Welcome Tamilnenjam

வணக்கம்!

ஆணவம் தந்த தண்டனை

உடல் அழகு என்பது நிரந்தர மல்ல. அதை நம்பி மன அழகைப் புறக்கணிப்பவர்கள் வாழ்வில் நிம்மதியாக இருப்பதில்லை. சேற்றில் விழுந்து புழுக்களாய் நெளிய வேண்டிய நிலைதான் ஏற்படும். ஆணவக்காரியான தன் தோழி யின் வாழ்வில் ஏற்பட்ட சோக நிகழ்ச்சியை துயரத்துடன் விவரிக்கிறார் ஒரு சகோதரி: எங்கள் வீட்டிற்கு எதிர்த்த வீட்டில் இருந்தவள்தான் ராணி. என் தங்கையின் தோழி. மிகவும் அழகி. ஆணவம் பிடித்தவள். தனக்கு வரும் கணவன் அழகனாக, தனக்குப்…

தமிழர் கூட்டம்

உலகம் எங்கும் படர்ந்த கூட்டம் தமிழர் கூட்டம் - என்றும் ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும் புனிதக் கூட்டம்! அண்டை, மேலை நாடு தோறும் உழைக்கும் கூட்டம்! - என்றும் அன்பு, நேர்மை, வாய்மை போற்றி அணைக்கும் கூட்டம்! பண்டை அறநூல் நிறைவாய்த் தந்த மொழியின் கூட்டம்! - என்றும் பசுமை யான இலக்கியங்கள் வழங்கும் கூட்டம்!

அம்மா என்பது தமிழ் வார்த்தை

" அம்மா என்பது தமிழ் வார்த்தை. அது தான் உலகத்தின் முதல் வார்த்தை " என்று ஒரு கவிஞன் பாடினான். அந்த வார்த்தையின் பெருமைதான் என்னே! பெற்ற தாயை அழைக்கும்போது " அம்மா " வருகிறது. உற்ற மாதரை அழைக்கும்போது அம்மா வருகிறது. தெய்வமும் அம்மா என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு அகத்தில் மகிழ்ச்சியையும் புறத்தில் சிறப்பினையும் தரவல்லது. (அம்+மா) அம்மா அழகும் பெருமையும் உடையது அம்மா. நல்லக்கண்ணு என்பவன் ஒழுக்க…

அறிவோமே

பொன்னும் பொருளும் நிறைந்தாலும் போற்றும் அருளால் சிறந்தாலும் மின்னும் கல்வி இல்லாரை மேன்மை யாக எண்ணாரே! எண்ணும் எழுத்தும் கண்ணாகும் ஏனைக் கலைகள் பொன்னாகும்! மண்ணில் நன்றாய் வாழ்தற்கு வளரும் கல்வி பெறுவோமே! கல்வி அழகே அழகாகும் கற்க கற்க சுவையாகும்! செல்வத் துள்ளே அழியாத செல்வம் அதுவே! அறிவோமே!

சுடர்க தமிழ்நெஞ்சம்

காரைக் காலின் அருகினிலே கமழும் ‘நிரவி’ நல்லூரில், ஊரைக் காக்கும் நல்லோர்தம் உண்மை நெறியைக் காத்ததுவாம்! ஏரைப் போன்றே உழுதுலகில் இன்பப் பயிரை விளைத்ததுவாம்! தேரை நிகர்த்த பொலிவோடு திகழும் இனிய தமிழ்நெஞ்சம்! பேரீச் சம்போல் சுவைகூட்டி, பெரியோர் சொன்ன நெறிகாட்டி, மாரி பொழியும் குளிராக மனமே சிலிர்க்கக் கவிதீட்டி, பாரி வள்ளல் கொடைபோல வாரித் தமிழைப் படைத்திடுமே! பாரீச் நகரில் பைந்தமிழைப் பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்! புல்லும் பூண்டும்…

உறவு வாசம்

ஆல்பத்தில் சிரிக்கும் உறவு முகங்கள் ஆபத்தில் உதவிகேட்க அவசரமாய் இறுகும் மருந்து தடவி ஆறாத காயம் தந்தையின் கண்ணீர் துளிபட காணாமல் போகும் ஆலய சிலை முகத்தில் அகப்படாத கருணை அடுப்படியில் வேகும் அன்னையின் கண்களில் பள்ளி ஆசிரியர் பயிற்றுவிக்காதது அனுபவ ஆசானால் ஆழமாய் பதியும் பே சேனல் தராத பிரமிப்பை வழங்கும் பால்நிலா பிடிக்க பனித்துளி விரித்த பசிய புல்வெளி

நட்பு வேண்டும்

மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு... குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு... காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு... வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு... முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு... நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை... தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்... துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்... மகிழ்ச்சியின்…

தமிழ்நெஞ்சம்

தமிழர் நெஞ்சம் தமிழ்நெஞ்சம் - அது தமிழர் வாழ்வில் கமழ்நெஞ்சம்; இமயம் போலும் புகழ்நெஞ்சம் - அது என்றும் தமிழர் மகிழ்நெஞ்சம். வீர வித்தை நடும்நெஞ்சம் - அது வெற்றி விளைவைத் தொடும்நெஞ்சம் ஈர அன்பைப் பொழிநெஞ்சம் - பண்பு ஏந்தி நடக்கும் வழிநெஞ்சம். மானம் காக்கும் அறநெஞ்சம் - உலக மனத்தைக் கவரும் அறநெஞ்சம் ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் - நலம் இயற்றும் கடமை கெடாநெஞ்சம். நீதி வகுத்த…

வெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம்

அந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுவத மாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதகாலமாகவே இருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை எட்டரை மணி அளவில் இரவு இருட்டு இலேசாக விளகிப் பகலிருட்டாகும். அதற்குத்தான் இங்கே விடியல் என்று பெயர். அதைக்கூட டெலிவிஷன் அறிக்கையை வைத்துத்தான் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த ‘விடியல்’ போந்துவாஸ் தொடர் வண்டி நிலையம். ஒரு பாரிஸ் புற நகருக்குரிய இயந்திரச்…

அன்பின் பரிசு

புதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள். அன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள். உள்ளே... பிரபலமானவர்கள் நடித்துத் திரையிடப்பட்டிருக்கும் சினிமாவின் இரவு காட்சிக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் இரண்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அனுப்பியவர் யார் என்றும் தெரியவில்லை. அனுப்பியவர் யாராக…