கவிதை

பெண் மனம்

பிரசவத்தின் வேதனைகள் அமுதென்று சுவைகாணும் கற்பதனை பழி சொன்னால் அவ்வலியில் உயிர் துறந்து நடை பிணமாய்  வலம் வந்து வெந்தாலும் பெண் பொன்னென்று பழி மறவாது சமர் செய்து வாகை சூடும் வலிமை கொண்ட பெண் மனது!

கவிதை

மகளிர் விதைத்திடும் மாண்பு

மகளிர் - திரு மணத்தின் பெயரால் வேறில்லம் சென்றால் காய்த்துக் கனியாவாள் கணவனுடைய கண்ணின் மணியாவாள் இல்லற இலக்கணத்தின் அணியாவாள்.

கவிதை

மகளிர் விதைத்திடும் மாண்பு

மாதர் தினமென்று போராடி யுகம்தாண்டி கைபெற்றும் இக்கணமும் புதுமைகள் செய்திடும் பதுமையாய் காணும் இன்னும் சில கண்கள் மீது தீயை மூட்ட ஆளேயில்லை!

கவிதை

என் மூக்குத்தி தேவதைக்கு …

தன்னை ஒரு வானமாகத் திறந்து எண்ணங்களை நட்சத்திரங்களாக விதைத்து அந்த நிலாவைக் குடியேற்றும் அன்பு நடவடிக்கைதான் அவனின் கடிதம் '' என் மூக்குத்தி தேவதைக்கு ...

கவிதை

மனசுக்குள் சுமந்திருப்பேன்

நேசமுடன் ஒரு வார்த்தை நேற்றே நீ சொல்லியிருந்தால் வஞ்சிக் கொடியுன்னை வாரியணைத்திருப்பேன்.. பாசமுடன் ஒரு பார்வை பார்த்துச் சொல்லியிருந்தால் பைங்கிளியே உன்னை பூப்போல தாங்கியிருப்பேன்..

கவிதை

மோகத்தை அழைக்கவா

தோகைமயில் நடந்தால் போதும் தொப்புள்குழி தெரியவா வேண்டும் ? வாகைப்பூ மலர்ந்தால் போதும் வயிறுமுழுதும் தெரியவா வேண்டும் ?

கவிதை

காலம் வரும்வரை காத்திருப்பாய் …

கன்னத்து குழியழகு கார்மேக முடியழகு வண்ணத்தில் நீ இருக்காய் வானழகு வடிவமடி. எண்ணத்தில் நீ இருக்காய் ஜென்மத்தில் நீ வாழ்வாய்! வில்லழகு நெற்றியிலே பொட்டழகு மின்னுதடி வட்டமிட்ட உன்முகம் பூ அழகு புன்னகையும் எனைக் கிரங்கச் செய்யுதடி!

கவிதை

நெருடல்

மனது நம்மை மயக்கும் மாயை; தனது என்று தாவும் பாவை. பிணக்கு கொண்டு பிதற்றும் சாது; கணக்கு உண்டு காணும் போது. நினைப்பதை அடைய நீண்டு வளரும்; வினைப்பயன் கண்டு வெம்பித் தளரும். அணையாய் நின்று அறமாய் வாழும்; கனையாய் வந்த கவர்ச்சியில் வீழும்.