கவிதை

வாய்க்கா கரையோரம்

வாய்க்கா கரையோரம்
வரப்பு மேட்டோரம்
ஒத்தமாட்டு வண்டியிலே
ஒத்தையடி பாதையிலே
ஒண்டியா போகையிலே
ஓரம் போறம் பாக்கையிலே
மச்சான நினக்கியிலே
தடமும் தெரியல நேரமும் தெரியல!

 » Read more about: வாய்க்கா கரையோரம்  »

கவிதை

கனவினிலே…

(அனுபல்லவி)

கண்ணே… கண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…
கனவின் நாயகன் நான்தானா…
காதல் கிளியே சொல்லிவிடு…

பெண்ணே… பெண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…

 » Read more about: கனவினிலே…  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 7

கம்பராமாயண அனைத்துப் பாடல்களிலும் விரவிக் கிடக்கிறது. இனிய ஓசை நயமிக்க கம்பனின் கவிதை வரிகள் யுகம் யுகமாய் நிலைத்து நிற்கும் ஆற்றல் மிக்கவை.

கம்பனின் கவிதை வரிகளில் குவிந்துள்ள சொற்கள் களஞ்சியமாய் திகழ்கின்றன.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 7  »

புதுக் கவிதை

மரபும் மாற்றமும்

ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித்
தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில்
மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ்
சாற்றும் மரபுக்குண்டோ சா?

வாழையடி வாழை நின்று
வண்ணத் தமிழாடை கொண்டு
வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட
வரம்புகளை மீறிவிட்டா லிழிவு.

 » Read more about: மரபும் மாற்றமும்  »

கவிதை

பாரத மாதாவின் எழுச்சி மகன்!

தாயின் கருவில் தாயகம் காக்க..
உதித்து எழுந்த தலைமகனே!
தொப்புள் கொடி அறுத்து
தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று
தாயின் கண்ணீர் சொன்னது
புனித பூமியில் உதித்து மேலும்
புனிதம் சேர்த்த புனிதன்…

 » Read more about: பாரத மாதாவின் எழுச்சி மகன்!  »

இலக்கணம்-இலக்கியம்

காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,

 » Read more about: காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்  »

புதுக் கவிதை

நீறு பூத்த நெருப்பு

ஏழை மாணவர்களுக்கு
எழுத்தறிவித்த இறைவன்!
இலவச மதிய உணவுத் திட்டத்தால்
எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல
அறிவுப்பசியையும் தந்தாயே…
தென்னாட்டுக் காந்தியே… காமராசா !
பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு
சுயமரியாதை இயக்கம் கொடுத்து
சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே
வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…!

 » Read more about: நீறு பூத்த நெருப்பு  »

மரபுக் கவிதை

மாத்திரையின் பிடியில் மன்பதை

மரத்தால் உயிர்வாழும் காலமாறி
        மாத்திரையால் வாழுகிற காலமாச்சே.
உரத்தால் விளைகின்ற பயிர்மாறி
        உருக்குலைந்த வயலாக உருவாச்சே.

உணவையே மருந்தாக உண்கையிலே
 

 » Read more about: மாத்திரையின் பிடியில் மன்பதை  »

மரபுக் கவிதை

எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு

எண்ணெய்யிலா தலையெனினும்
ஈர்ப்பு இருக்குது; நல்ல
இளமை சிரிக்குது; கண்கள்
பார்க்கத் துடிக்குது; முகமோ
பழக அழைக்குது; இதழ்கள்
பருக விரும்புது.

வறண்டுபோன முடியெனினும்
வனப்பைக் காட்டுது;

 » Read more about: எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு  »

மரபுக் கவிதை

அன்பின் அகலிகை

தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.

அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.

கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.

 » Read more about: அன்பின் அகலிகை  »