இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 70

பாடல் – 70

காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் – தீதிகந்
தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வ ரெனப்படு வார்.

(இ-ள்.) காவோடு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 70  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 69

பாடல் – 69

அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் – நொந்து
நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும்
பெறுமா றரிய பொருள்.

(இ-ள்.) அரும்தொழில் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 69  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 68

பாடல் – 68

இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.

(இ-ள்.) இல்லார்க்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 68  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 67

பாடல் – 67

எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும்
செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி – மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்த தில்.

(இ-ள்.) எதிர் நிற்கும் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 67  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 66

பாடல் – 66

கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்
சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் – பற்றிய
கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்
சால்போடு பட்ட தில.

(இ-ள்.) கொழுநனை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 66  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 65

பாடல் – 65

அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற
விட்டகல் கில்லாத வேட்கையும் – கட்டிய
மெயந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்
தந்நெய்யில் தாம்பொரியு மாறு.

(இ-ள்.) அலைகடலின் அலைகின்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 65  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 64

பாடல் – 64

நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் – தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.

(இ-ள்.) நல் விருந்து –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 64  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 63

பாடல் – 63

நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும்
ஈர்வளையை யில்லத் திருத்தலும் – சீர்பயவாத்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.

(இ-ள்.) நோ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 63  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 62

பாடல் – 62

 நன்றிப் பயன் தூக்கா நாணிலியும் சான்றோர்முன்
மன்றில் கொடும்பா டுரைப்பானும் – நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 62  »