரேகாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை.

“நீ என்னப்பா சொல்றே? சரியா பார்த்தியா?” என்று மீண்டும் நம்பமுடியாதவளாய்க் கேட்டாள் ரேரகா.

“பஜார்ல காய் கறி வாங்கப் போயிருந்தேம்பா.

 » Read more about: யார் அந்த நிலவு?  »

புதுக் கவிதை

விதைக்க மறந்த மனித நேயம்

1.
எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு
… இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா
சந்தையென கல்வியாகி திருட்டுக் கொள்ளை
… சாதிமத சண்டைகளும் மனிதம் கொல்ல
எந்ததிசை போகிறது மக்கள் கூட்டம்

 » Read more about: விதைக்க மறந்த மனித நேயம்  »

மரபுக் கவிதை

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
      அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
      பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
 

 » Read more about: தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20

பாடல் – 20

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன.

(இ-ள்.) பிறன்கண் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர்.

(இ-ள்.) கொல் யானைக்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18

பாடல் – 18

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.

(இ-ள்.) ஒருதலையான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18  »